கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Wednesday, June 22, 2011

செய்தி

விமானி உடல் நலம் பாதிப்பு: ப.சிதம்பரம் ஹெலிகாப்டர் தரையிறக்கம்
ஸ்ரீநகர்: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயணித்த ஹெலிகாப்டரை ஓட்டிய விமானிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வேறு ஹெலிகாப்டரில் ப.சிதம்பரம் பின்னர் பயணித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ப.சிதம்பரம். இன்று அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில், பஹல்காம் என்ற இடத்திலிருந்து குரஸ் என்ற இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லத் திட்டமிட்டு பயணித்தார்.

அப்போது ஹெலிகாப்டர் தான் செல்ல வேண்டிய பாதைக்குப் பதில் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்ததால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டு அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பாதையில் மாற்றம் ஏற்பட்டதால், அமைச்சரின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டர் மாற்றப்பட்டது. வேறு ஹெலிகாப்டர் மூலம் அமைச்சர் புறப்பட்டுச் சென்றார் என்றனர்

No comments:

Post a Comment