
நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் குபேந்திரன் கீழக்கரைக்கு திடீர் வருகை தந்து பல் வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் மேலும் கடற்கரை சென்ற அவர் கடற்கரையில் குவிந்து கிடக்கும் கோழி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து மண் அள்ளும் எந்திரம்(ஜெசிபி), லாரி வரவழைக்கப்பட்டு குப்பைகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் புதிதாக கட்டப்படும் உரக்கிடங்கு, தற்போது குப்பை கொட்டப்படும் தனியார் தோப்பு, புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை பார்வையிட்டார். கமிஷனர் முஜிபுர் ரஹ்மான், தலைவர் ராவியத்துல் கதரியா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
இதே போன்று தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு நகரை சுத்தமாக்க அரசு உதவ வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நன்றி கீழக்கரை டைம்ஸ்.
No comments:
Post a Comment