கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Thursday, July 19, 2012

மலேசியா - சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக 200 பேரிடம் ரூ.1கோடி மோசடி

சென்னை, ஜூலை. 19-

அண்ணாநகர் “ஐ” பிளாக் 10-வது தெருவில் ரன்வே ஏர்லைன்ஸ் டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இதனை அண்ணாதுரை, செந்தில் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து செல்லும் பணியில் ஈடு பட்டு வந்தனர். இவர்கள் புதிதாக சுற்றுலா பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.

உலக சித்தர்கள் மாநாடு மலேசியாவில் நடக்கிறது. சுற்றுலா பயணிகள் இந்த மாநாட்டை கண்டுகளித்து அங்கிருந்து சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படு வார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டனர். இதற்காக ஒரு நபருக்கு கட்டணம் ரூ.45 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதில் விசா, விமான டிக்கெட் உள்பட அனைத்து செலவுகளும் அடங்கும் என்று கூறினார்கள்.

இந்த சுற்றுலாவில் செல்ல சென்னை, திருப்பூர், கோபியை சேர்ந்த 260 பேர் முன்பதிவு செய்து பணம் கட்டினார்கள். அவர்கள் அனைவருக்கும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு விமானம் மூலம் புறப்பட வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே மாலையில் அவர்களை தி.நகர் பாண்டிபஜார் தபால் நிலையம் எதிரில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் வருமாறு கூறினார்கள்.

இதையடுத்து 260 பேரும் லக்கேஜ் மற்றும் பொருட்களுடன் தி.நகர் வந்தனர். ஓட்டல் அருகில் அவர்கள் கூடிநின்றனர். அப்போது டிராவல்ஸ் உரிமையாளர் அண்ணா துரை அங்கு வந்தார். அவர் 50 பேருக்கு மட்டும் விசா கொடுத்தார். மற்றவர்களுக்கு சிறிது நேரத்தில் விசா வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் அங்கு திரும்பி வரவில்லை. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த 210 சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையே விசா கிடைத்தவர்கள் விமானம் நிலையம் சென்று மலேசியா புறப்பட்டு சென்றனர். மேலும் 20 பேர் தங்கள் சொந்த பணத்தில் மலேசியா புறப்பட்டனர். மற்றவர்கள் தி.நகரில் தவித்துக்கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் பாண்டி பஜார் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்றனர். அவர்களை இன்று காலையில் வந்து புகார் கொடுக்கு மாறு போலீசார் கூறினார்கள்.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சென்று விட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பகல் 12.30 மணியளவில் பணம் கொடுத்து ஏமாந்த 50 பேர் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களில் சில பெண்களும் உள்ளனர். அவர்கள் தாங்கள் கொண்டுவந்த சூட்கேஸ் மற்றும் பொருட்களுடன் போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.
நன்றி மாலை மலர்.

No comments:

Post a Comment