பட விளக்கம்:-
வெல்பேர் அசோசியசன் மற்றும் யூத் எக்ஸ்னோராவிற்கு கோழி கழிவுகள் மற்றும் அகற்றுவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை வளப்படுத்த மரக்கன்றுகளும் கீழக்கரை நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.
கீழக்கரையில் சேரும் குப்பைகளில் மூன்று ஒரு பங்கு கோழி கழிவு என கூறப்படுகிறது.நகரில் நோய் பரவுவதற்கு கோழி கழிவுகள் ஒரு காரணம் என எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கீழக்கரை நகராட்சி மற்றும் வெல்பேர் அஸோசியேசன் ,யூத் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கோழி கழிவுகளை உரமாக்க திட்டம் தீட்டியது.
இதற்காக கோழிகடை உரிமையாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி கோழி கழிவுகளை வெளியில் வீச கூடாது.குப்பை எடுக்கும் வாகனத்தில் தான் தர வேண்டும்என நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து வெல்பேர் அசோசியசன் மற்றும் யூத் எக்ஸ்னோரா சார்பில் கோழி கழிவுகளை கடைகளிலிருந்து அகற்றுவதற்கு தேவையான் உபகரணங்களான டிரை சைக்கிள்,குப்பை தொட்டிகள்,மற்றும் கைஉரை,முக உரை உள்ளிட்டவை தேவை என நகராட்சிக்கு வேண்டுகோள் விடுக்கபட்டிருந்தது.
வெல்பேர் அசோசியசன் மற்றும் யூத் எக்ஸ்னோராவிற்கு கோழி கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்கள் இன்று கீழக்கரை நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தலைமை வகித்தார்.துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கமிசனர் முஜிப் ரஹ்மான்,வெல்பேர் அசோசியேசன் மேலாளர் அப்துல் அஜீச்,யூத் எக்ஸ்னோரா மேலாளர் தணிகாச்சலம் மற்றும் கவுன்சிலர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
யூத் எக்ஸ்னோரா தணிகாச்சலம் கூறியதாவது,
கீழக்கரையில் ஏற்கெனவே கோழி கழிவுகள் மற்றும் குப்பைகளை உரமாக்கும் முயற்சியில் இறங்கி தனியார் தோட்டத்தில் செயல்படுத்தி வருகிறோம்.இதுவரை 105 நாட்களில் 95டன் உரம் தயாரித்துள்ளோம்.இந்த உரம் அனைத்தும் மரம் மற்றும் செடிகளுக்கு பயன்படுத்தாலாம்.
தற்போது நகராட்சி எங்களுக்கு இந்த உபகரணங்களை அளித்திருப்பது குப்பை மற்றும் கோழி கழிவுகளை அகற்றுவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.விரைவில் கீழக்கரையில் 100 சதவீதம் குப்பை மற்றும் கோழி கழிவுகளை அகற்றி உரமாக்குவோம் என்றார்
No comments:
Post a Comment