கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Wednesday, January 18, 2012

பஞ்சாப் மாநில அரசு பள்ளிகளில் மதிய உணவு ரத்து

பாட்டியாலா, ஜன.18-

பஞ்சாப் மாநில அரசு பள்ளிகளில் கடந்த சில மாதங்களாக மதிய உணவுக்கு நிதி கிடைக்காததைத் தொடர்ந்து, சில பள்ளிகள் இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளன. மேலும் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவளிக்க அங்கு பணிபுரியும் ஆசிரியர்களே நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலத்தின் நிதி நிறுவனத்தில் இருந்து நிதி ஒதுக்கப்படவில்லை என்று கல்வித்துறை கூறியுள்ளது. இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில்: -

அரசு பள்ளிகளில் மதிய உணவுக்காக ரூ 50 கோடி ஒதுக்கப்பட வேண்டும். இந்த நிதியை ஆளும் கட்சி தேர்தல் பிரச்சாரத்துக்காக உபயோகித்து வருகின்றது. இந்த பள்ளிகளில் பயில வரும் மாணவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருவதால் சில பள்ளிகளின் ஆசிரியர்கள் முன்வந்து உதவுகின்றனர்.

ஆனால் அவர்களால் தொடர்ந்து உதவ முடியாததால், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை ரத்து செய்துள்ளனர். மேலும், மாவட்ட பஞ்சாயத்தும் இந்த திட்டத்தை ரத்து செய்ய தீர்மானம் எடுத்து வருகிறது. நன்றி.மாலை மலர்

No comments:

Post a Comment