கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Monday, February 20, 2012

ஆஸி.க்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் தாமதம்-டோணி்க்கு 1 போட்டியில் ஆட தடை


பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா தாமதமாக பந்துவீசியது. இதனால் அணியின் கேப்டன் டோணிக்கு 1 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்திய பந்துவீச்சாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் 2 ஓவர்கள் தாமதாக பந்துவீசினர். இதனால் இந்திய அணியின் கேப்டன் டோணியின் போட்டிக்கான சம்பளத்தில் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மற்ற இந்திய வீரர்களின் சம்பளத்திலும் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதனையடுத்து நாளை பிரிஸ்பேனில் இலங்கையுடனான போட்டியில் டோணி பங்கேற்க முடியாது. அவருக்கு பதிலாக ஷோவாக் இந்தியா அணியை வழிநடத்தி செல்வார் என்று தெரிகின்றது.

சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின்(ஐ.சி.சி.) விதிமுறைகளின்படி, 12 மாதத்தில் 2 முறை போட்டியில் தாமதமாக பந்துவீசினால், அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.

முதல் முறை லேட்:

கடந்த 2011 ஏப்ரல் 2ம் தேதி மும்பையில் நடைபெற்ற உலக கோப்பை 2011 இறுதிப் போட்டியில், இலங்கைக்கு எதிராக இந்திய அணி தாமதமாக பந்துவீசி இருந்தது. நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 2 முறையாக தாமதமாக பந்துவீசியதால், டோணிக்கு அடுத்த போட்டியில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

No comments:

Post a Comment