குற்றாலத்தில் சாரல் மழையுடன் களை கட்டும் சீசன் - கீழக்கரைவாசிகள் மகிழ்ச்சி !
ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் குற்றாலத்தில் சீசன் களை கட்ட துவங்கும். தற்போது கொஞ்சம் தாமதமாக சீசன் துவங்கி இருக்கிறது. குற்றாலம் நகரமெங்கும் சாரல் மழை பெய்து, இதமான சீதோஷ்ணம் நிலவுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இம்முறை கேரளாவில் தாமதமாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், அங்கும் கூட சாரல் மழையே பெய்கிறது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குற்றாலம் சீசன் துவங்கியதுமே, கீழக்கரையிலிருந்து, குற்றாலம் நோக்கி அதிகளவில் நண்பர்களுடனும், குடும்ப அங்கத்தினர்களும் சென்று தென் பொதிகையின் மூலிகை நீரில் மகிழ்ச்சி குளியல் போடுவது வழக்கம். தற்போது துவங்கியுள்ள சீசனால், கிழக்கரைவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே கீழக்கரையிலிருந்து, பலர் வாகனங்களில், இப்பொழுதே குற்றாலம் நோக்கி படையெடுக்க ஆராம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment