கீழக்கரை கிழக்குத்தெரு பட்டாணியப்பா தர்ஹா அருகில் தனியாருக்கு சொந்தமான வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது.இதில் நேற்று கட்டிட வேலையில் விவேகனந்தபுரத்தை சேர்ந்த முனியசாமி மகன் பாலமுருகன்(22),மேஸ்திரி செல்வராஜ் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாரதவிதமாக இரண்டாவது மாடியில் கட்டப்பட்டிருந்த ஸ்லாப் இடிந்து விழுந்து இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.
இருவரையும் 108 ஆம்புலண்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இதில் சிகிச்சை பலனிக்காமல் பாலமுருகன் நேற்று மரணமடைந்தார்.
இன்று காலை மேஸ்திரி செல்வராஜும் உயிரழந்தார். கீழக்கரை காவல் துறை சப்- இன்ஸ்பெக்டர் கனேசன் விசாரணை செய்து வருகிறார்.
ஆம்புலண்ஸ் வாகனம் தாமதமாக வந்ததாக அப்பகுதியை சேர்ந்தோர் குற்றஞ்சாட்டினர்.இது குறித்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
thanks keelaitimes.
No comments:
Post a Comment