ரோம் : இத்தாலிக்கு சொந்தமான சரக்குக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் நேற்று கடத்திச் சென்றனர். இதில் 7 இந்தியர்கள் உட்பட 18 பேர் மாட்டிக் கொண்டுள்ளனர். ஐக்கிய அரபு குடியரசிலிருந்து புறப்பட்ட என்ரிகோ ஐவோலி என்ற சரக்குக் கப்பலில் 17,750 டன் காஸ்டிக் சோடா இருந்தது. நேற்று மத்திய தரைக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலில், சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஏறினர்.
ஆயுதங்களை காட்டி மிரட்டி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த அவர்கள் சோமாலியாவுக்கு கப்பலை கடத்திச் சென்றனர். இதில் 7 இந்தியர்கள் உட்பட 18 பேர் இருக்கின்றனர். இந்த தகவலை கப்பலின் உரிமையாளர் மர்னவி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். கப்பலை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment