கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Tuesday, June 28, 2011

செய்திகள்






இறந்து போன மனைவியுடன் தூங்கும் கணவர்June 26, 2011

வியட்நாமைச் சோ்ந்த Le Van என்பவர் அவருடைய மனைவி இறந்த பிறகு மனைவியின் கல்லறை மேல் தூங்கி வந்தார். 55 வயது மதிக்கதக்க Le Van 2003 ம் ஆண்டு அவருடைய மனைவியை இழந்தார்.

2004 ம் ஆண்டு வரை மனைவியின் கல்லறையில் தூங்கி வந்தார். இரவில் மனைவி இல்லாமல் அவரால் தூங்க முடியவில்லை மற்றும் கல்லறைக்கு வெளியே காற்றும் மழையும் அதிகமாக இருந்த காரணத்தால், அவர் கல்லறையில் சுரங்கம் அமைக்க முடிவு செய்தார்.

பின்பு அவருடைய மனைவியை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து காகிதம் மற்றும் களிமண்வார்ப்புகளை வைத்து போர்த்தி முகத்தின் மேல் ஒரு முகமுடி போட்டு மூடி வைத்து வீட்டில் தூங்க வந்துள்ளார்

செய்திகள்


முகத்தில் பாதி முடியால் மூடப்பட்ட சிறுவன்
June 26, 2011

வயது எட்டு. இவர் ஒரு அபூர்வமான பிரச்சினையால் பாதிக்கப்படவர்.

இவரின் முகத்தில் ஒரு பகுதியில் கண்ணையும் மூடியவாறு கண்ணப் பகுதிவரை முடி வளருவதுதான் இவருக்கு இருந்த பிரச்சினை.

பிறப்பு முதலே இது காணப்பட்டது. நாள் செல்லச் செல்ல பிரச்சினையும் முற்றியது. பாடசாலையில் இவரை சக மாணவர்கள் கேலி செய்யாத நாட்களே இல்லை.பல பட்டப் பெயர்களும் உள்ளன.


இந்தச் சிறுவன் நான்கு வயதாக இருக்கும் போதே தந்தை மரணமாகி விட்டார். தாய் ஒரு மனநோயாளி. பாட்டன், பாட்டி தான் இவரைப் பராமரித்து வருகின்றனர்.

இவரின் நிலைமை கேள்வியுற்று அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹுவாங் என்ற பெண் மனநோய் மருத்துவ நிபுணர் இவருக்கு உதவ முன்வந்துள்ளார்.

இவரின் முயற்சியின் பலனாக ஜிலின் மாகாண பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை ஆஸ்பத்திரியில் இவருக்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இவரின் நிலைமையில் மாற்றங்கள் ஏற்படும் என்று டாக்டர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்

செய்திகள்


முழு மூச்சுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!' : ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் பத்மினி: என் அப்பா, வங்கி அதிகாரி; அம்மா, பள்ளி ஆசிரியர். படிப்பிற்காக, சொந்த ஊரான சேலத்தில் இருந்து, சென்னைக்கு வந்தேன். பி.காம்., முடித்தவுடன் திருமணம். கணவர்,போக்குவரத்து துறையில் பணிபுரிகிறார். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.குழந்தைகள் பள்ளி சென்ற பின், அதிக நேரம் கிடைத்தது. தொழில் துறை ஏதேனும் ஒன்றில் சாதிக்க விரும்பினேன். என் ஆசையை புரிந்து கொண்ட கணவர் உற்சாகம் அளிக்க, சார்ட்டட் அக்கவுன்ட் கோர்சை முடித்தேன். பின், பல நிறுவனங்களின் கணக்குகளை நிர்வகித்தேன்.ஒரு நாள், என் உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, ஏவியேஷன் துறை சவாலாக இருக்கும் என்பது தெரிந்தது. சென்னையில், நான்கு நிறுவனங்கள் மட்டுமே இத்தொழில் செய்து வருவதால், இந்த தொழிலில் அவருடன் இணைந்து செயல்பட திட்டமிட்டேன்.துவக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம். ஓரு கட்டத்தில், வாங்கிய ஹெலிகாப்டர்களை விற்று விடலாம் என்ற நிலை வந்தது. ஆனால், வேறு சில தொழில்களின் மூலம் வந்த வருமானத்தையெல்லாம், இதில் முதலீடு செய்தேன்.தற்போது, என் நிறுவனத்தில், ஐந்து ஹெலிகாப்டர்கள் உள்ளன. இன்னும், குட்டி விமானங்கள் வாங்குவதுடன், புதுச்சேரியில் ஒரு ஹெலிபேட் அமைக்கும் திட்டமும் உள்ளது.எங்கள் ஹெலிபேடை, வெளிநாட்டவர்கள் மட்டுமின்றி, பிசினஸ் மேன்கள், வி.ஐ.பி.,க்கள் என பலரும், இந்தியாவின் பல நகரங்களுக்கு சென்று வரவும், சினிமா மற்றும் விளம்பர படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.இந்த நிறுவனத்தின் முலம், ஆண்டிற்கு மூன்று கோடி வரை வருமானம் வருகிறது. எவ்வளவு கோடி முதலீட்டில் தொழில் துவங்கினாலும், முழு மூச்சோடு, கடுமையாக உழைத்தால், தரையிலும் சரி, வானத்திலும் சரி, பெண்கள் கொடிக்கட்டிப் பறக்கலாம்.

Friday, June 24, 2011

செய்திகள்

வேதனை தான் வாழ்க்கையானது என்றாலும் சாதனையே லட்சியம்: இந்த ஏழை உள்ளம் படிக்க உதவுங்கள்




ராமநாதபுரம்: தந்தையின் மரணம்; தாயாரால் வேலை செய்ய முடியாத நிலை. தாங்க முடியாத தலைவலி. இத்தனையையும் தாங்கி, வாழ்வில் முன்னேற துடிக்கும் இவரது கல்விக்கு தடையாக வந்து நிற்கிறது ஏழ்மை. இதையெல்லாம் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார், பத்தாம் வகுப்பில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாரிச்செல்வம்.



ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டிணம் அருகே உள்ள களிமண்குண்டு பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் மாரிச்செல்வம். முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலை பள்ளியில் பயின்ற, இவர் 10ம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண் பெற்று ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். மாரிச்செல்வம், அக்கா முருகவள்ளி வீட்டில் தங்கி இருந்து முத்துப்பேட்டையில் படித்து வந்தார். கடந்த நவம்பரில் முனியசாமி மூளைகட்டி நோயால் இறந்தார். கடந்த ஏப்.,4 ல் முருகவள்ளியும் இறந்தார். அடுத்தநாள் கணக்கு பரீட்சை. இதயம் முழுக்க சோகத்துடன், ஆனால் மனஉறுதியுடன், வேறுவழி இல்லாமல் தேர்வு எழுதிவிட்டு, அக்காவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். அந்த கணித தேர்வில் மாரிச்செல்வம் பெற்ற மதிப்பெண் 100 க்கு 100.



தற்போது அதே பள்ளியில் பிளஸ் 1 பயிலும் இவர் கூறியதாவது: எனக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. டாக்டரிடம் காண்பித்தபோது, இருதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் ரத்த குழாய் சுருங்கியுள்ளது. தற்போது ஆப்பரேஷன் செய்ய முடியாது. 22 வயதுக்கு பிறகு செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டார். அம்மாவோ அடிக்கடி கால்வலியால் அவதிப்படுகிறார். குறித்த நேரத்தில் பஸ் இல்லாததால், வேலாயுதபுரத்திலிருந்து பள்ளிக்கு ஆம்னி வேனில் செல்ல மாதம் 400 ரூபாய் செலவாகிறது. அதை கூட செலுத்த முடியாமல் அவதிப்படுகிறேன். தற்போது சீருடைக்கு 3,000 ரூபாய் செலவாகியுள்ளது. என்னுடைய அக்கா யாரும் படிக்கவில்லை. எனவே, நான் நன்றாக படித்து அவர்களுக்கு உதவுவேன். படிப்பு செலவிற்கு பணமின்றி தவிக்கிறேன், என்றார். உதவி செய்ய விரும்புவோர் 91592 43229ல் தொடர்பு கொள்ளலாம்.

செய்திகள்

டீஸல்,கேஸ், கெரசின் விலை உயர்வு: ஜெயலலிதா கடும் கண்டனம்


சென்னை: டீஸல், கேஸ், கெரசின் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

மத்திய அரசு டீசலுக்கான விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாயும் மற்றும் மண்எண்ணெய் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் நள்ளிரவு முதல் உயர்த்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி விட்டதால், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது உயர்த்தி வருகின்றன. பெட்ரோல் விலை ஏற்றம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீருந்துகள் (கார்) ஆகியவைகளைப் பயன்படுத்தும் நடுத்தர வர்க்க மக்களை பாதிக்கிறது.

ஆனால், டீசல் விலை உயர்வு, ஏழை, எளியோர் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதிக்கும். சரக்குகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பெரும்பாலும் தரை வழியாக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. டீசல் விலை ஏற்றத்தினால் சரக்கு போக்குவரத்திற்கான கட்டணம் பல மடங்கு உயரும்.

இது, அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக, ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதித்து விடும். விலைவாசி உயர்வினால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த டீசல் விலை உயர்வினால் அனைத்துப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் உயர்ந்து விடும்.

மக்களின் வருவாய் உயராமல் விலை மட்டும் உயர்ந்தால் எப்படி?

மக்களின் வருவாய் ஒரே அளவில் இருக்கும் நிலையில், இது போன்ற டீசல் விலை உயர்வால் ஏற்படும் விலைவாசி உயர்வை மக்களால் எப்படி எதிர் கொள்ள இயலும்? அனைத்து தரப்பு மக்களும் எரிபொருளாக பயன்படுத்தும் சமையல் எரிவாயுவும் சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வளவு அதிகமான விலை உயர்வை மக்களால் தாங்க இயலாது. ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மண்எண்ணெய் விலையும் லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாகும். ஒட்டு மொத்த விலைவாசி உயர்வு உள்ள இந்த நிலையில், இந்த மண்எண்ணெய் விலை ஏற்றம் ஏழை, எளிய மக்களை மிகவும் வாட்டி வதைக்கும்.

மதிப்புக் கூட்டு வரியை குறைக்க முடியாது

எனவே, டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணெய்க்கான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன். டீசல் மீதான கலால் வரி 2 சதவீதம், கச்சா எண்ணெய் மீதான சுங்க வரி 5 சதவீதம் என சொற்ப அளவில் கலால் மற்றும் சுங்க வரி குறைக்கப்பட்டு, அதைப் போன்று மாநில அரசால் விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு, மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக அதிகம் செலவிடுவது மாநில அரசுதான். மாநில அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது மதிப்பு கூட்டு வரி மட்டும்தான். எனவே, டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை மிக அதிகமாக உயர்த்தியுள்ள மத்திய அரசுக்கு, வரியைக் குறைக்கும்படி மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்

Thursday, June 23, 2011

song

செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகரிக்கும் கொலைகள்- மக்கள் பீதி
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

முன்விரோதம், கட்டபஞ்சாயத்து, கள்ளக் காதல், தொழில் போட்டி என பல்வேறு காரணங்களால் கொலைகள் அரங்கேறுகின்றன. பழிக்கு பழி, சாதி உணர்வு மக்கள் மனதில் வேறுன்றி வி்ட்டதால் கொலையாளிகள் சிறைக்கு சென்று விட்டு ஜாமீனில் வரும் வரை காத்திருந்து பகையை தீர்த்து கொள்கின்றனர்.

ஒருவர் கொல்லப்பட்டால், அவரைக் கொன்றவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். இது இப்படியே தொடர் கதையாக மாறுவதால் கொலைகளுக்குப் பஞ்சமே இல்லாத நிலை ஏற்படுகிறது.

ஓசிக்கு பீடி தர மறுத்தவர் வெட்டிக் கொலை, கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் கொலை என அற்ப காரணங்களுக்காக கூட கொலை செய்யப்படுகிறார்கள்.

கடந்த இரு மாதத்தில் மட்டும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. மே 1ம் தேதி தூத்துக்குடி மாவட்ட திமுக துணை செயலாளர் ஏசி அருணா வாக்கிங் செல்லும்போது வெட்டி கொல்லப்பட்டார்.

கடந்த 9ம் தேதி கயத்தாறு அருகே செட்டிக்குறிச்சியில் அண்ணியுடன் கள்ள தொடர்பு வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டம்பாறை அருகே உள்ள செட்டியூரில் நடத்தை சந்தேகத்தில் பிரேமா என்பவரின் தலையில் கல்லை போட்டு அவரது கணவரே கொலை செய்தார்.

2ம் தேதி பாளையங்கோட்டை ரகுமத்நகரை சேர்ந்த ராமையா என்பவர் தாழையுத்தில் குடிபோதையில் ஒரு வீட்டு முன் படுத்திருந்தபோது கழுத்தில் மிதித்து கொல்லப்பட்டார்.

4ம் தேதி தாழையுத்து சாலுன் கடையில் வைத்து பாபு என்பவர் முன்விரோதம் காரணமாக கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். அதே நாளில் சங்கரன்கோவில் எழில் நகரை சேர்ந்த செல்லையா என்பவரது மனைவி அய்யம்மாள் நகைக்காக படுகொலை செய்யப்பட்டார்.

5ம் தேதி கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளத்தில் ஆட்டோ டிரைவர் மாரியப்பன் அடித்து கொல்லப்பட்டார். நெல்லை ரயில் நிலையத்தில் அல்வா வியாபாரம் செய்த பிச்சையா என்பவர் தொழில் போட்டி காரணமாக அருகன்குளத்தில் வைத்து வெட்டி சாய்க்கப்பட்டார்.

13ம் தேதி மானூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது கள்ளகாதலியால் தலையில் கல்லை தூக்கி போட்டு கொல்லப்பட்டார்.

வீரவநல்லூரில் நேற்று முன்தினம் இரவு திமுக நகர செயலாளர் ரத்தினவேல் பாண்டியன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தை பொறுத்த வரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு அதிக கொலை நடந்துள்ளதாக புளளி விபரங்கள் கூறுகின்றன.

கொலைகளைத் தடுக்கவும் குற்றச் செயல்களைக் குறைக்கவும் காவல்துறை இரும்புக் கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Wednesday, June 22, 2011

செய்தி

விமானி உடல் நலம் பாதிப்பு: ப.சிதம்பரம் ஹெலிகாப்டர் தரையிறக்கம்
ஸ்ரீநகர்: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயணித்த ஹெலிகாப்டரை ஓட்டிய விமானிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வேறு ஹெலிகாப்டரில் ப.சிதம்பரம் பின்னர் பயணித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ப.சிதம்பரம். இன்று அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில், பஹல்காம் என்ற இடத்திலிருந்து குரஸ் என்ற இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லத் திட்டமிட்டு பயணித்தார்.

அப்போது ஹெலிகாப்டர் தான் செல்ல வேண்டிய பாதைக்குப் பதில் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்ததால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டு அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பாதையில் மாற்றம் ஏற்பட்டதால், அமைச்சரின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டர் மாற்றப்பட்டது. வேறு ஹெலிகாப்டர் மூலம் அமைச்சர் புறப்பட்டுச் சென்றார் என்றனர்

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்-மீன்பிடிப்பு ஸ்தம்பிப்பு
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 23 ராமேஸ்வரம் மீனவர்களை மீட்கக் கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று காலைவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

திங்கள்கிழமை இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேரையும், அவர்களது 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்று விட்டனர். அவர்களை தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் மன்னார் கோர்ட்டில் ஆஐர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை தற்போது அனுராதபுரம் சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இன்று அந்தப் போராட்டம் தொடங்கியது. இதனால் கிட்டத்தட்ட 1000 விசைப்படகுகளும் மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கு நிரந்தர முடிவு கட்ட மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மீனவர்கள் கோருகின்றனர்.

கோட்டைப்பட்டனத்திலும் போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாக கோட்டைப்பட்டனம் பகுதியிலும் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.

Tuesday, June 21, 2011

Wednesday, June 15, 2011

எனக்கு பிடித்ததளங்கள்

தமிழில் போட்டோசாப்,வின்மணி,சுதந்திர இலவச மென்பொருள்,தமிழ்தோட்டம்,தமிழில் கம்ப்யூட்டர் பாடம்.

anaivarukkum vanakkam

அனைவருக்கும் வணக்கம்