கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Saturday, December 17, 2011

நகராட்சியின் செயல்பாடுகள் - மக்கள் எண்ணம்

கீழக்கரை நகராட்சியின் செயல் பாடுகள்,  சேர்மன் , உதவி சேர்மன் மற்றும் வார்டு உறுப்பினர்களின் நலப்பணிகள் பற்றி  நமது இனையதளம் சார்பாக கீழக்கரை மக்களின் கருத்துக்களை கேட்டோம், அவர்களின் எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்
இபுனு ( ரியல் எஸ்டேட் புரோக்கர்) : கீழக்கரையில் முன்னெப்பொழுதையும் விட நலப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது, சேர்மனே நேரில் சென்று அந்த பணிகளை கவனித்து வருவது ஆரோக்கியமான விஷயம். அது போல் உறுப்பினர்களும் மக்கள் நலனின் கவனம் செலுத்தி வருகிறார்கள், சில உறுப்பினர்கள் தனக்கு உதவியாளர்கள் வைத்து செயல்படுவதை நிறுத்த வேண்டும், அவர்களே நேரில் சென்று கடமை ஆற்ற வேண்டும்
  • எம்.ஐ. சாஹுல் ஹமீது ( சமூக ஆர்வலர்) :  கீழக்கரையின் நலப் பணிகள் சரியான முறையில் நடந்து கொண்டிருக்கிறதாக நினைக்கிறேன். சேர்மனின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது, போக போக பார்க்க வேண்டும், மேலும் எங்களது 18 வது வார்டு மெம்பர் எங்கள் பகுதிகளில் மக்களுக்கான நலப்பணிகளை சிறப்பாக செய்து வருகிறார், தற்பொழுது தெரு விளக்குகள் எல்லாம் எரியும் சூழ் நிலையை ஏற்படுத்தி உள்ளார்.
ஆறுமுகம் தேவர் (முன்னாள் நகராட்சி ஊழியர்) : தற்போது சேர்மன் அம்மா நலப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். எங்கள் பகுதியில் சாலை மேம்படுத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது






சேகு பசீர் அஹ்மது ( சமூக ஆர்வலர்) : சேர்மனின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது அது போல் எங்கள் 19 வது வார்டு மெம்பர் இடி மின்னல் ஹாஜா வெகு சிறப்பாக மக்கள் பணி ஆற்றி வருகிறார். கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு ஏற்படுவது ஆரோக்கியமான விஷயம்தான்
சீனி ( உள்ளூர் வியாபாரி ): சேர்மனின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது, குறிப்பாக வாருகால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கிறது, அது போல் எங்கள் 3 வது வார்டு உறுப்பினர் ரமேஷ் மக்களின் வேண்டுகோளை ஏற்று பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார்.





யூசுப்கான் ( சமூக ஆர்வலர் ): நான் தற்பொழுதுதான் ஊர் வந்தேன், சேர்மனின் செயல்பாடுகள் சரியாக சென்று கொண்டு இருப்பதாக நினைக்கிறேன், எங்கள் 9  வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நலப்பணிகள் சிறப்பாக இருக்கிறது, அந்த வார்டின் உறுப்பினர் துனை சேர்மன்தான், அவரின் பணிகளும் நன்றாக இருக்கிறது

No comments:

Post a Comment