கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Thursday, July 5, 2012

விஜய் ரசிகர்களை போட்டுத் தாக்கிய விஜயகாந்த் ரசிகர்கள்!

சென்னை: சென்னை அருகே விஜய் ரசிகர்களை தேமுதிகவைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரங்கிமலை ஒன்றிய விஜய் ரசிகர் மன்றம் சார்பில் மக்கள் மன்றம் என்ற பெயர் பலகை திறப்பு விழா சென்னை அருகே பெருங்களத்தூர் குண்டுமேட்டில் நேற்று நடைபெற்றது. பரங்கிமலை விஜய் ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். விழா நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த தேமுதிகவினர் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்தனர். அதைப் பார்த்த தேமுதிகவினர் ஓட்டம் பிடித்தனர்.
தேமுதிகவினர் நடத்திய தாக்குதலில் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
விஜய் ரசிகர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேமுதிகவைச் சேர்ந்த 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.நன்றி தேட்ஸ் தமிழ்.

No comments:

Post a Comment