கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Monday, July 16, 2012

எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்தும் அதை உதறிவிட்டு பொறியியல் படிப்புகளில் சேர்ந்த 29 மாணவர்கள்

சென்னை: எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்தும் அதை உதறிவிட்டு 29 மாணவர்கள் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கலந்து கொண்டு சீட் கிடைத்த 29 மாணவர்கள் தங்கள் சேர்க்கைக்கான கடித்தத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு பி.இ. கலந்தாய்வில் கலந்து கொண்டு பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் கூறுகையில்,
எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்த 29 மாணவர்கள் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அவர்கள் எலக்ட்ரானிக் அன்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், ஐ.டி. பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளனர்.
நேற்று மட்டும் 13 மாணவர்கள் தங்களின் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான கடிதங்களை ஒப்படைத்துவிட்டு பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அவர்கள் கொடுத்த சேர்க்கைக் கடிதங்கள் மருத்துவ சேர்க்கை குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட் ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டது. இதில் 198.5க்கு குறைவாக கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற முற்பட்ட வகுப்பு மாணவர்கள், 197.5க்கு கீழ் கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற பிற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் சுயநிதி கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்கள் தான் கிடைத்தன.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க கல்விக் கட்டணம் ரூ.2.80 லட்சம் உள்பட ஆண்டுக்கு ரூ. 5.5 லட்சம் செலவாகும். அவ்வளவு பணம் கட்ட முடியாமல் தான் அந்த 29 மாணவர்களும் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
பி.இ., பி.டெக். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் கடந்த 3 நாடகளில் 1,721 பேர் கலந்து கொள்ளவில்லை. மேலும் கலந்தாய்வுக்கு வந்திருந்தவர்களில் 46 பேர் எந்த பாடப்பிரிவையும் தேர்வு செய்யவில்லை. இதனால் 195 மற்றும் அதை விடக் குறைவாக கட் ஆஃப் மதிப்பெண் வாங்கியுள்ளவர்களுக்கு சிறந்த க்லலூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அதே சமயம் அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ் உள்ளிட்ட முக்கிய பாடப்பிரிவுகளுக்கான இடங்கள் நிரம்பிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment