Friday, December 16, 2011
அணை பிரச்சினை குறித்து தமிழக– கேரளா முதலமைச்சர்கள் பேச வேண்டும்– கலாம் யோசனை
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்பட தமிழக, கேரள முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சைனிக் பள்ளியில் நடந்த விழாவில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு மாநிலங்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் நல்லுறவு, அணை பிரச்னையால் பாதிக்கப்படக் கூடாது' என்றார்.
முல்லை பெரியாறு அணை குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் நேரில் பேசி, சுமுகமாக பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறு முதலமைச்சர்கள் பேசும் போது, அணையின் பாதுகாப்பு, செலவு, பயன்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
முதல்வர்கள் அளவில், அமைச்சர்கள் அளவில், செயலர்கள் அளவில் என ஏற்கெனவே நூற்றுக்கணக்கான சுற்றுக்கள் பேச்சு வார்த்தை நடத்தி, தொடர்ந்து கேரளா விஷமத்தனமாக நடந்து கொண்டதால், உச்சநீதி மன்றம் போய் தமிழகம் தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்ற நிலையில், மீண்டும் பேச்சு வார்த்தை என கலாம் யோசனை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment