கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Friday, January 20, 2012

கீழக்கரையில் வீடு கட்டும் பணியில் விபத்து ! 2 பேர் பலி !

கீழக்கரை கிழக்குத்தெரு பட்டாணியப்பா தர்ஹா அருகில் தனியாருக்கு சொந்தமான வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது.இதில் நேற்று கட்டிட வேலையில் விவேகனந்தபுரத்தை சேர்ந்த முனியசாமி மகன் பாலமுருகன்(22),மேஸ்திரி செல்வராஜ் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாரதவிதமாக இரண்டாவது மாடியில் கட்டப்பட்டிருந்த ஸ்லாப் இடிந்து விழுந்து இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

இருவரையும் 108 ஆம்புலண்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இதில் சிகிச்சை பலனிக்காமல் பாலமுருகன் நேற்று மரணமடைந்தார்.

இன்று காலை மேஸ்திரி செல்வராஜும் உயிரழந்தார். கீழக்கரை காவல் துறை சப்- இன்ஸ்பெக்டர் கனேசன் விசாரணை செய்து வருகிறார்.

ஆம்புலண்ஸ் வாகனம் தாமதமாக வந்ததாக அப்பகுதியை சேர்ந்தோர் குற்றஞ்சாட்டினர்.இது குறித்து துறை ரீதியாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.
thanks keelaitimes.

Wednesday, January 18, 2012

பஞ்சாப் மாநில அரசு பள்ளிகளில் மதிய உணவு ரத்து

பாட்டியாலா, ஜன.18-

பஞ்சாப் மாநில அரசு பள்ளிகளில் கடந்த சில மாதங்களாக மதிய உணவுக்கு நிதி கிடைக்காததைத் தொடர்ந்து, சில பள்ளிகள் இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளன. மேலும் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவளிக்க அங்கு பணிபுரியும் ஆசிரியர்களே நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலத்தின் நிதி நிறுவனத்தில் இருந்து நிதி ஒதுக்கப்படவில்லை என்று கல்வித்துறை கூறியுள்ளது. இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில்: -

அரசு பள்ளிகளில் மதிய உணவுக்காக ரூ 50 கோடி ஒதுக்கப்பட வேண்டும். இந்த நிதியை ஆளும் கட்சி தேர்தல் பிரச்சாரத்துக்காக உபயோகித்து வருகின்றது. இந்த பள்ளிகளில் பயில வரும் மாணவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருவதால் சில பள்ளிகளின் ஆசிரியர்கள் முன்வந்து உதவுகின்றனர்.

ஆனால் அவர்களால் தொடர்ந்து உதவ முடியாததால், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை ரத்து செய்துள்ளனர். மேலும், மாவட்ட பஞ்சாயத்தும் இந்த திட்டத்தை ரத்து செய்ய தீர்மானம் எடுத்து வருகிறது. நன்றி.மாலை மலர்

நிதி ஆதாரங்கள் குறித்து அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் விசாரணை


நெல்லை,ஜன.18-


கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களை வழிநடத்தும் நபர்கள் நடத்திவரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதி ஆதாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக சிறப்பு குழு ஒன்று கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்திவருகிறது.

இந்த குழுவின் விசாரணை நாளை முடிவடையும் என கூறப்படுகிறது.இந்த விசாரணை தூத்துக்குடி, திருநெல்வேலியில் உள்ள 6 நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்தி உள்ளனர் நன்றி: மாலை மலர்

Thursday, January 12, 2012

வேவு பார்க்க வந்தோம், தனியாக இருந்ததால் கொன்றோம்- பசுபதி பாண்டியன் வழக்கில் சரணடைந்தவர்கள் தகவல்

வள்ளியூர்: தமிழக தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் வள்ளியூர் கோர்ட்டில் 2 பேர் சரணடைந்துள்ளனர். பசுபதி பாண்டியனை வேவு பார்க்கவே வந்தோம். அவர் தனியாக இருந்ததால் சுற்றி வளைத்து வெட்டிக் கொன்று விட்டோம் என்று அவர்கள் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.

பசுபதி பாண்டியன் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீஸார் 4 தனிப்படைகளை அமைத்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலையை 3 பேர் கொண்ட கும்பல் செய்ததாக தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்த நிலையில் இன்று காலை நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் 2 பேர் சரணடைந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஆறுமுகசாமி, இவர் சுரண்டையைச் சேர்ந்தவர். இன்னொருவர் பெயர் அருளானந்தம், இவர் முள்ளக்காட்டைச் சேர்ந்தவர். இருவரும் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் சரணடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துக் கோர்ட்டில் அவர்கள் இருவரும் கூறுகையில், பசுபதி பாண்டியனின் இருப்பிடத்தை வேவு பார்க்கும் நோக்கில்தான் வந்தோம். ஆனால் நாங்கள் வந்தபோது அவர் தனியாக அமர்ந்திருந்தார். இதையடுத்து இதுதான் நல்ல சமயம் என்று கருதி வெட்டிக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக திண்டுக்கல் போலீஸார் நடவடிக்கையில் இறங்கவுள்ளனர். இதற்காக ஒரு தனிப் படை வள்ளியூர் விரைகிறது.

இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் எதற்காக இந்தக் கொலை நடந்தது என்பது குறித்த முழுவிவரங்களும் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

இன்னொருவர் திருப்பூரில் சிக்கினார்?

இதற்கிடையே, பசுபதி பாண்டியன் கொலையானபோது அவருடன் போனில் பேசிய நபர் ஒருவரை திருப்பூரில் வைத்து போலீஸார் மடக்கியுள்ளதாக இன்னொரு தகவல் கூறுகிறது.

பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட நேரத்தில், அவரது வீட்டின் அருகே இருந்து மர்மநபர் ஒருவர் செல்போனில் பேசியுள்ளார். போலீசார் செய்து அந்த செல்போன் எண்ணை கண்டுபிடித்தனர். அந்த எண்ணுக்குரியவர், பசுபதி பாண்டியனுக்கு, நன்கு பழக்கமானவர் என்றும் எப்போதும் பாதுகாப்பாக இருப்பவர் என தெரியவந்துள்ளது. அந்த எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து பசுபதி பாண்டியனுக்குப் பாதுகாப்பாக எப்போதும் கூடவே இருக்கும் 20 பேரை, திண்டுக்கல் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அந்த செல் எண்ணுக்குரியவர் திருப்பூரில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து தனிப்படைகளில் ஒன்று, நேற்று மாலை திருப்பூருக்கு விரைந்துள்ளது. அவர் போலீஸ் வசம் சிக்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் போலீஸ் தரப்பில் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

Tuesday, January 10, 2012

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 25 பேர் பலி

பெஷாவர், ஜன.10-


பாகிஸ்தானில் ஆப்கான் எல்லைப்பகுதியில் உள்ள ஒரு சந்தையில் குண்டு வெடித்தது. இதில் 25 பேர் பலியானார்கள். மெலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு வேனில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, ரிமோட் மூலம் வெடிக்க செய்யப்பட்டுள்ளதாக அதிகார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாக். ராணுவ பகுதிகளில் தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

சவூதிக்கு வேலைக்கு சென்ற இந்திய பெண்கள் சிறைபிடிப்பு: கட்டாயப்படுத்தி விபச்சாரம்

டெல்லி: வேலை வாங்கித் தருகிறேன் என்ற பெயரில் சவூதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 56க்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் அங்கு சிறைபிடிக்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.

கடந்த 2 மாதத்தில் டார்ஜிலிங், கலிம்பாங் மற்றும் நேபாலைச் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு ஏஜென்சிகள் மூலம் சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றனர். சவூதிக்கு சென்ற அவர்கள் அங்கு சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதிப்பவர்கள் அந்த அப்பாவி பெண்களின் பாஸ்போர்டுகளைப் பறித்து வைத்துள்ளனர்.

இதனால் அந்த பெண்கள் வேறு வழியின்றி தினம், தினம் நொந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டார்ஜிலிங்கைச் சேர்ந்த நிஷ் ராய் என்ற பெண் மட்டும் எப்படியோ தனது பாஸ்போர்டை எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு தப்பியோடி வந்துவிட்டார்.

இங்கு வந்தவுடன் தனக்கு நேர்ந்த கொடூரத்தை டார்ஜிலிங் போலீசில் தெரிவித்தார். மேலும் சவூதியில் இது போன்று 56க்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் சிக்கித் தவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து டார்ஜிலிங் போலீசார் கூறியதாவது,

மேற்கு வங்க அரசு மற்றும் சிஐடி போலீசார் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கவிருக்கின்றனர். சவூதியில் சிக்கியுள்ள பெண்களின் குடும்பத்தாரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக 2 ஏஜென்சி நிபுணர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்

ராஜபக்சேவை கலங்க வைத்த விஜய் டிவி ஜோதிட நிகழ்ச்சி

கொழும்பு: விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோதிட நிகழ்ச்சி இலங்கை அதிபர் ராஜபக்சேவை கலங்க வைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

தமிழகத்தில் பிரபலமான டிவி சேனல்களில் விஜய் டிவியும் அதாவது ஸ்டார் விஜயும் ஒன்று. அந்த சேனலில் கடந்த 31ம் தேதி 6 பிரபல ஜோதிடர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் 2012ல் இந்திய அரசியல்வாதிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துக் கூறினர்.

அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு 2012ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கேட்டார். அதற்கு ஜோதிடக் குழு தலைவர் ராஜபக்சேவின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு அவர் 2012 முடிவதற்குள் பதவி விலகுவார் என்றார். இதை மற்ற ஜோதிடர்களும் ஆமோதித்தனர்.

இலங்கையில் டயலாக் கேபிள் டிவி, விஜய் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. அந்த கேபிள் டிவி இந்த ஜோதிட நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சி குறித்த செய்தி ராஜபக்சேவின் காதுகளுக்கு எட்டியது. அதை கேட்டதும் அவர் கடுப்பாகி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநரை அழைத்து கண்டித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை மறுபடியும் ஒளிபரப்பக் கூடாது என்று உத்தரவிட்டார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.