கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Saturday, September 10, 2011

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி ம‌க‌ளிருக்கு ஒதுக்க‌ப்ப‌ட்டால் எதிர்த்து போராட்ட‌ம்! கீழை ஜ‌மீல் அறிக்கை !


கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி ம‌க‌ளிருக்கு ஒதுக்க‌ த‌மிழ‌க‌ அர‌சு முடிவு செய்துள்ள‌தாக‌ உறுதிப்ப‌டுத்த‌ப‌டாத‌ த‌க‌வ‌ல்க‌ள் வெளியாகி வ‌ருகின்ற‌ன.

இது குறித்து இந்திய‌ த‌வ்ஹீத் ஜ‌மாத்தின் முக்கிய‌ பிர‌முக‌ர் கீழ‌க்க‌ரை ஜ‌மீல் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில் ,

இது வரை முறையான அரசு அறிவிப்பு எதுவும் வரவில்லை.தமிழக அரசிடம் அப்படி ஒரு திட்டம் இருக்குமானால் உடனடியாக அதை கைவிட வேண்டும்.மேலும் அதிகமான முஸ்லிம்களை கொண்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்குவது நல்லதல்ல. இது கண்டனத்திற்குரியது. அரசியல் அனுபவம் இல்லாத பெண்களை தலைவர் பொறுப்புக்கு கீழக்கரை போன்ற ஊர்களில் கொண்டு வந்தால் ஊரின் சுகாதாரம் மற்றும் இதர பிரச்னைகள் இன்னும் மோசமாகும். இவர்களின் கு0pடும்பத்தார் கையில் நிர்வாகம் மறைமுக செல்வதுடன் நகராட்சி நிர்வாகம் சீர் கெடும்.

கீழக்கரை நகராட்சி மகளிருக்கு ஒதுக்கப்படும் என்ற அரசு அறிவிப்பு வெளி வருமானால் இதற்கு எதிராக கட்சி, அமைப்புகள் பாகுபாடின்றி கீழக்கரை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடுவோம்.

Thursday, September 8, 2011

ஏர் இந்தியாவுக்காகவிமானங்களை வாடகைக்கு எடுத்ததில் ரூ. 1700 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது- சிஏஜி


ஏர் இந்தியாவுக்காகவிமானங்களை வாடகைக்கு எடுத்ததில் ரூ. 1700 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது- சிஏஜிடெல்லி: ஏர் இந்தியா நிறுவன மறு சீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் மிகவும் தவறான வகையில் கையாளப்பட்டதால் பல ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானங்களை வாடகைக்கு எடுத்ததில் மட்டும் ரூ. 1700 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் புதிய பிரச்சினையாக இந்த ஏர் இந்தியா விவகாரம் உருவெடுக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏர் இந்தியா தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் சிவில் விமானப் போக்குவரத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளது சிஏஜி.

விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தவறான நடவடிக்கைகள் காரணமாக பல கோடி ரூபாய்களை வீணடித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

- ஏர்பஸ் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் தவறானதாக அமைந்ததால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டது.

- ஏர் இந்தியா நிறுவனம் ரூ. 200 கோடி கடன் வாங்கியிருந்தது. ஆனால் அதற்கான வட்டியாக கிட்டத்தட்ட ரூ.314 கோடி வரை திருப்பிச் செலுத்தியுள்ளது. இந்த வட்டி கட்டும் நிலை தொடர்ந்தால் இழப்பு ரூ. 2500 கோடியாக உயரும்.

- விமானங்களை வாடகைக்கு எடுத்தது, லீஸுக்கு எடுத்தது தொடர்பாக ரூ. 1700 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

- ஏர் இந்தியா நிர்வாகம் குறித்த தொலைநோக்குப் பார்வை அமைச்சகத்திடம் இல்லை. இதனால் ஏர் இந்தியா விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பெரும் குளறுபடிகள் நிலவுகின்றன.

இதுபோல பல்வேறு குற்றச்சாட்டுக்களை சிஏஜி கூறியுள்ளது.

நகராட்சி தலைவர் வேட்பாளர் போட்டியில் மாசா அமைப்பின் நிறுவனர் இப்திகார்



இப்திகார்

கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் வேட்பாளராக யார் போட்டியிட போகிறார், கூட்டணி சார்பில் எந்த கட்சி போட்டியிட போகிறது என்ற கேள்விக்கெல்லாம் விரைவில் விடை கிடைத்து விடும். எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை வேட்பாளரை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவி வருகிறது. போட்டியிட விரும்புவோர் ஒவ்வொருவரும் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் வேட்பாளர் போட்டியில் மஹ்தூமியா சமூக நல அமைப்பின் நிறுவனர் இப்திகாரும் இணைந்துள்ளார். மஹ்தூமியா சமூக நல அமைப்பின் மூலம் பல்லாண்டு காலமாக நலப்பணிகளை மேற்கொள்ளும் இவர் சென்னை புதுகல்லூரி மாணவர் பேரவையில் பொது செயலாளராக(1996) பணியாற்றி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்,சமுக சேவையில் ஆர்வமுள்ள இவர் பைத்துமால் முன்னாள் செயலாளர் மறைந்த ஏ.கே.எஸ் கபீர் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. கீழக்கரையின் முதல் பெண்கள் மதரஸா நிறுவியது இவரது தாயாராகும்.

இது ப‌ற்றி அவ‌ர‌து த‌ர‌ப்பு கூறிய‌தாவ‌து,இப்திகாரை வேட்பாளராக போட்டியிட செய்ய‌ முயற்சி நடப்பது உண்மைதான் இறைவனின் கிருபையால் வெற்றி பெற்றால் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொள்வதோடு நின்று விடாமல் சொந்த‌ செல‌வில் ப‌ல்வேறு ந‌ல‌ப்ப‌ணிக‌ளை மேற்கொள்வார் என்பது உறுதி

Wednesday, September 7, 2011

நகராட்சி தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட MMK.மூகைதீன் இப்றாகிம் விருப்ப மனு தாக்கல்


மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பதவிகளுக்கான தேர்தல் அக்டோ பர் மாதம் நடைபெறுகிறது. இந்த பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் அதிமுகவிஅனர் வருகிற 8ஆம் தேதி வரை மனு செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக மாவட்ட நிர்வாகிகளிடம் MMK.முகைதீன் இப்ராகிம் விருப்ப மனு தாக்க்கல் செய்தார்.அவருடன் கிழக்கரை நகர் அதிமுகவினர் உடனிருந்தனர்

கீழைக்கரை நகராட்சி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி



கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு அனைத்து ஜமாத் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது ,கீழக்கரை நகராட்சியில் 11 ஆயிரத்து 788 பெண் வாக்காளர்கள் உள்பட 23 ஆயிரத்து 202 வாக்காளர்கள் உள்ளனர்.தற்போது நகராட்சியில் திமுக நகர செயலாளர் பசீர் அகமது தலைவராக உள்ளார். இதில் திமுக கவுன்சிலர் 5,சுயேச்சைகள் 12,அதிமுக 1,காங்கிரஸ் 1 மேலும் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.










நகராட்சி தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் கீழக்கரை நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து அரசியல் கட்சினரும் தயராகி விட்டனர்.




இந்நிலையில் அனைத்து ஜமாத் சார்பாக பொது வேட்பாளராக தொழில் அதிபர் சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர் அல்லது தொழில் அதிபர் உமர் அப்துல் காதர் ஆகியோரில் ஒருவரை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது .




இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம்,முன்னாள் அதிமுக நகர செயலாளர் இம்பாலா உசைன், நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியான சமக சார்பில் பந்தே நவாஸ் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.




அதிமுகவின் கூட்டணி கட்சியான தமுமுக சார்பிலும் தொழிலதிபர் நல்ல முகம்மது களஞ்சியத்தை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.




திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் மூர் டிரவலஸ் ஹசனுதீன் மற்றும் கவுன்சிலர் ஹமீதுகான் போட்டியிடுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.இன்னும் சிலரும் முயல்வதாக கூறப்படுகிறது.




விரைவில் வேட்பாளர்கள் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிகிறது. கீழக்கரை மக்கள் மிகுந்த உன்னிப்புடன் நிகழ்வுகளை கவனித்து வருகிறார்கள் பலர் பல கணக்கு போட்டாலும் கீழக்கரை மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன், நகரின் முக்கிய பிரச்சினையான சுகாதாரம்,குடிநீர் ,சாலை வசதிகள் ,தனி தாலுகா,கீழக்கரைக்கென்று ஒரு தொழிற்சாலை போன்ற பல் வேறு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களில் கீழக்கரை நலனை யார் முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்படுவாகளோ அவர்களுக்கே இம்முறை வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.