நெல்லை,ஆக.12 - கூடன்குளம் முதல் அணுஉலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி நாளை தொடங்குகிறது. இதனையொட்டி பாதுகாப்பு பணிக்கு 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் தலா 1000 மெகாவாட் திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அணு உலை எதிர்ப்பாளர்களின் போராட்டத்தால் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்ட அணுமின் நிலைய பணிகள் கடந்த மார்ச் 19ந் தேதி முதல் முழுவீச்சில் தொடங்கப்பட்டன. இத்ைதொடர்ந்து முதலாவது அணு உலையில் மாதிரி எரிபொருள் நிரப்பப்பட்டு வெப்ப சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்து அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் அணு உலையின் அழுத்தகலன்கள் திறக்கப்பட்டு மாதிரி எரிபொருள்கள் அகற்றப்பட்டன. இதையடுத்து முதல் அணுஉலையில் 163 யுரேனியம் எரிகோல்களை பொருத்துவற்கு அனுமதி கேட்டு கூடன்குளம் அணுமின்நிலையம் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு விண்ணப்பித்தது. இந்தநிலையில் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்புவதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் எஸ்.எஸ்.பஜாஜ் கூறியதாவது:-
எங்கள் பாதுகாப்பு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து கூடன்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். அதில் நாளை (திங்கள்கிழமை) முதலாவது அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணியை தொடங்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 457 மீட்டர் நீளம் கொண்ட 163 எரிகோல்களிலும் எரிபொருள்களை நிரப்ப இரண்டு வார காலம் ஆகும். இந்த பணியை பார்வையிட இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூடன்குளம் வருகின்றனர். எனவே இந்த மாத இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கிவிடும். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த அணு உலையில் செறிவூட்டப்பட்ட யூரேனியம் எரிபொருளாகவும், குளிர்ச்சியூட்டும் பொருளாக தண்ணீரும் பயன்படுத்தப்படும். கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதையொட்டி அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment