கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Wednesday, September 7, 2011

கீழைக்கரை நகராட்சி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி



கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு அனைத்து ஜமாத் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது ,கீழக்கரை நகராட்சியில் 11 ஆயிரத்து 788 பெண் வாக்காளர்கள் உள்பட 23 ஆயிரத்து 202 வாக்காளர்கள் உள்ளனர்.தற்போது நகராட்சியில் திமுக நகர செயலாளர் பசீர் அகமது தலைவராக உள்ளார். இதில் திமுக கவுன்சிலர் 5,சுயேச்சைகள் 12,அதிமுக 1,காங்கிரஸ் 1 மேலும் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.










நகராட்சி தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் கீழக்கரை நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து அரசியல் கட்சினரும் தயராகி விட்டனர்.




இந்நிலையில் அனைத்து ஜமாத் சார்பாக பொது வேட்பாளராக தொழில் அதிபர் சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர் அல்லது தொழில் அதிபர் உமர் அப்துல் காதர் ஆகியோரில் ஒருவரை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது .




இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம்,முன்னாள் அதிமுக நகர செயலாளர் இம்பாலா உசைன், நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியான சமக சார்பில் பந்தே நவாஸ் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.




அதிமுகவின் கூட்டணி கட்சியான தமுமுக சார்பிலும் தொழிலதிபர் நல்ல முகம்மது களஞ்சியத்தை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.




திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் மூர் டிரவலஸ் ஹசனுதீன் மற்றும் கவுன்சிலர் ஹமீதுகான் போட்டியிடுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.இன்னும் சிலரும் முயல்வதாக கூறப்படுகிறது.




விரைவில் வேட்பாளர்கள் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிகிறது. கீழக்கரை மக்கள் மிகுந்த உன்னிப்புடன் நிகழ்வுகளை கவனித்து வருகிறார்கள் பலர் பல கணக்கு போட்டாலும் கீழக்கரை மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன், நகரின் முக்கிய பிரச்சினையான சுகாதாரம்,குடிநீர் ,சாலை வசதிகள் ,தனி தாலுகா,கீழக்கரைக்கென்று ஒரு தொழிற்சாலை போன்ற பல் வேறு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களில் கீழக்கரை நலனை யார் முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்படுவாகளோ அவர்களுக்கே இம்முறை வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:

Post a Comment