கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Monday, December 19, 2011

ஜப்பானில் 10வது மாடியிலிருந்து தந்தையினால் தூக்கி வீசப்பட்ட குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்!

ஜப்பானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து வெளியே வீசப்பட்ட குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. குழந்தையை வீசிய தந்தை கைது செய்யப்பட்டார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10வது மாடியில் வசிப்பவர் ஷிங்கோ ஹஷிமோட்டோ (37). மனைவி, 4 வயதில் மகள், ஒரு வயதில் மகன் உள்ளனர். மனைவியும், மகளும் நேற்று வெளியே சென்றிருந்தனர்.
ஷிங்கோவும், ஒரு வயது குழந்தையும் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது குழந்தை அழுததால் எரிச்சல் அடைந்த ஷிங்கோ பால்கனிக்கு தூக்கி வந்து அதன் கழுத்தை நெரிக்க முயன்றார். அதே வேகத்தில் குழந்தையை வெளியே வீசினார்.
10வது மாடியில் இருந்து வீசப்பட்ட குழந்தை கீழே சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த புதரில் விழுந்தது. லேசான சிராய்ப்பு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.

பின்பு அவரே பொலிஸிற்கு தகவலும் தெரிவித்தார். பின்பு பொலிசார் அவரை கைது செய்தனர்.
அதிக வேலைப்பளு காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment