டெல்லி: நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஹமீத் அன்சாரி இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசு துணைத் தலைவராக ஹமீத் அன்சாரி பொறுப்பேற்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் 2முறை குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்தார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அன்சாரிக்கு 490 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங்குக்கு 238 வாக்குகளே கிடைத்தன. இதைத் தொடர்ந்து இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment