
சிட்னி: டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20-20 என எந்த வகையான கிரிக்கெட் போட்டியிலும் ஒரு சதம் கூட அடிக்காமல் முதல் முறையாக ஒரு வருடத்தை முடிக்கப் போகிரார் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர்.
'சூப்பர் ஸ்டார்' என்றால் தொட்டதெல்லாம் ஹிட்டாக வேண்டும். 'சூப்பர் கிரிக்கெட்டர்' என்றால் அடிப்பதெல்லாம் செஞ்சுரியாக இருக்க வேண்டும். இதுதான் சராசரி ரசிகர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்று என்றாலும் சச்சினிடம் எப்போதுமே ரசிகர்கள் ஹை லெவலாகத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவரும் சற்றும் சளைக்காமல் அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிப்படுத்த் தவறியதில்லை.
ஆனால் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சதம் கூட அடிக்காமல் ஒரு வருடத்தையே முடிக்கப் போகிறார் சச்சின். கடைசியாக சச்சின் சதமடித்தது, கடந்த மார்ச் 12ம் தேதி நாக்பூரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 111 ரன்கள் எடுத்ததுதான். அது அவரது 48வது ஒரு நாள் சதமாகும்.
டெஸ்ட் போட்டிகளில் அவர் கடைசியாக சதம் போட்டது கடந்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக போட்ட 146 ரன்கள்தான்.
டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும், ஒரு நாள் போட்டிகளில் 48 சதங்களையும் வைத்துள்ள சச்சின் கடந்த ஒரு வருடமாக தனது 100வது சதத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்.
தற்போதைய ஆஸ்திரேலிய தொடரிலும் கூட சச்சின் ரசிகர்களை பெருமளவில் ஏமாற்றி விட்டார். நம்ம சச்சினா இவர் என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில்தான் அவரது ஆட்டம் படு சராசரியாக இருந்தது.
தற்போது ஒரு சதம் கூட அடிக்காமல் ஒரு வருடத்தை சச்சின் பூர்த்தி செய்யவிருப்பது அவரை விட அவரது ரசிகர்களுக்குத்தான் பெரும் சோகமாக உள்ளது
No comments:
Post a Comment