கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Thursday, September 8, 2011

ஏர் இந்தியாவுக்காகவிமானங்களை வாடகைக்கு எடுத்ததில் ரூ. 1700 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது- சிஏஜி


ஏர் இந்தியாவுக்காகவிமானங்களை வாடகைக்கு எடுத்ததில் ரூ. 1700 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது- சிஏஜிடெல்லி: ஏர் இந்தியா நிறுவன மறு சீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் மிகவும் தவறான வகையில் கையாளப்பட்டதால் பல ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானங்களை வாடகைக்கு எடுத்ததில் மட்டும் ரூ. 1700 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் புதிய பிரச்சினையாக இந்த ஏர் இந்தியா விவகாரம் உருவெடுக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏர் இந்தியா தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் சிவில் விமானப் போக்குவரத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளது சிஏஜி.

விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தவறான நடவடிக்கைகள் காரணமாக பல கோடி ரூபாய்களை வீணடித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

- ஏர்பஸ் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் தவறானதாக அமைந்ததால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டது.

- ஏர் இந்தியா நிறுவனம் ரூ. 200 கோடி கடன் வாங்கியிருந்தது. ஆனால் அதற்கான வட்டியாக கிட்டத்தட்ட ரூ.314 கோடி வரை திருப்பிச் செலுத்தியுள்ளது. இந்த வட்டி கட்டும் நிலை தொடர்ந்தால் இழப்பு ரூ. 2500 கோடியாக உயரும்.

- விமானங்களை வாடகைக்கு எடுத்தது, லீஸுக்கு எடுத்தது தொடர்பாக ரூ. 1700 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

- ஏர் இந்தியா நிர்வாகம் குறித்த தொலைநோக்குப் பார்வை அமைச்சகத்திடம் இல்லை. இதனால் ஏர் இந்தியா விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பெரும் குளறுபடிகள் நிலவுகின்றன.

இதுபோல பல்வேறு குற்றச்சாட்டுக்களை சிஏஜி கூறியுள்ளது.

No comments:

Post a Comment