கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Wednesday, December 28, 2011

லோக்பால் விவாதத்தில் கலந்து கொள்ளாத காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு

புதுடெல்லி, டிச. 28-

பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட போதிலும் அரசியலமைப்பு சட்ட அந்தஸ்தை பெற நடந்த ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தது. இது மத்திய அரசை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டுமானால் மக்களவையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரிப்பது கட்டாயமாகும்.

எனவே காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் சபையில் இருக்க வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டிருந்தார். இதை ஏற்று சபையில் இருந்த காங்கிரஸ் எம்.பி.க் களில் சிலர் லோக்பால் மசோதா நிறைவேறியதும் இருக்கைகளில் இருந்து எழுந்து சென்று விட்டனர். அவர்களுக்கு போன் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் சட்ட திருத்த ஓட்டெடுப்பு குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.

என்றாலும் நள்ளிரவு ஆகிவிட்டதால் காங்கிரஸ் எம்.பி.க்களில் சுமார் 20 பேர் பாராளுமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் புறப்பட்டுச் சென்றனர். இதன் காரணமாக லோக்பால் மசோதாவுக்கு சட்ட அந்தஸ்து கிடைக்காமல் ஓட்டெடுப்பில் தோல்வி ஏற்பட்டது.

காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் சபையில் இருந்திருந்தால் லோக்பால் மசோதாவுக்கு அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து கிடைத்து இருக்கும். எனவே ஓட்டெடுப்பு நடந்தபோது சபையில் இல்லாத எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டவிசாரணையில் சுமார் 20 காங்கிரஸ் எம்.பி.க்கள் கொறடா உத்தரவை மீறி சபையில் இருந்து வெளியேறி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீசு அனுப்பியுள்ளது. எம்.பி.க்கள் விளக்கம் கொடுத்த பிறகு உரிய நட வடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment