கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Sunday, February 26, 2012

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!


சிட்னி: டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20-20 என எந்த வகையான கிரிக்கெட் போட்டியிலும் ஒரு சதம் கூட அடிக்காமல் முதல் முறையாக ஒரு வருடத்தை முடிக்கப் போகிரார் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர்.

'சூப்பர் ஸ்டார்' என்றால் தொட்டதெல்லாம் ஹிட்டாக வேண்டும். 'சூப்பர் கிரிக்கெட்டர்' என்றால் அடிப்பதெல்லாம் செஞ்சுரியாக இருக்க வேண்டும். இதுதான் சராசரி ரசிகர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்று என்றாலும் சச்சினிடம் எப்போதுமே ரசிகர்கள் ஹை லெவலாகத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவரும் சற்றும் சளைக்காமல் அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிப்படுத்த் தவறியதில்லை.

ஆனால் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சதம் கூட அடிக்காமல் ஒரு வருடத்தையே முடிக்கப் போகிறார் சச்சின். கடைசியாக சச்சின் சதமடித்தது, கடந்த மார்ச் 12ம் தேதி நாக்பூரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 111 ரன்கள் எடுத்ததுதான். அது அவரது 48வது ஒரு நாள் சதமாகும்.

டெஸ்ட் போட்டிகளில் அவர் கடைசியாக சதம் போட்டது கடந்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக போட்ட 146 ரன்கள்தான்.

டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும், ஒரு நாள் போட்டிகளில் 48 சதங்களையும் வைத்துள்ள சச்சின் கடந்த ஒரு வருடமாக தனது 100வது சதத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்.

தற்போதைய ஆஸ்திரேலிய தொடரிலும் கூட சச்சின் ரசிகர்களை பெருமளவில் ஏமாற்றி விட்டார். நம்ம சச்சினா இவர் என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில்தான் அவரது ஆட்டம் படு சராசரியாக இருந்தது.

தற்போது ஒரு சதம் கூட அடிக்காமல் ஒரு வருடத்தை சச்சின் பூர்த்தி செய்யவிருப்பது அவரை விட அவரது ரசிகர்களுக்குத்தான் பெரும் சோகமாக உள்ளது

ஜெயேந்திரர் தொலைபேசி உரையாடல் வழக்கு: சைபர் கிரைம் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீதான சங்கரராமன் கொலை வழக்கில் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறை விசாரணை நடத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது;

வழக்கு என்ன?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவரை கொலை செய்ததாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் இறுதிக் கட்டத்தில் நீதிபதி ராமசாமியுடன் ஜெயேந்திரர் தொலைபேசி மூலமாக "பேரம்" பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்த தொலைபேசி உரையாடலையும் மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி சென்னை பொதுக்கூட்டத்தில் வெளியிட்டார்.

இதையடுத்து இந்த தொலைபேசி உரையாடல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தரராஜன் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் புதுவையில் நடைபெற்றும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் நீதிபதி ராமசாமியும் பெரம்பலூருக்கு மாற்றப்பட்டார்.

இன்றைய உத்தரவு

இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெற்றது. புதுவையில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது.

மேலும் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு சைபர் கிரைமுக்கும் உத்தரவிட்டது.

அதாவது ஜெயேந்திரர், நீதிபதி ராமசாமி உள்ளிட்டோரின் உண்மையான குரலைப் பதிவு செய்து தொலைபேசியில் இருக்கும் குரலோடு ஒப்பிட்டு ஆராய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது நன்றி டேட்ஸ் தமிழ்

சென்னைவாசிகளே, உங்க ஏரியாவில் எப்போது மின்வெட்டு என்று தெரியுமா?

சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் இன்று முதல் 2 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு முதல் மின்வெட்டு தொடங்கியது.

மொத்தம் 5 ஷிப்ட்களாக, மாலை 6 மணி வரை மின்வெட்டு அடுத்தடுத்து அமல்படுத்தப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் எந்த நேரத்தில் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்பது குறித்த விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

8.00 - 10.00 மணி:

பெல்ஸ் சாலை மற்றும் சேப்பாக்கம் பகுதிகள், கீழ்ப்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டாஹன்ஸ் சாலை, எண்ணூர், உயர் நீதிமன்றம், என்.எஸ்.சி. போஸ் சாலை, குறளகம், ஆர்மீனியன் சாலை, 2வது லைன் கடற்கரைச் சாலை, தம்பு செட்டி தெரு, காமராஜ் சாலை, ஏழு கிணறு மற்றும் மண்ணடி, தண்டையார்பேட்டை, மாத்தூர் பகுதிகள், சிட்கோ (வில்லிவாக்கம்) பகுதிகள், தண்டையார் பேட்டை (ஆர்.கே.நகர்) பகுதிகள், கிண்டி தொழிற்பேட்டை, கிண்டி, அண்ணா சாலை பகுதிகள், கோவூர், குன்றத்தூர், மாங்காடு, பெரிய பனிச்சேரி மற்றும் கிருகம்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, கோரிமேடு, பூந்தமல்லி டவுன், நோம்பல், காடுவெட்டி, புதுதாங்கல், ராஜ்பவன், செயின்ட் தாமஸ் மவுன்ட், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், துரைப்பாக்கம் பகுதி, டைடல் பார்க், ஸ்பாஸ்டிக் சொசைட்டி, ஆவடி, ஆவடி தொழிற்பேட்டை மற்றும் ஆயுத தொழிற்சாலை பகுதிகள், சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை (ஒரு பகுதி), பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), காமராஜ் நகர், அம்பத்தூர் மற்றும் பட்டரவாக்கம், அண்ணாநகர் - 4வது அவென்யு, 2வது அவின்யு, 7வது அவென்யு, தாஸ் காம்ப்ளக்ஸ், 5வது அவென்யு, அண்ணாநகர் (ஒரு பகுதி), அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயல், முகப்பேர் (ஒரு பகுதி) மற்றும் டி.ஐ. சைக்கிள் பகுதிகள்.

10.00 - 12.00:

சிந்தாதரிப்பேட்டை, அண்ணாசாலை (ஒரு பகுதி), புரசைவாக்கம் நெடுஞ்சாலை, செக்ரடேரியட் காலனி, டவுட்டன், ஹாம்ஸ் சாலை, பால்ஃபர் சாலை, டவர் ப்ளாக், பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), புதுப்பேட்டை, சிம்சன், எழும்பூர் (ஒரு பகுதி), எஸ்.எம். நகர், கே.பி.தாசன் ரோடு, தியாகராயர் நகர் (ஒரு பகுதி), எல்டம்ஸ் ரோடு, நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் பெரியமேடு சார்பு பகுதிகள், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை (ஒரு பகுதி), கதீட்ரல் சாலை, கே.என்.கே. சாலை, ஜி.என். செட்டி சாலை (ஒரு பகுதி), கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, அவ்வை சண்முகம் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, மீர்சாகிப்பேட்டை, ஷேக் தாவூத் தெரு, பேகம் சாகிப் தெரு, அமீர் மகால், பெருமாள் முதலி தெரு, பாரதி சாலை, வடக்கு உஸ்மான் சாலை முழுவதும், தங்கசாலை, கொண்டித் தோப்பு, ஜாட்காபுரம், சின்னபுரம், எஸ்பிளனேடு (ஒரு பகுதி), அயனாவரம், வில்லிவாக்கம் மற்றும் ஐ.சி.எஃப், பெரம்பூர் (ஒரு பகுதி), காலடிப்பேட்டை, ராஜாகடை, ஸ்டான்லி, பாரக்ஸ் ரோடு, பழைய சிறைச்சாலை, ராயபுரம் (ஒரு பகுதி), கோபால் நாயக்கன் தெரு, மடுவன்கரை, ஆதம்பாக்கம், ஆலந்தூர், கே.கே.நகர், அழகிரி சாலை, கோவிந்தன் சாலை, கிண்டி (ஒரு பகுதி), பொன்னம்பலம் சாலை, ராமசாமி சாலை, எம்.ஜி.ஆர். நகர், பாரதிதாசன் காலனி, மேற்கு மாம்பலம், அசோக் நகர் (ஒரு பகுதி), குரோம்பேட்டை, பல்லாவரம், கடப்பேரி மற்றும் மெப்ஸ் பகுதி, பல்லாவரம், பெருங்குடி தொழிற்பேட்டை பகுதி, பெருங்குடி, தாம்பரம் பகுதி, பூந்தமல்லி (ஒரு பகுதி), நசரத்பேட்டை, நங்கநல்லூர், ஆதம்பாக்கம், இந்திரா நகர், கலாக்ஷேத்ரா காலனி, ஸீவேர்டு ரோடு, வால்மீகி நகர், ஒளவை நகர், கணபதி நகர், திருவள்ளுவர் நகர், வாசுதேவன் நகர், பாலவாக்கம், விருகம்பாக்கம், தசரதபுரம், வடபழனி, ஆற்காடு சாலை (ஒரு பகுதி), சத்யா கார்டன், அண்ணாசாலை, ஷெனாய் நகர், ஆர்.வி. நகர், டி.பி.சத்திரம், அயப்பாக்கம், மகாலிங்கபுரம், காம்தார் நகர், எஸ்.எ.எஃப். கேம்ஸ் வில்லேஜ், சின்மயா நகர், ஜகந்நாதன் நகர், 100 அடி சாலை (ஒரு பகுதி), கோயம்பேடு, அண்ணாநகர் (மேற்கு), அண்ணாநகர் மேற்கு விரிவு மற்றும் திருமங்கலம் முழுவதும்.

12.00 - 2.00:

ராஜா அண்ணாமலைபுரம், தேனாம்பேட்டை (ஒரு பகுதி), லஸ் (ஒரு பகுதி), இந்திரா நகர் (ஒரு பகுதி), மயிலாப்பூர் (ஒரு பகுதி), எழும்பூர் (ஒரு பகுதி), பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), புரசைவாக்கம் (ஒரு பகுதி), ஸ்பர்டாங்க் சாலை, எம்.எம்.டி.எ., என்.எஸ்.சி. போஸ் ரோடு, தம்பு செட்டி தெரு (ஒரு பகுதி), பட்டினப்பாக்கம், காமராஜர் சாலை, மந்தைவெளி (ஒரு பகுதி), தியாகராய நகர் (ஒரு பகுதி), பாண்டிபஜார், தெற்கு உஸ்மான் சாலை, அண்ணாசாலை (ஒரு பகுதி), ஆர்.கே.சாலை, டி.டி.கே. சாலை, சி.ஐ.டி. காலனி, கோபாலபுரம் (ஒரு பகுதி), பி.எஸ்.சிவசாமி, சென்ட்ரல் ரோடு, ஜாஃப்பர்கான் பேட்டை, கே.கே.நகர் (ஒரு பகுதி), போஸ்டல் காலனி (மேற்கு மாம்பலம்), சைதாப்பேட்டை மேற்கு, வி.எஸ்.எம். கார்டன், பெருமாள் கோவில் தெரு, ராயப்பேட்டை முழுவதும், லாய்ட்ஸ் ரோடு, பாலாஜி நகர், பீட்டர்ஸ் ரோடு, ஆயிரம் விளக்கு, ஒயிட்ஸ் ரோடு, ஸ்பென்சர், கொடுங்கையூர், எஸ்பிளனேடு (ஒரு பகுதி), கிழக்கு ஜார்ஜ் டவுன் பகுதி, ராயபுரம், செம்பியம், மாதவரம், திரு.வி.க. நகர், வியாசர்பாடி (ஒரு பகுதி), பெரம்பூர் (ஒரு பகுதி), டோல்கேட், செர்ரி ரோடு, ஆற்காடு சாலை, வளசரவாக்கம், இ.டி.எல்., ஈஞசம்பாக்கம், சேலையூர், தாம்பரம், சூளைமேடு, கோடம்பாக்கம், வடக்கு உஸ்மான் சாலை (ஒரு பகுதி), வடபழனி, அசோக் நகர், ட்ரஸ்ட் புரம், மடிப்பாக்கம், நங்கநல்லூர் (ஒரு பகுதி), நொளம்பூர் 110 கி.வோ., பாடி 110 கி.வோ., பெருங்களத்தூர் பகுதி, பாரதி சாலை, வள்ளுவர் சாலை, முகளிவாக்கம், மணப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஒரு பகுதி, ராமாபுரம், சிறுசேரி தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர் முழுவதும், திருமங்கலம் (ஒரு பகுதி).

2.00-4.00:

புரசைவாக்கம் (ஒரு பகுதி), டவுட்டன் (ஒரு பகுதி), தேனாம்பேட்டை (ஒரு பகுதி), அண்ணாசாலை (ஒரு பகுதி), கதீட்ரல் ரோடு (ஒரு பகுதி), கல்லூரி சாலை, கிரீம்ஸ் ரோடு, பூக்கடை, பாரிமுனை, பிராட்வே, எஸ்பிளனேடு (ஒரு பகுதி), மயிலாப்பூர் (ஒரு சில பகுதிகள்), லஸ் (சில பகுதிகள்), குடியிருப்பு வாரியம், லோட்டஸ் காலனி, டவர் ப்ளாக், செனடாப் ரோடு, சேமியர்ஸ் ரோடு, சாதுல்லா தெரு, தியாகராய நகர் (ஒரு பகுதி), சி.ஐ.டி.நகர், மோதிலால் தெரு, ராமேஸ்வரம் சாலை, நடேசன் சாலை, எம்.ஆர்.சி. நகர், கற்பகம் அவென்யு, கிரீன்வேஸ் லேன், ராணிமெய்யம்மை டவர், கே.வி.பி. கார்டன், ஸ்ரீநிவாசா அவென்யு, ஒயிட்ஸ் ரோடு-அண்ணா சாலை (ஒரு பகுதி), ருக்மிணி லட்சுமிபதி சாலை, எதிராஜ் சாலை, ரஹேஜா காம்ப்ளக்ஸ், ஸ்பர்டாங்க் சாலை, மான்டியத் சாலை, காசாமேஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), எ.சி. சாலை, ரெட் க்ராஸ் சொசைட்டி, ஃபெüன்டன் ப்ளாசா, எல்.என்.டி. கோவில் தெரு, கெங்குரெட்டி கோவில் தெரு, டி.வி.நாயுடு தெரு, மயிலாப்பூர் (ஒரு பகுதி), மேற்கு மாம்பலம் (ஒரு பகுதி), மேட்லி ரோடு, ஜூபிலி ரோடு, பிருந்தாவன் தெரு, அசோக் நகர் (ஒரு பகுதி), கே.கே.நகர் (ஒரு பகுதி), அண்ணா பூங்கா, மூலக்கடை, முத்தமிழ் நகர், கொளத்தூர், லக்ஷ்மி நகர், செம்பியம் (ஒரு பகுதி), மணலி, ஜி.கே.எம்.காலனி, எஸ்.ஆர்.பி. காலனி, வியாசர்பாடி தொழிற்பேட்டை, ஜி.எஸ்.டி. ரோடு (ஒரு பகுதி), நேரு நகர், கடப்பேரி, மெப்ஸ் பகுதி, கிழக்கு கடற்சாலை சாலை, எம்.ஜி.ஆர். சாலை, வி.ஜி.பி., ஸீவேர்டு ரோடு, போரூர், ஆற்காடு சாலை (ஒரு பகுதி), சோழிங்கநல்லூர், தரமணி தொழிற்பேட்டை, என்.எம்.எம். ரோடு, அரும்பாக்கம், எம்.எம்.டி.எ. காலனி, 100 அடி சாலை (ஒரு பகுதி), பாடி, கொரட்டூர், கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், நடேசன் நகர், பான்டேஸ்வரம், புழல் மற்றும் ரெட்ஹில்ஸ் (ஒரு பகுதி), சோத்துபெரும்பேடு மற்றும் அலமாதி

4.00-6.00

அண்ணாசாலை (ஒரு பகுதி), ஜி.பி.ரோடு, ஒமந்தூர் அரசினர் தோட்டம், பாரதி சாலை, திருவல்லிகேணி, தாஹிர் சாகிப் தெரு, பெரிய தெரு, வாலாஜா ரோடு, சைதாப் பேட்டை, சி.ஐ.டி. காலனி, புரூசி மில் பகுதி, புளியந்தோப்பு பகுதி, மகாலிங்கபுரம் முழுவதும், காம்தார் நகர், நுங்கம்பாக்கம் (ஒரு பகுதி), திருமலைப்பிள்ளை சாலை, டாக்டர் நாயர் சாலை, தியாகராய சாலை (ஒரு பகுதி), மணலி மற்றும் நாப்பாளையம் பகுதி, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை (ஒரு பகுதி), ஜி.எ.ரோடு, கே.எ.கோவில் தெரு, தண்டவராயன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை பகுதி, திருவொற்றியூர் பகுதி, பெசன்ட் நகர், ஜெ.ஆர்.நகர், மாளவியா காலனி, கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காடுதாங்கல், கலைமகள் நகர், அண்ணாசாலை மற்றும் ஒரு பகுதி, கோட்டூர்புரம், டேர்ன்புல்ஸ் சாலை, கஸ்தூரிபா நகர், தாம்பரம் (ஒரு பகுதி), பம்மல், ராதா நகர், கடப்பேரி, குரோம்பேட்டை, பல்லாவரம், கே.கே.நகர் (ஒரு பகுதி), ராமசாமி சாலை, பார்க் வியு சாலை, போரூர் (ஒரு பகுதி), எஸ்.எம்.ஆர்.சி., பெரும்பாக்கம் பகுதி, திருமுடிவாக்கம் பகுதி, விஜயநகரம், வேளச்சேரி நெடுஞ்சாலை, தண்டீஸ்வரம், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கே.ஜி. ரோடு, ராஜீவ் நாயக்கன் தெரு, புது ஆவடி சாலை, மேடவாக்கம் குளச்சாலை, வானகரம், மதுரவாயல், முகப்பேர் (கிழக்கு), பட்டாபிராம், திருநின்றவூர் (ஒரு பகுதி), திருவள்ளூர் நெடுஞ்சாலை (ஒரு பகுதி), ரெட்ஹில்ஸ் முழுவதும், அண்ணாநகர் (ஒரு பகுதி) மற்றும் திருவேற்காடு.

இந்த மின்தடை நேரமானது மாதம் ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்படும்

Monday, February 20, 2012

மதுரையில் நடந்த 44 சோதனைக்குழாய் குழந்தைகள் சந்திப்பு நிகழ்ச்சி

மதுரை: மதுரையில் உள்ள ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் சோதனைக்குழாய் மூலம் பிறந்த 44 குழந்தைகள் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி நடந்தது.

மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ளது ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம். அங்கு சோதனைக்குழாய் மூலம் பிறந்த 44 குழந்தைகள் சந்தித்த நிகழ்ச்சி நடந்தது.

இது குறித்து அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சந்திரலேகா கூறியதாவது,

ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் அனைத்து நவீன கருவிகளும் உள்ளன. அதனால் குழந்தை இல்லா தம்பதிகள் எந்த பரிசோதனைக்காகவும் வெளியே செல்லத் தேவையில்லை. லேப்ரோஸ்கோபி, ஐ.யூ.ஐ., மற்றும் ஐ.வி.எப்., சிகிச்சை முறையால் மதுரை கிளையில் மட்டும் 250 தம்பதியர் குழந்தை பேறு பெற்றுள்ளனர். அதில் 36 பேருக்கு சோதனைக்குழாய் மூலம் 44 குழந்தைகள் பிறந்துள்ளன.

அந்த குழந்தைகள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட வைப்பதற்காக கூட்டு குடும்ப விழாவாக இந்நிகழச்சி நடத்தப்பட்டது. டாக்டர்கள் சுபாஷினி, சுஜிதா தலைமையில் தாய், சேய் நலப்பிரிவும், டாக்டர் மணிகண்டசாமி தலைமையில் குழந்தைகள் நலப்பிரிவும் செயல்பட்டு வருகிறது என்றார்

ஆஸி.க்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் தாமதம்-டோணி்க்கு 1 போட்டியில் ஆட தடை


பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா தாமதமாக பந்துவீசியது. இதனால் அணியின் கேப்டன் டோணிக்கு 1 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்திய பந்துவீச்சாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் 2 ஓவர்கள் தாமதாக பந்துவீசினர். இதனால் இந்திய அணியின் கேப்டன் டோணியின் போட்டிக்கான சம்பளத்தில் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மற்ற இந்திய வீரர்களின் சம்பளத்திலும் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதனையடுத்து நாளை பிரிஸ்பேனில் இலங்கையுடனான போட்டியில் டோணி பங்கேற்க முடியாது. அவருக்கு பதிலாக ஷோவாக் இந்தியா அணியை வழிநடத்தி செல்வார் என்று தெரிகின்றது.

சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின்(ஐ.சி.சி.) விதிமுறைகளின்படி, 12 மாதத்தில் 2 முறை போட்டியில் தாமதமாக பந்துவீசினால், அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.

முதல் முறை லேட்:

கடந்த 2011 ஏப்ரல் 2ம் தேதி மும்பையில் நடைபெற்ற உலக கோப்பை 2011 இறுதிப் போட்டியில், இலங்கைக்கு எதிராக இந்திய அணி தாமதமாக பந்துவீசி இருந்தது. நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 2 முறையாக தாமதமாக பந்துவீசியதால், டோணிக்கு அடுத்த போட்டியில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆசிரியர்- மாணவர் இடையே இடைவெளி: கலாம்


கோயம்புத்தூர்: ஆசிரியர்-மாணவர், பெற்றோர்-குழந்தைகள் ஆகியோருக்கு இடையிலான இடைவெளியை தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அதிகரித்து விட்டது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 16-வது மாநில மாநாட்டில் அவர் பேசியதாவது:

ஆசிரியர் பணி அறப்பணியாகும். இன்று தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் ஆசிரியர்-மாணவர், பெற்றோர்-குழந்தைகள் ஆகியோருக்கு இடையிலான இடைவெளி அதிகமாகி விட்டது.

குழந்தை வன்முறை அதிகரிப்பு

முன்பெல்லாம் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு விடுமுறை கிடைப்பது இல்லை. விடுமுறை நாட்களில் கூட ஏதாவது சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

தகவல் தொழில்நுட்பத்தால் நன்மைகள் கிடைத்தாலும் வன்முறையும் அதிகமாகி விட்டது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் அதிகமான நேரத்தை செலவு செய்ய வேண்டும்.

வகுப்புகளில் விவாத மேடைகள், நாடகம், நடனம், கவிதை, கலாசார கருத்தரங்குகள் நடைபெற வேண்டும். அப்போதுதான் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். வெற்றி தோல்வியை மாணவர்கள் ரசிக்க வேண்டும். இன்றைய கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். பாடச்சுமையை குறைக்க வேண்டும்.

6-ம் வகுப்புவரை பெற்றோர்கள் அரவணைப்பில் மாணவர்கள் படிக்கும்படி பாடங்கள் இருக்க வேண்டும். 7- ம் வகுப்பிற்கு மேல் சிந்திக்கும் திறனையும், கனவு காணும் திறனையும் வளர்க்க வேண்டும்.

ஆசிரியர்கள் கடமை

மாணவர்களை கேள்வி கேட்க விடவேண்டும். மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு ஆசிரியர்கள் சரியான பதிலை கூறவேண்டும். மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது ஆசிரியரின் கடமை. அப்போதுதான் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும்.

பள்ளியில் கட்டமைப்பு வசதி இருந்தால் மட்டும் போதாது. திறமையான ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே தரமான கல்வியை கொடுக்க முடியும்.

நான் படித்த ராமேஸ்வரம் பள்ளி ஓலைக்கூரைதான். இருந்தாலும் அங்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் அனைவரும் மகான்கள். என்னுடன் 55 மாணவ-மாணவிகளும் மேல்படிப்புக்கு சென்றார்கள். பள்ளியின் கட்டிடத்தாலோ, விளம்பரத்தாலோ தரமான கல்வியை தரமுடியாது.

கேரள அனுபவம்

கடந்த 2 மாதத்திற்கு முன் கேரள மாநிலத்தில் உள்ள பரவூருக்கு சென்றேன். அங்கு 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் முன்னிலையில் உரையாற்றினேன்.

அப்போது அதில் 10 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து கேள்வி கேட்குமாறு கூறினேன். அதில் ஒரு மாணவி "தனக்கு மனோதத்துவம் (சைக்காலஜி) பாடம் படிக்க விருப்பம் இருப்பதாகவும், ஆனால் அவருடைய தாய்-தந்தை என்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும், எனவே நீங்கள்தான் எனக்கு விளக்கம் தர வேண்டும் என்று அந்த மாணவி கேட்டாள்.

நான் அதற்கு பதில் அளிக்கும்போது "என்ஜினீயரிங் படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்று உங்களது பெற்றோர் நினைப்பது சரிதான். ஆனால் சாதிக்க முடியாது. ஆனால் மாணவ-மாணவிகள் விரும்பும் பாடத்தை படித்தால் சாதனை புரியலாம்'' என்றேன்.

அப்போது அந்த கூட்டத்தில் இருந்த அந்த மாணவியின் பெற்றோரும் மாணவியின் விருப்பப்படியே படிக்க விட்டு விடுவதாக'' கூறினார்கள் என்றார் அவர்.

என்ன கொடுமை சார்... போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து சம்பளத்தை சுட்ட திருடர்கள்!

பெரம்பூர்: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பெட்டிகளை உடைத்து 2 போலீசாரின் சம்பளப் பணம் மற்றும் அடையாள அட்டைகளை திருடிச் சென்றுள்ளனர்.

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் ஓய்வு எடுக்க ஓய்வு அறை ஒன்று உள்ளது. அந்த அறையில் சீருடையை வைப்பதற்காக ஒவ்வொருவருக்கும் ஒரு பெட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு 2 போலீசார் தங்களுடைய சம்பளப் பணம் மற்றும் சீருடையை அந்த பெட்டிகளில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.

இன்று காலை பணிக்கு வந்த அவர்கள் பெட்டிகளைத் திறக்கப் போனபோது அவை உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரு பெட்டியில் ரூ.2,000 சம்பளப் பணம், ஐடி கார்டும் மற்றொரு பெட்டியில் ரூ.3,000 சம்பளப் பணமும், ஐடி கார்டும் திருடப்பட்டிருந்தது.

உடனே அந்த 2 போலீசாரும் இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். அவர்களது புகாரின்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப் பதிவு செய்தார். துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் கோவி.மனோகரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்தனர். நேற்றிரவு பணியில் இருந்த போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தனர். பணியில் இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்தால் மக்களை எப்படி பாதுகாப்பீர்கள் என்று கேட்டனர்.

Tuesday, February 14, 2012

சாணக்குழியில் வாயில் துணி திணித்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

சேலம்: சேலத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் சாணக்குழியில் கிடந்தது. அக்குழந்தையை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையில் சம்போடைவனம் பகுதியில் சாணம் கொட்டும் குப்பைக் குழி உள்ளது. இந்த குழியில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் குப்பைகளை கொட்டுவது வழக்கம்.

நேற்று காலையில் சாணக்குழியில் சிலர் குப்பைகளை கொட்ட வந்த போது குழிக்குள் பச்சிளம் குழந்தையின் கால்கள் தெரிந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் குப்பைகளை அகற்றிப் பார்த்தபோது பிறந்து சில மணிநேரமேயான பச்சிளம் குழந்தை கிடந்தது.

குழியில் வீசப்பட்ட குழந்தை அழுவது வெளியே கேட்காத வகையில் அதன் வாயில் துணி திணிக்கப்பட்டு இருந்தது. இதனால் குழந்தை கை, கால்களை அசைத்துக் கொண்டிருந்தது. உடனடியாக குழந்தையை மீட்ட பொதுமக்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அந்த குழந்தை 2.8 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். பிறந்த குழந்தையை சாணக்குழியில் வீசியது யார்? குழந்தையின் பெற்றோர் யார்? சாணக்குழியில் வீசப்பட்ட காரணம் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரொம்ப சூடா குடிக்கிறீங்களா?..தொண்டை புற்றுநோய் வரும்: எச்சரிக்கை ரிப்போர்ட்

கொதிக்க கொதிக்க டீ, சூடான சூப் குடிப்பவரா? அப்படி எனில் இந்த கட்டுரை உங்களுக்குத்தான். அதிக கொதி நிலையில் உள்ள டீ, சூப், பருகுபவர்களுக்கு தொண்டை, வயிற்றுப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாம். சமீபத்திய ஆய்வில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு பிரிட்டிஷ் மருத்துவ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 5 லட்சம்பேர் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புகையிலை, மது போன்றவைகளினால் ஆண்களும், பெண்களும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அதே சமயம் அதிக கொதி நிலையுடன் கூட பானங்களை பருகுவதன் மூலம் பெரும்பாலோனோர் தொண்டை புற்றுநோய்க்கு ஆளாக நேரிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு ஈரான் பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டீ பருகும் பழக்கமுள்ள 300க்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் தினந்தோறும் ப்ளாக் டீ பருகுபவர்களாக இருந்தனர். அவர்களுக்கு மித வெப்பம், சராசரி வெப்ப நிலை உள்ள டீயினை பருக கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு பகுதியினருக்கு அதிக சூடான கொதிக்க கொதிக்க டீ கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு தொண்டையிலும், வயிற்றுப் பகுதியிலும் புற்றுநோய் செல்கள் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

ஈரானியர்கள் பெரும்பாலோனோர் அதிக சூடான டீ உள்ளிட்ட பானங்களை பருகுகின்றனர் இதனால் அவர்கள் அதிக அளவில் இந்த வகை புற்றுநோய்க்கு ஆளாவது கண்டறியப்பட்டது. டீ தயாரிக்கப்பட்ட நான்கு ஐந்து நிமிடங்கள் கழித்து குடிப்பவர்களை விட இரண்டு நிமிடங்களில் குடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

இதயத்தை பத்திரமா பார்த்துக்கங்க!

காதலின் சின்னம் இதயம். என் இதயமே என்றுதான் காதலுக்குரியவர்களை அழைக்கின்றோம். ஆனால் அன்பானவர்கள் குடியிருக்கும் இதயத்தை பெரும்பாலோனோர் கவனிப்பதே இல்லை. கண்டதையும் சாப்பிட்டால் இதயமானது பலவீனமாகிவிடும். இதயத்திற்கு ஏற்ற இதமான உணவுகளை பரிந்துரைத்துள்ளனர் உணவியல் வல்லுநர்கள்.

குறைந்த கொழுப்பு

இதயத்திற்கு முக்கிய எதிரியே கொழுப்பு சத்துதான். கெட்ட கொழுப்புகள் இதய நாளங்களில் படிவதினாலே உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகின்றன.

இதயத்தை பாதுகாக்க மாமிசங்கள், பால் பொருட்கள், சீஸ், வெண்ணெய் போன்றவைகளை அதிகம் உண்ணுவதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

உப்பு கம்மி பண்ணுங்க

இதயத்திற்கு மற்றொரு முக்கிய எதிரி உப்பு. அதிக உப்பு சாப்பிடுவது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும். எனவே உணவுப் பொருட்களில் உப்பு, சோடியம் போன்றவைகளை குறைத்துக்கொள்வது இதயத்திற்கு இதம் தரும்.

அதிக கலோரி உணவுகள்

அதிக கலோரி தரக்கூடிய உணவுகளை உட்கொள்வது உடம்பை குண்டாக்கும். இதனால் உடல் பருமனுக்கு ஆளாவதோடு இதயநோய்களுக்கு வழி வகுக்கும். எனவே குறைந்த கலோரி உணவுகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

அதிக நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், தானியவகைகளை உண்பது இதயத்திற்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

வறுத்தவை வேண்டாம்

எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை உட்கொள்ளவேண்டாம். அதற்கு பதிலாக வேகவைத்த, உணவாகவோ, மைக்ரோவே அவனில் செய்த உணவுகளையோ உட்கொள்ளலாம்.

சமையல் எண்ணெய்

சமைப்பதற்கு தேர்ந்தெடுக்கும் எண்ணெய் முக்கியமானது. மக்காச்சோளம், தவிட்டு எண்ணெய், சூரியகாந்திவிதை எண்ணெய், சோயாபீன்ஸ், பருத்திவிதை, ஆலிவ் ஆயில் எண்ணெய்களை உபயோகிக்கலாம். காய்கறிகளையும், சீசனில் கிடைக்கும் பழங்களையும் உணவில் பயன்படுத்தவேண்டும். உணவியல் வல்லுநர்களின் ஆலோசனைகளை பின்பற்றினால் இதயத்தின் ஆரோக்கியம் என்றைக்கும் பாதிக்கப்படாது.

ஹோர்மோன் மாற்றத்தினால் பிரித்தானியாவில் ஆண் அம்மாவான அதிசயம்!

பொதுவாக பெண்களே குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை தம்வசம் வைத்திருப்பார்கள். காரணம் இயற்கையாக பெண்களுக்கே குழந்தை உருவாகும் கர்ப்பப்பை காணப்படும். அத்துடன் உடலமைப்பும் குழந்தை வளர்வதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். ஆனால் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மனிதன் இந்த இயற்கையான விடயத்தையும் செயற்கையாக மாற்றம் செய்துள்ளான். லண்டனை சேர்ந்த ஆண் ஒருவர் தனது ஹோர்மோனில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் மூலம் குழந்தை ஒன்றிற்கு தாயாகியுள்ளார்.

ஆப்கானில் நேட்டோ படைகள் தாக்குதல்: 8 குழந்தைகள் பலி


ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் நடத்திய விமான தாக்குதலில் சிக்கி 8 எட்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

அங்கு தலிபான்களின் தாக்குத‌லை ஒடுக்க நேட்டோ படையினர் முகாமிட்டுள்ளன. அவை பாகிஸ்தான் எல்லையிலும் வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானின் கபீஸா மாகாணத்தின் நெஜ்ராப் மாவட்டத்தில் கியாவாலா கிராமப்பகுதியில் நேட்டோப்படையினர் திடீர் வான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் எட்டு குழந்தைகள் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நோட்டோ படைகளின் இத்தாக்குதலுக்கு ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் குறித்து விசாரிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது