ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு தடை விதித்து சமீபத்தில் கீழக்கரை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இந்த தடை வரும் ஃபிப்ரவரி 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது, இதை தொடர்ந்து கீழக்கரை நகராட்சி தலைவர் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோள் பின் வருமாறு:
கீழக்கரையில் ப்ளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, மேலும் நமது ஊரில் ப்ளாஸ்டிக் குப்பைகள் கழீவு நீர் பாதைகளை அடைத்துக் கொண்டும், சாலை ஓரங்களிலும் சாதாரணமாகக் காணப்படும், இந்த குப்பைகளை எரிக்கும் போது வெளிவரும் நச்சு வாயு கடுமையான சுகாதாரப் பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.மேலும் பிளாஸ்டிக் மக்குவதற்கு 10 இலட்சம் ஆண்டுகள் வரை கூட எடுக்கின்றது, இந்த பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் மண்ணில் புதைவதால் மழை நீர் நிலத்தில் இறங்குவதை தடுக்கின்றது.ப்ளாஸ்டிக் பொருட்களில் அடங்கியுள்ள பைபீனால்-ஏ, காலேட்டுகள் மற்றும் டயாக்சீன்கள் மிகவும் கேடு விளைவிக்கக்கூடியவையாக கருதப்படுகிறது. ஆகவே இதனை தடை செய்வதற்கான தீர்மானம் நகராட்சியால் கொண்டு வரப்பட்டு வரும் ஃபிப்ரவரி 2 முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் நமது ஊரில் டிசம்பரில் அதிகமான திருமன நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் , இந்த நிகழ்ச்சிகளில் பளாஸ்டிக் பைகள் மற்றும் பளாஸ்டிக் வாழை இலைகள் போன்ற பொருட்களை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகிறேன், அது போல கீழக்கரையில் கட்டுமான வேலைகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது, இதற்கான கட்டுமான பொருட்கள், மணல் ஆகியவை சாலையோரங்களில் கொட்டப்பட்டு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது, அப்படியான இடங்களில் அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்
No comments:
Post a Comment