கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Wednesday, August 29, 2012

இந்திய-அமெரிக்கரின் ஒபாமா எதிர்ப்பு டாக்குமென்டரியால் அமெரிக்காவில் பரபரப்பு

வாஷிங்டன்: இந்திய அமெரிக்கர் திணேஷ் டிசோசா என்பவர் தயாரித்துள்ள ஒபாமா எதிர்ப்பு டாக்குமென்டரியால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் படம் அமெரிக்கர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
மும்பையில் பிறந்தவர் திணேஷ் டிசோசா. தற்போது அமெரிக்கக் குடியுரிமை பெற்று இந்திய அமெரிக்கராக வாழ்ந்து வருகிறார். இவர் 2016: Obama's America என்ற பெயரில் ஒரு டாக்குமென்டரியை உருவாக்கியுள்ளார். இப்படம் அமெரிக்கா முழுவதும் 1091 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
ஒபாமாவை கடுமையாக சாடி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அமெரிக்கர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து இப்படத்தை 1800 தியேட்டர்களில் திரையிட ஏற்பாடு செய்துள்ளனர்.
ஒபாமா மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் விளக்கியுள்ளார் திணேஷ். இந்தப் படத்திற்கு பாக்ஸ் ஆபீஸிலும் பெரும் வசூல் கிடைத்து வருகிறதாம்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான வார இறுதி நாட்களில் இப்படம் 6.2 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாம். ஒவ்வொரு காட்சிக்கும் சராசரியாக 5940 டாலர் பணத்தை இது வாரியுள்ளது. இதுவரை இப்படி ஒரு வசூலை சமீப காலத்தில் எந்தப் படம் ஈட்டியதில்லை என்கிறார்கள்.
கடந்த திங்கள்கிழமை மட்டும் இப்படம் 1.2 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது.
2.1 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது இந்த டாக்குமெண்டரிப் படம். இப்படத்தின் பன்ச் லைன் - Love Him. Hate Him. You Don't Know Him - என்பதாகும். இப்படம் வெளியானது முதல் இதுவரை 10.3 மில்லியன் டாலரை வசூலித்துக் குவித்துள்ளதாம்.
இந்த ஆண்டில் மிகப் பெரிய வசூலை ஈட்டிய டாக்குமெண்டரிப் படம் என்ற பெயரையும் திணேஷின் டாக்குமெண்டரி பெற்றுள்ளது.
இப்படத்தை ஜெரால்ட் மோலன், டோக் செய்ன் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஜான் சல்லிவனுடன் இணைந்து திணேஷ் டிசோசா இயக்கியுள்ளார். தற்போது இவர்கள் மொத்தமாக புளோரிடாவில் குவி்ந்துள்ளனர். அங்குதான் குடியரசுக் கட்சியின் மாநாடு தற்போது நடந்து வருகிறது. குடியரசுக் கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திணேஷ் டிசோசாவின் டாக்குமெண்டரி ஒபாமாவை பெரும் சரிவுக்குள்ளாக்கும் என்று கருதப்படுகிறது.
திணேஷ் எழதிய The Roots of Obama's Rage என்ற நூலைத் தழுவித்தான் இந்த டாக்குமெண்டரியை உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் தனித்துவத்தையும், அதன் ஆதிக்கத்தையும் நீர்த்துப் போகும் அளவுக்கு ஒபாமா செயல்பட்டு வருகிறார் என்றும் அவரது கென்யத் தந்தையிடமிருந்து வந்த அடிப்படை உணர்வுகளுடன் அவர் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும், அமெரிக்காவை அவர் தாழ்த்தி விட்டார் என்றும் இந்த டாக்குமெண்டரியில் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் ஒபாமா மீண்டும் அதிபரானால் நாடு பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும் இதில் எச்சரிக்கைச் செய்தி தரப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த டாக்குமெண்டரிப் படம் அமெரிக்கர்களிடையே பெரும் பரபரப்பையும், சூடான விவாதங்களையும் ஏற்படுத்தி விட்டது என்பது மட்டும் உண்மை.

கசாப்புக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்-அப்பீல் மனு டிஸ்மிஸ்

டெல்லி: மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதல் வழக்கில் தனக்கு மும்பை தனி நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்து மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. கசாப்பின் அப்பீல் மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம் அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானிலிருந்து மும்பைக்குள் கடல் மார்க்கமாக இரவில் புகுந்த தீவிரவாதிகள் பத்து பேர் வெறியாட்டம் ஆடித் தீர்த்தனர். 3 நாட்கள் நடந்த இந்த பயங்கர தீவிரவாத தாக்குதலால் இந்தியாவே அதிர்ந்து நின்றது. உலக நாடுகள் இந்த பயங்கர தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை டிவிகளில் நேரடியாகப் பார்த்து அதிர்ச்சி அடைந்தன.
கசாப்பை உயிருடன் பிடித்த எஸ்.ஐ. துக்காராம்
3 நாள் நடந்த வெளியாட்டத்தில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவனைப் பிடித்தவர் சப் இன்ஸ்பெக்டர் துக்காராம். மிகவும் தீரத்துடன் செயல்பட்டு கசாப்பைப் பிடித்த அவர் தீவிரவாதிகளில் தாக்குதலில் சிக்கி வீரமரணம் அடைந்தார்.
வரலாறு காணாத இந்த தீவிரவாதத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கில் கசாப் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் 2010ம் ஆண்டு மே 6ம் தேதி மும்பை தனி நீதிமன்றம் கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை பின்னர் பாம்பே உயர்நீதிமன்றம் 2011, அக்டோபர் 10ம் தேதி உறுதி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தான் கசாப். அதில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரியிருந்தான்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம். முன்னதாக கசாப்புக்காக வாதாட உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமைக்கல் கியூரியான ராஜு ராமச்சந்திரன் உச்சநீதி்மன்றத்தில்நடந்த வாதத்தின்போது கூறுகையில், நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர்தான் மும்பையில் நடந்த தாக்குதல். ஆனால் அந்த மாபெரும் சதித் திட்டத்தை உருவாக்கிய குழுவில் கசாப் இடம் பெறவில்லை. அதில் அவன் ஒரு அங்கமாக இல்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் ஆஜரான கோபால் சுப்ரமணியம் வாதிடுகையில், நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போரில் முக்கியப் பங்காற்றியுள்ளான் கசாப். எனவே அவனை தூக்கில் தொங்க விடுவதே சரியானதாக இருக்க முடியும் என்று வாதிட்டிருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பை அளித்த உசத்சநீதிமன்றம், கசாப்பின் மேல் முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்து, அவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளையும் உறுதி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து அவனைத் தூக்கிலிட நாள் குறிக்கப்படும். இருப்பினும் கசாப் சார்பில் குடியரசுத் தலைவரிடம் கருணை கோரி மனு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருணை மனு மீது முடிவு வர வருடக்கணக்கில் ஆகும் என்பதால் கசாப் இப்போதைக்கு தூக்கிலிடப்படும் வாய்ப்பு மிக மிகக் குறைவே.

நோய் எதிர்ப்பு சக்தி தரும் உலர் திராட்சை


என்னதான் வைட்டமின் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டாலும் இயற்கை குணம் வாய்ந்த பழங்களுக்கு நிகர் எதுவும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை... அந்த வகையில் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதில் உள்ள வைட்டமின் மற்றும் அமினோ அமிலங்கள் சக்தியை தருகின்றன. விளையாட்டு வீரர்களுக்கு போட்டியின் நடுவே ஊக்கமளிக்க கூடிய பழ வகைகளில் மிகவும் முக்கியமானது இந்த உலர் திராட்சை. இதில் உள்ள தாமிரசத்து ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

மஞ்சள்காமாலை நோயுள்ளவர்கள் தினமும் 2 வேளை இந்த பழத்தை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். தொண்டைக்கட்டு பிரச்னை உள்ளவர்கள் இரவு தூங்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டு காய்ச்சி 10 வால்மிளகை தூள் செய்து, பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் தொண்டைக்கட்டு சென்ற இடமே தெரியாது.

மூல நோயுள்ளவர்கள் தினமும் உணவுக்கு பின்னர் காலை மற்றும் மாலையில் 25 உலர் திராட்சை பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பூரண குணம் பெறலாம்

Sunday, August 12, 2012

கூடன்குளம் உலையில் யுரேனியம் நிரப்பும் பணி தொடக்கம்

நெல்லை,ஆக.12 - கூடன்குளம் முதல் அணுஉலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி நாளை தொடங்குகிறது. இதனையொட்டி பாதுகாப்பு பணிக்கு 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் தலா 1000 மெகாவாட் திறனுள்ள 2 அணு உலைகள்  அமைக்கப்பட்டுள்ளன. அணு உலை எதிர்ப்பாளர்களின் போராட்டத்தால் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்ட அணுமின் நிலைய பணிகள்  கடந்த மார்ச் 19ந் தேதி முதல் முழுவீச்சில் தொடங்கப்பட்டன.  இத்ைதொடர்ந்து  முதலாவது அணு உலையில் மாதிரி எரிபொருள் நிரப்பப்பட்டு வெப்ப சோதனை ஓட்டம்  நடத்தப்பட்டது. இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்து அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் அணு உலையின் அழுத்தகலன்கள்  திறக்கப்பட்டு மாதிரி எரிபொருள்கள் அகற்றப்பட்டன.  இதையடுத்து முதல் அணுஉலையில் 163 யுரேனியம் எரிகோல்களை பொருத்துவற்கு அனுமதி கேட்டு கூடன்குளம் அணுமின்நிலையம் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை  ஆணையத்துக்கு விண்ணப்பித்தது. இந்தநிலையில் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்புவதற்கு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் எஸ்.எஸ்.பஜாஜ் கூறியதாவது:-
எங்கள் பாதுகாப்பு குழுவின்  பரிந்துரையின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து கூடன்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். அதில் நாளை (திங்கள்கிழமை) முதலாவது அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணியை தொடங்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 457 மீட்டர் நீளம் கொண்ட 163 எரிகோல்களிலும்  எரிபொருள்களை நிரப்ப இரண்டு வார காலம் ஆகும். இந்த பணியை பார்வையிட இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூடன்குளம் வருகின்றனர். எனவே இந்த மாத இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கிவிடும். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த அணு உலையில் செறிவூட்டப்பட்ட யூரேனியம் எரிபொருளாகவும், குளிர்ச்சியூட்டும் பொருளாக தண்ணீரும் பயன்படுத்தப்படும். கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதையொட்டி அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

11 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

 
11 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் திறந்து வைத்தார்.

1/1

சென்னை, ஆக.12 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (11.8.2012) தலைமைச் செயலகத்தில், திருவொற்றியூர் உள்பட 11 இடங்களில் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். தமிழகத்தை ஒரு அறிவுசார் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதே  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் நோக்கமாகும். உயர் கல்வியின் வளர்ச்சிக்கு தமிழக அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  உயர் நிலைக் கல்வி அளிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.  கிராமப்புற மாணவ, மாணவிகள் உயர் கல்வி மூலம் வேலை வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையில் சிறப்பான நிலையை அடைந்து தங்களது குடும்பத்தை மேம்படுத்தி அவர்களது பொருளாதார நிலை உயரும் வகையிலும், உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை நாடி சிரமப்படாமல், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கல்வி கற்பதற்கு ஏதுவாக அரசு பல கல்லூரிகளைத் தொடங்கி வருகிறது. 
இதன் அடிப்படையில், 11 இடங்களில் பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா 29.5.2012 அன்று ஆணையிட்டார். அதன்படி, சேலம் மாவட்டம் ​ எடப்பாடி; கன்னியாகுமரி மாவட்டம் ​ கன்னியாகுமரி; திண்டுக்கல் மாவட்டம் ​ வேடசந்தூர்; ஈரோடு மாவட்டம் ​ மொடக்குறிச்சி; மதுரை மாவட்டம் ​ திருமங்கலம்; திருவள்ளூர் மாவட்டம் ​ திருவொற்றியூர்; இராமநாதபுரம் மாவட்டம் ​ பரமக்குடி; திருநெல்வேலி மாவட்டம் ​ கடையநல்லூர்; விருதுநகர் மாவட்டம் ​ அருப்புக்கோட்டை; நாகப்பட்டினம் மாவட்டம் ​ நாகப்பட்டினம் மற்றும் வேலூர் மாவட்டம் ​ அரக்கோணம் ஆகிய 11 இடங்களில் புதிதாக பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாக  தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்,  உயர்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித்துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கடன் தொல்லை: திருச்சியில் பிரபல ஹோட்டல் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி: திருச்சியில் பிரபல ஹோட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சென்ட்ரல் பஸ் நிலையம் அருகே உள்ளது கஜப்ரியா என்ற தனியார் ஹோட்டல். அதன் பங்குதாரர் லட்சுமணன்(51). அவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு சமையல் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பாமா உடனே இது குறித்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமணனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே அவரது அறையில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில், நான் பல தவறுகள் செய்துள்ளேன். இது நானே எடுத்த முடிவு. என்னை மன்னிக்கவும். இது என் முடிவு. இனி என்னால் வாழ முடியாது என எழுதியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
பல ஹோட்டல்களில் பங்குதாரராக உள்ள அவருக்கு கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடன் நெருக்கடி, குடும்பப் பிரச்சனை போன்றவை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து போன லட்சுமணனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதக்க வேட்டை: சீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது அமெரிக்கா

லண்டன்: கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் பதக்க வேட்டையில் சீனாவிடம் முதலிடத்தைப் பறி கொடுத்த அமெரிக்கா, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அதை தட்டிப் பறித்து முதலிடத்திற்கு முன்னேறி நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது.
தடகளப் போட்டிகளின் உதவியுடன்தான் சீனாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது அமெரிக்கா.
2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்து அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்தது. அந்த ஒலிம்பிக்கில் சீனா 51 தங்கம் உள்பட 100 பதக்கங்களைப் பெற்று முதலிடத்தில் இருந்தது.
36 தங்கம் உள்பட 110 பதக்கங்களுடன் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டது அமெரிக்கா. ரஷ்யா 3வது இடத்திலும், இங்கிலாந்து நான்காவது இடத்திலும் இருந்தன.
லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் தொடக்கத்திலிருந்தே சீனாதான் முன்னணியில் இருந்து வந்தது. அமெரிக்கா 2வது இடத்திலேயே தொடர்ந்து இருந்து வந்தது. இதனால் சீனா மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் தடகளப் போட்டிகளில் பதக்கங்களை அள்ளியதன் மூலம் முதலிடத்திற்கு முன்னேறி விட்டது அமெரிக்கா.
பதக்கப் பட்டியலில் தற்போது 44 தங்கம், 29 வெள்ளி, 29 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 102 பதக்கங்களை அள்ளி முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா.
38 தங்கம், 27 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களுடன் 2வது இடத்தில் இருக்கிறது சீனா.
கடந்த முறை 4வது இடத்தில் இருந்த இங்கிலாந்து இந்த முறை வெகுவாக முன்னேறி, 28 தங்கம், 15 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கடந்த முறை 3வது இடத்தைப் பிடித்த ரஷ்யா, இந்த முறை ஒரு படி இறங்கி 4வது இடத்திற்குப் போயுள்ளது. அந்த நாடு 21 தங்கம், 25 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 78 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இருப்பினும் கடந்த முறையை விட இந்த முறை அமெரிக்காவும், சீனாவும் குறைந்த அளவிலான பதக்கங்களையே வென்றுள்ளன. கடந்த முறை அமெரிக்கா மொத்தம் 110 பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை 102 பதக்கங்களே இதுவரை கிடைத்துள்ளது.
அதேபோல சீனா கடந்த முறை 51 தங்கம் உள்பட 100 பதக்கங்களை கைப்பற்றியிருந்தது. ஆனால் இந்த முறை 87 பதக்கமே அதற்கு இதுவரை கிடைத்துள்ளது.
இந்தியா, ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் 56வது இடத்தில் நிற்கிறது.

சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் டெசோ மாநாடு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் டெசோ மாநாடு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெசோ மாநாட்டுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் எபிலி தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணையின் போது டெசோ மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது பற்றி சென்னை பெருநகர காவல்துறை முடிவெடுக்கலாம் என்று கூறியது. ஆனால் வழக்கை முடித்து வைக்கவில்லை.
இந்நிலையில் டெசோ மாநாட்டை சென்னையில் நடத்த சென்னை காவல்துறை அனுமதி மறுத்ததை. இதைத் தொடர்ந்து டெசோ மாநாட்டு அமைப்பாளர்கள் சார்பில் நேற்று சனிக்கிழமையன்று அவசர மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நீதிபதி பால்வசந்தகுமார் நேற்று விசாரித்தார். இருப்பினும் நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணை நடைபெற்றிருப்பதால் தம்மால் மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி தலைமை நீதிபதி இக்பாலுக்கு ஆவணங்களை அனுப்பி வைத்தார்.
நிபந்தனைகளுடன் அனுமதி
இதையடுத்து இன்று பிற்பகல் டெசோ அமைப்பாளர்களின் மனுவை விசாரணைக்கு நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் பெஞ்ச் விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இன்று பிற்பகல் இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒய்.எம்.சி. ஏ. திடலில் டெசோ மாநாடு நடத்த சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தனர்

கருவூலப்பெட்டகமான கல்வி

கல்வியறிவு பற்றி நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் தரும் சிறப்பு செய்திகளைக் கேட்போமா!
* ஒருவர் கல்வியைத் தேடி பயணம் செய்வாராயின் அவரை அல்லாஹ் சுவனத்தின் (சொர்க்கம்) பால் கொண்டு சேர்க்கிறான்.
* மாணவர்களின் செயலை (கல்வி கற்றலை) உவந்து, வானவர்கள் தங்கள் இறக்கைகளை பூமியில் விரித்து வைக்கின்றார்கள்.
* கல்வியின் ஒரு பகுதியை ஒருவர் கற்பது, உலகத்தையும் உலகப்பொருள்களையும் விட அவருக்கு சிறந்ததாகும்.
* கல்வி கற்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் கடமையாகும்.
* கல்வியறிவு என்பது ஒரு கருவூலப்பெட்டகம். இதன் திறவுகோல் கேள்வியாகும். எனவே கேள்வி கேளுங்கள். அவ்வாறு வினவுவதால், நால்வருக்கு கூலி கிடைக்கின்றது. வினவுபவர், அறிஞர், அதனைச் செவிமடுப்பவர், இவர்களின் மேல் அன்பு வைத்திருப்பவர்.
* தன்னுடைய அறிவின்மை மீது அறிவிலியும், தன்னுடைய அறிவின் மீது அறிஞனும் பேசாமலிருந்து விடுவது சரியன்று.
* ஒரு அறிஞரின் அவையில் வீற்றிருப்பது, ஆயிரம் ரக அத்துக்கள் தொழுவதை விட, ஆயிரம் நோயாளிகளுக்கு ஆறுதல் கூறுவதையும் விட, ஆயிரம் ஜனாஸாக்களில் கலந்து கொள்தையும் விட சிறப்பு மிகுந்ததாகும்.
* இஸ்லாமை உயிர்ப்பிக்கும் லட்சிய நோக்கோடு ஒருவர் கற்கும் நிலையில், அவரை இறப்பு தழுவினால் சுவனத்தில் அவருக்கும் அன்பியாக்களுக்கும் இடையே ஒரேயொரு படித்தரம் மட்டுமே வித்தியாசமிருக்கும்

Saturday, August 11, 2012

கோழி கழிவு உரமாகிறது!கடைகளில் கழிவுகளை அகற்ற நகராட்சி சார்பில் உபகரணங்கள்!



பட விளக்கம்:-
வெல்பேர் அசோசிய‌சன் மற்றும் யூத் எக்ஸ்னோராவிற்கு கோழி கழிவுகள் மற்றும் அகற்றுவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை வளப்படுத்த‌ மரக்கன்றுகளும் கீழக்கரை நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

கீழக்கரையில் சேரும் குப்பைகளில் மூன்று ஒரு பங்கு கோழி கழிவு என கூறப்படுகிறது.நகரில் நோய் பரவுவதற்கு கோழி கழிவுகள் ஒரு காரணம் என எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கீழக்கரை நகராட்சி மற்றும் வெல்பேர் அஸோசியேசன் ,யூத் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கோழி கழிவுகளை உரமாக்க திட்டம் தீட்டியது.

இத‌ற்காக‌ கோழிக‌டை உரிமையாள‌ர்க‌ளை அழைத்து பேச்சு வார்த்தை ந‌ட‌த்தி கோழி க‌ழிவுக‌ளை வெளியில் வீச‌ கூடாது.குப்பை எடுக்கும் வாக‌ன‌த்தில் தான் த‌ர‌ வேண்டும்என‌ ந‌க‌ராட்சி சார்பில் அறிவுறுத்த‌ப்ப‌ட்ட‌து.

இத‌னைய‌டுத்து வெல்பேர் அசோசிய‌சன் மற்றும் யூத் எக்ஸ்னோரா சார்பில் கோழி கழிவுகளை க‌டைக‌ளிலிருந்து அக‌ற்றுவ‌த‌ற்கு தேவையான் உப‌க‌ர‌ண‌ங்க‌ளான‌ டிரை சைக்கிள்,குப்பை தொட்டிக‌ள்,ம‌ற்றும் கைஉரை,முக‌ உரை உள்ளிட்ட‌வை தேவை என‌ ந‌கராட்சிக்கு வேண்டுகோள் விடுக்க‌ப‌ட்டிருந்த‌து.


வெல்பேர் அசோசிய‌சன் மற்றும் யூத் எக்ஸ்னோராவிற்கு கோழி கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்கள் இன்று கீழக்கரை நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

இதற்கான‌ நிக‌ழ்ச்சிக்கு ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா த‌லைமை வ‌கித்தார்.துணை த‌லைவ‌ர் ஹாஜா முகைதீன்,க‌மிச‌ன‌ர் முஜிப் ர‌ஹ்மான்,வெல்பேர் அசோசியேச‌ன் மேலாள‌ர் அப்துல் அஜீச்,யூத் எக்ஸ்னோரா மேலாள‌ர் த‌ணிகாச்சல‌ம் ம‌ற்றும் க‌வுன்சில‌ர் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.


யூத் எக்ஸ்னோரா த‌ணிகாச்ச‌ல‌ம் கூறிய‌தாவ‌து,
கீழக்கரையில் ஏற்கென‌வே கோழி க‌ழிவுகள் மற்றும் குப்பைகளை உரமாக்கும் முய‌ற்சியில் இற‌ங்கி த‌னியார் தோட்ட‌த்தில் செய‌ல்ப‌டுத்தி வ‌ருகிறோம்.இதுவ‌ரை 105 நாட்க‌ளில் 95ட‌ன் உர‌ம் த‌யாரித்துள்ளோம்.இந்த‌ உர‌ம் அனைத்தும் ம‌ர‌ம் ம‌ற்றும் செடிக‌ளுக்கு ப‌ய‌ன்ப‌டுத்தாலாம்.

த‌ற்போது ந‌க‌ராட்சி எங்க‌ளுக்கு இந்த‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ளை அளித்திருப்ப‌து குப்பை ம‌ற்றும் கோழி க‌ழிவுக‌ளை அக‌ற்றுவ‌த‌ற்கும் மிக‌வும் உத‌வியாக‌ இருக்கும்.விரைவில் கீழ‌க்கரையில் 100 ச‌தவீத‌ம் குப்பை ம‌ற்றும் கோழி க‌ழிவுக‌ளை அக‌ற்றி உரமாக்குவோம் என்றார்

குடியரசு துணைத் தலைவராக 2-வது முறையாக பதவியேற்றார் ஹமீத் அன்சாரி

டெல்லி: நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஹமீத் அன்சாரி இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசு துணைத் தலைவராக ஹமீத் அன்சாரி பொறுப்பேற்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் 2முறை குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்தார். Hamid Ansari Sworn As 14th Vice President
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அன்சாரிக்கு 490 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங்குக்கு 238 வாக்குகளே கிடைத்தன. இதைத் தொடர்ந்து இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Friday, July 20, 2012

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தத் தயாராகும் இசைஞானி!

Ilayaraaja Perform Live Concert Us முதல் முறையாக அமெரிக்காவில் இசைக் கச்சேரி நடத்தப் போகிறார் இசைஞானி இளையராஜா.
கலிபோர்னிய நகரங்கள் மற்றும் நியூயார்க்கில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளையராஜா வெளிநாடுகளில் இரண்டு நிகழ்ச்சிகள்தான் நடத்தியிருக்கிறார். ஒன்று இத்தாலியில், மற்றொன்று துபாயில்.
ஆனால் உலகின் பல நாடுகளிலிருந்தும் இசை ஆர்வலர்கள் அவரை கச்சே செய்து தரச் சொல்லி கேட்டு வருகிறார்கள். அவரோ அரிதாகவே அத்தகைய நிகழ்ச்சிகளை ஒப்புக் கொள்கிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டுள்ளார் ராஜா.
இந்த கச்சேரியில் ராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரிணி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். முன்னணி பாடகர்கள், பாடகிகளுடன் இளையராஜாவின் குழு அமெரிக்கா புறப்படுகிறது, நவம்பர் இறுதியில்!

டிசம்பர் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் எனத் தெரிகிறது.

Thursday, July 19, 2012

ஜெயலலிதா மீண்டும் கொடநாடு சென்றார்

சென்னை, ஜூலை.19-
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று மாலை கொடநாட்டில் இருந்து சென்னை வந்தார். அ.தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ.க்.கள் கூட்டத்தில் பங்கேற்றார். இன்று காலை 8.30 மணிக்கு புதிய அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்.
 
9 மணிக்கு கோட்டையில் சென்னை போலீசாருக்கு ரோந்து வாகனங்களை வழங்கினார். 10 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.
 
பகல் 11.45 மணிக்கு போயஸ் கார்டன் திரும்பினார். மதியம் 12.30 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை விமான நிலையம் புறப்பட்டார். அங்கிருந்து விமானத்தில் கோவை சென்று கொடநாடு போனார்.

நீலகிரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி: மேலும் 4 பேருக்கு சிகிச்சை

நீலகிரி, ஜூலை 19-

உதகமண்டலம் அருகே உள்ள போர்தியாடா கிராமத்தைச் சேர்ந்த ஒரு 30 வயதான பெண், கடும் இருமல் மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அவரது குழந்தைகளுக்கும் அந்நோய் பரவியது. இது பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகளாக தென்பட்டதையடுத்து அந்த பெண்ணும், அவரது 3 குழந்தைகளும் உடனடியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். எனவே அவரிடமிருந்து பன்றிக் காய்ச்சல் நோய் தொற்றியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அதிகாரி நிர்மல்ராஜ், பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் வந்த பெண்ணின் ஊரான போர்த்தியாடா கிராமத்துக்கு விரைந்து சென்று அங்குள்ள நிலைமை பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் நோய் பரவாமல் தடுக்க டாக்டர்கள் குழுவினர் தீவிர பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்

பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மாரடைப்பால் காலமானார்

சென்னை,ஜூன்.14- நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரியவர் நடிகர் காகா ராதாகிருஷ்ணன். பழம்பெரும் நடிகரான அவர் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். உடல் நலமில்லாததால் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராதாகிருஷ்ணன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், அவர் இன்று காலமானார். சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன், மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ராதாகிருஷ்ணன். சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை

மலேசியா - சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக 200 பேரிடம் ரூ.1கோடி மோசடி

சென்னை, ஜூலை. 19-

அண்ணாநகர் “ஐ” பிளாக் 10-வது தெருவில் ரன்வே ஏர்லைன்ஸ் டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இதனை அண்ணாதுரை, செந்தில் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து செல்லும் பணியில் ஈடு பட்டு வந்தனர். இவர்கள் புதிதாக சுற்றுலா பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.

உலக சித்தர்கள் மாநாடு மலேசியாவில் நடக்கிறது. சுற்றுலா பயணிகள் இந்த மாநாட்டை கண்டுகளித்து அங்கிருந்து சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படு வார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டனர். இதற்காக ஒரு நபருக்கு கட்டணம் ரூ.45 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதில் விசா, விமான டிக்கெட் உள்பட அனைத்து செலவுகளும் அடங்கும் என்று கூறினார்கள்.

இந்த சுற்றுலாவில் செல்ல சென்னை, திருப்பூர், கோபியை சேர்ந்த 260 பேர் முன்பதிவு செய்து பணம் கட்டினார்கள். அவர்கள் அனைவருக்கும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு விமானம் மூலம் புறப்பட வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே மாலையில் அவர்களை தி.நகர் பாண்டிபஜார் தபால் நிலையம் எதிரில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் வருமாறு கூறினார்கள்.

இதையடுத்து 260 பேரும் லக்கேஜ் மற்றும் பொருட்களுடன் தி.நகர் வந்தனர். ஓட்டல் அருகில் அவர்கள் கூடிநின்றனர். அப்போது டிராவல்ஸ் உரிமையாளர் அண்ணா துரை அங்கு வந்தார். அவர் 50 பேருக்கு மட்டும் விசா கொடுத்தார். மற்றவர்களுக்கு சிறிது நேரத்தில் விசா வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் அங்கு திரும்பி வரவில்லை. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த 210 சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையே விசா கிடைத்தவர்கள் விமானம் நிலையம் சென்று மலேசியா புறப்பட்டு சென்றனர். மேலும் 20 பேர் தங்கள் சொந்த பணத்தில் மலேசியா புறப்பட்டனர். மற்றவர்கள் தி.நகரில் தவித்துக்கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் பாண்டி பஜார் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்றனர். அவர்களை இன்று காலையில் வந்து புகார் கொடுக்கு மாறு போலீசார் கூறினார்கள்.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சென்று விட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பகல் 12.30 மணியளவில் பணம் கொடுத்து ஏமாந்த 50 பேர் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களில் சில பெண்களும் உள்ளனர். அவர்கள் தாங்கள் கொண்டுவந்த சூட்கேஸ் மற்றும் பொருட்களுடன் போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.
நன்றி மாலை மலர்.

நகராட்சி மண்டல இயக்குநர் நடவடிக்கை!கீழக்கரை கடற்கரை சுத்த‌மாகிற‌து !




நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் குபேந்திரன் கீழக்கரைக்கு திடீர் வருகை தந்து பல் வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் மேலும் கடற்கரை சென்ற அவர் கடற்கரையில் குவிந்து கிடக்கும் கோழி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து மண் அள்ளும் எந்திரம்(ஜெசிபி), லாரி வரவ‌ழைக்கப்பட்டு குப்பைகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் புதிதாக கட்டப்படும் உரக்கிடங்கு, தற்போது குப்பை கொட்டப்படும் தனியார் தோப்பு, புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை பார்வையிட்டார். கமிஷனர் முஜிபுர் ரஹ்மான், தலைவர் ராவியத்துல் கதரியா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.



இதே போன்று தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு நகரை சுத்தமாக்க அரசு உதவ‌ வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நன்றி கீழக்கரை டைம்ஸ்.

கொடிகட்டிப் பறக்கும் சதை வியாபாரம்: எலும்பும், தோலும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை!

இறந்த பின்னர் மனித உடலுக்கு மதிப்பில்லை எல்லாம் ஒரு பிடி சாம்பலில் முடிந்து விடும் என்று சித்தர்களும், ஞானிகளும் சொல்லி வந்தனர். இப்பொழுது அந்த வார்த்தையை அப்படியே மறந்து விட வேண்டியதுதான். மனித உடல் பல கோடி ரூபாய் பெறுமானமுடையதாக இருக்கிறது.
இறந்த பின்னர் மனிதனின், தோலும், எலும்புகளும் களவாடப்படுகின்றனவாம். எலும்புகளையும், தோலினையும் வைத்து உறுப்பு மாற்று சிகிச்சை செய்யவும், பற்களுக்கும் பயன்படுத்துகின்றனராம். அதற்கு அந்த நோயாளியின் அனுமதியை பெறுவதில்லை என்று அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர் ஐசிஐஜெ எனப்படும் (International Consortium of Investigative Journalists) சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள். இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் அபாய மணியை ஒலிக்கவிட்டிருக்கிறது
உலகம் முழுவதும் மனித உடல் உறுப்புக்களை திருடி கள்ளச்சந்தையில் விற்று பணம் பார்க்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. எட்டு மாதங்களாக 11 நாடுகளுக்கு பயணம் செய்த புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் மனித உறுப்புக்களை திருடும் கும்பலைப்பற்றியும், அதை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்களைப் பற்றியும் எழுதியுள்ளனர்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதுபோன்ற இறந்த மனிதர்களின் தசை, எலும்புகளை புதிதாக பயன்படுத்துவதன் மூலம் ஆபத்து அதிகம் இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், ஹெச் ஐ வி மற்றும் உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் தோலும், எலும்பும் திருடப்பட்டு உயிரோடு இருப்பவர்களுக்கு பயன்படுத்தும் போது அதுவே ஆபத்தாகிவிடும் என்கின்றனர்.
இறந்துபோன மனித உடலில் இருந்து தசைகளையும், தோலினையும் எடுப்பது அவர்களின் உறவினர்களிடையே கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிவிடுகிறது. இதுபோன்ற மனித உறுப்புகளை திருடி விற்பனை செய்யும் கும்பல் பற்றி ஸ்கார்ட் கார்னி என்னும் எழுத்தாளர் ‘ரெட் மார்க்கெட்' என்னும் நூலில் ஆய்வு செய்து எழுதியுள்ளார்.
உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது தி ரெட் மார்க்கெட். (The Red Market).
உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு.
ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி, பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது. ஆனால் ஸ்கார்ட் கார்னி இந்தப் புத்தகத்தினூடே பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்தந்த நாடுகளில் உடல் உறுப்பு சம்பந்தமான திருட்டு, விற்பனை, அதில் கொள்ளை இலாபம் பார்க்கும் ஏஜெண்டுகள், கண்டுகொள்ளாமல் விடும் அரசுகள் என சகலத்தையும் போட்டு உடைக்கிறார்.
உலகம் முழுவதும் பல பணக்கார நாடுகளின் உடற் தேவைகளை அதாவது ரத்தம் முதல் எலும்பு, தசை, கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி வரை தேவைப்படும் அனைத்தையும் ஈடு செய்வது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தான், குறிப்பாக இந்தியா. அதோடு இலவசச் சேவையாக பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சோதனை எலிகளாகவும் இருக்கிறார்கள் இந்திய மக்கள்.
‘தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்' என்ற சராசரி சந்தைப் பொருளாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. பணத்தின் முன் ஒரு ஏழையின் உடல் என்பது ரத்தமும் தசையுமான விற்பனைப் பண்டம்.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள் முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றனவாம். சுடுகாடுகளில், புதைக்கப்படும், எரிக்கப்படும் பிணங்களை திருடி பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அந்த பதப்படுத்தும் முறை கொடூரமாக இருக்கும். பின்பு எலும்புகளை சுத்தமாக பாலிஷ் செய்து பேக்கிங் செய்து விடுவார்கள்.
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. அமெரிக்காவில் தான் இந்தச் சட்டம் கடுமையானது, அதே அமெரிக்க அரசு இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக் கண்டுகொள்வதில்லை. இந்த எலும்புத் தொழிற்சாலைகள் நேர்த்தியான கார்ப்பரேட்டுகளாக இயங்குகின்றன.
"மூன்றாம் உலக நாடுகளின் உயிர்கள் எப்பொழுதும் மலிவானவை. இதுதான் காலனியச் சிந்தனை". அதை நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களையும் தன் புத்தகத்தில் அனைவருக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார். இதற்காக நாடு நாடாக, பல ஊர்கள் சுற்றி உடல் உறுப்புகள் பற்றிய சந்தையைப் பற்றி தகவல்கள் திரட்டி நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் முன்வைக்கிறார் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி
உடல் விற்பனை என்பது, குழந்தைகள் கடத்தல், பெண்கள் விற்பனை, பெண்களின் கரு முட்டை விற்பனை, இரத்தம், கிட்னி, இதயம் உள்ளிட்ட இதர உடல் உறுப்புக்கள், இறந்தவர்களின் தோல், எலும்பு, வாடகைத் தாய் முதல் திருப்பதியில் இருந்து ஏற்றுமதி ஆகும் தலை முடி வரை அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் கோடி ரூபாய் பெறுமானமுள்ளவர்கள்தான். இனிமேல் யாரையாவது திட்டும்போது பைசா பெறாதவனே என்று திட்டாதீர்கள் புரிகிறதா?

Monday, July 16, 2012

விமானிகளின் போராட்டத்தை நிறுத்துங்கள்: ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு கோர்ட் அறிவுரை

புதுடெல்லி, ஜூலை 16-

ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு டெல்லி ஐகோட்டில் நடைபெற்று வருகிறது. இம்மாத துவக்கத்தில் விமானிகளின் கோரிக்கையை ஏற்பதாகவும், பணி நீக்கம் செய்யப்பட்ட 100 விமானிகளை மீண்டும் பணியில் சேர்ப்பதாகவும் ஏர்இந்தியா உறுதி அளித்தது.

இதையடுத்து தங்கள் போராட்டத்தை விமானிகள் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். ஆனால் நீக்கப்பட்ட விமானிகள் பணியில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பணி நீக்கம் செய்யப்பட்ட விமானிகளை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போராடும் விமானிகளை சமாதானம் செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தினார்.

பீகாரில் 4 மாத ஆண் குழந்தையை நேபாள தம்பதிக்கு ரூ.62க்கு விற்ற தாய்

பாட்னா: பீகார் மாநிலத்தில் வறுமையின் கொடுமையை தாங்க முடியாமல் பெண் ஒருவர் தனது 4 மாத ஆண் குழந்தையை வெறும் ரூ.62க்கு விற்றுள்ளார்.
பீகார் மாநிலம், அராரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷன்னு காத்தூன்(35). வறுமையில் வாடும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கிராமத்தில் இருந்து புறப்பட்டு இந்திய-நேபாள் எல்லையில் உள்ள போர்ப்ஸ்கஞ்சிற்கு சென்றார். அங்குள்ள ரயில் நிலையத்தில் குழந்தைகளுடன் தங்கினார். பின்னர் தனது 4 மாத ஆண் குழந்தையை நேபாளத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ரூ.62க்கு விற்றுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஷன்னுவைப் பிடித்து விசாரித்தபோது தான் குழந்தையை விற்கவில்லை என்றும், வறுமையில் வாடும் தன்னால் அதை சரியாகப் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால் ஒரு தம்பதிக்கு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவருடயை மகள் சபினாவோ(8) தனது தம்பி பாப்பாவை நேபாளத்தைச் சேர்ந்த தம்பதிக்கு தனது அம்மா ரூ.62க்கு விற்றதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளாள்.
இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த செய்யது அஹ்சான் அலி கூறுகையில், ஷன்னு தனது குழந்தையை நேபாளத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கொடுத்துவிட்டார். அவர் அந்த தம்பதியிடம் இருந்து பணம் எதுவும் வாங்கவில்லை என்று என்னிடம் தெரிவித்தார் என்றார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்தும் அதை உதறிவிட்டு பொறியியல் படிப்புகளில் சேர்ந்த 29 மாணவர்கள்

சென்னை: எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்தும் அதை உதறிவிட்டு 29 மாணவர்கள் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கலந்து கொண்டு சீட் கிடைத்த 29 மாணவர்கள் தங்கள் சேர்க்கைக்கான கடித்தத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு பி.இ. கலந்தாய்வில் கலந்து கொண்டு பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் கூறுகையில்,
எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்த 29 மாணவர்கள் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அவர்கள் எலக்ட்ரானிக் அன்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், ஐ.டி. பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளனர்.
நேற்று மட்டும் 13 மாணவர்கள் தங்களின் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான கடிதங்களை ஒப்படைத்துவிட்டு பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அவர்கள் கொடுத்த சேர்க்கைக் கடிதங்கள் மருத்துவ சேர்க்கை குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட் ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டது. இதில் 198.5க்கு குறைவாக கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற முற்பட்ட வகுப்பு மாணவர்கள், 197.5க்கு கீழ் கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற பிற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் சுயநிதி கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்கள் தான் கிடைத்தன.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க கல்விக் கட்டணம் ரூ.2.80 லட்சம் உள்பட ஆண்டுக்கு ரூ. 5.5 லட்சம் செலவாகும். அவ்வளவு பணம் கட்ட முடியாமல் தான் அந்த 29 மாணவர்களும் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
பி.இ., பி.டெக். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் கடந்த 3 நாடகளில் 1,721 பேர் கலந்து கொள்ளவில்லை. மேலும் கலந்தாய்வுக்கு வந்திருந்தவர்களில் 46 பேர் எந்த பாடப்பிரிவையும் தேர்வு செய்யவில்லை. இதனால் 195 மற்றும் அதை விடக் குறைவாக கட் ஆஃப் மதிப்பெண் வாங்கியுள்ளவர்களுக்கு சிறந்த க்லலூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அதே சமயம் அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ் உள்ளிட்ட முக்கிய பாடப்பிரிவுகளுக்கான இடங்கள் நிரம்பிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறது பாக். கிரிக்கெட். அணி - டிசம்பரில் "பரபரப்பான" போட்டிகள்

டெல்லி: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. டிசம்பரில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போட்டிகள் நடைபெற உள்ளன.
இத்தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்திருக்கிறது. இந்திய அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் மோத உள்ளது.
2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டது. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இரண்டு அணிகளும் மோதின.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தீவிர முயற்சியால் மீண்டும் இருநாடுகளிடையேயான "பரபரப்பான" கிரிக்கெட் உறவு துளிர்விட்டுக் கொண்டிருக்கிறது.

Wednesday, July 11, 2012

ராமநாதபுரம் அருகே இளம்பெண் கடத்தல்: வாலிபர் மீது தந்தை புகார்

ராமநாதபுரம், ஜூலை 10-

ராமநாதபுரத்தை அடுத்துள்ள அத்தியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, கூலி தொழிலாளி. இவரது மகள் நந்தினி (வயது22). இவர் பள்ளி படிப்பை முடித்து விட்டு வீட்டில் தனது பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.

நேற்று வீட்டில் இருந்த நந்தினி திடீரென்று மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பல இடங்களில் நந்தினியை தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தட்சிணா மூர்த்தி, தேவிபட்டினம் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில், எனது மகளை பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரின் மகன் ஆதம் அலி கடத்தி சென்று விட்டார். எனவே அவரிடம் இருந்து எனது மகள் நந்தினியை மீட்டுதர வேண்டும் என்று கூறி இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நந்தினியை தேடி வருகிறார்கள்.

போரில் 60 ஆயிரம் பேரை கொன்று குவித்த காங்கோ ராணுவ தளபதிக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை: சர்வதேச கோர்ட்டு தீர்ப்பு

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள இட்டூரி மாகாணத்தில் கடந்த 1999 முதல் 2003-ம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நடந்தது. அதில் ஈடுபட்ட பொதுமக்களை அடக்கி ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டது. அதில், ஈடுபட்ட ராணுவத்துக்கு தாமஸ் லுயின்கா டிலோ தளபதி ஆக இருந்தார்.
 
இவர் இட்டூரி மாகாணத்தில் முகாமிட்டு அப்பகுதியில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை கடத்தி வந்து கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்தார்.   அவர்கள் மூலமே இட்டூரி பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தினார். அதில் 60 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
 
இச்சம்பவத்துக்கு உலக நாடுகளும் ஐ.நா.சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட லூயின்காவை ஐ.நா. கைது செய்து சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில் அவர் குற்றவாளி என கடநத மார்ச் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் நேற்று அவருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி எலிசபெத் ஒடியோ பெனியோ உத்தரவிட்டார். இதுவே சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் வழங்கப்பட்ட முதல் தண்டனையாகும்.
 
இந்த தண்டனையை மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன. ஆனால் அவரது தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக காங்கோ ராணுவம் அறிவித்துள்ளது

எதிர்கட்சியினரை கைது செய்வதிலேயே போலீசார் குறியாய் உள்ளனர்: கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை: எதிர்கட்சியினர் மீது துரித நடவடிக்கை எடுக்கும் காவல்துறை ஆளுங்கட்சியினர் மீதான வழக்குகளை மட்டும் இழுத்தடித்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பரஞ்சோதி மீதான வழக்கில் ஜூலை 9ம் தேதி கண்டிப்பாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தனர். ஆனால் வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரிக்கும் உதவி ஆணையர் விடுமுறையில் சென்றுவிட்டதாகவும், பரஞ்சோதியின் கையெழுத்துப் பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
இதில் இருந்தே அதிமுகவினர் என்றால் காவல்துறையினர் எந்த அளவிற்கு நீதிமன்றத்தையும், நீதியையும், சட்ட விதிமுறைகளையும் இழுத்தடித்து வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நித்தியானந்தாவுக்கு தண்டனை கிடைத்தால் தூக்கிட வேண்டியதுதான்... மதுரை ஆதீனம்

மதுரை: அமெரிக்க கோர்ட்டின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அந்தக் கோர்ட்டில் நித்தியானந்தாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் அவர் இளைய ஆதீனமாக தொடர முடியாது. நீக்கப்படுவார் என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.
இதுதொடர்பாக வார இதழ் ஒன்றுக்கு மதுரை ஆதீனம் பேட்டி அளித்துள்ளார். அதிலிருந்து சில துளிகள்...
நான் நித்தியானந்தாவின் பிடியில் சிக்கி இருப்பதாக சொல்லப்படுவது கற்பனை. என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன். என்னை அவர் வசியம் செய்யவில்லை. வசிய மைகள் என்னை நெருங்காது. வசியம் செய்யவும் முடியாது. எனக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
சங்கட்டமா இருக்குல்ல...
நித்தியானந்தாவோடு நான் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் எல்லோரும் அவர் மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றியே கேட்கிறார்கள். அப்போது எனக்கு சங்கடமாக இருக்கும். அதனால்தான் அவரோடு உங்களை சந்திக்கும் போது உற்சாகமாக நான் இருக்க முடியவில்லை.
இளைய ஆதீனத்தை தேர்வு செய்வது குறித்து என்னைத் தவிர யாரும் முடிவு எடுக்க முடியாது. வேறு யாரும் தலையிடவும் கூடாது. நித்தியானந்தா நியமனத்தில் ஆதீன மரபுகள் ஒரு போதும் மீறப்படவில்லை. அவருக்கு முறைப்படி தீட்சை கொடுத்து தான் இளைய ஆதீனமாக நியமித்தேன். மற்ற ஆதீனங்கள் இந்த பிரச்சினை குறித்து தங்களிடம் ஆலோசிக்க வரும்படி என்னை அழைத்தனர். நான் நித்தியானந்தாவுடன் தான் வருவேன் என்று சொன்னதால் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.
பல ஆதீனங்களுக்கு பிரச்சினைகள் வந்த போது அவர்களுக்கு நான் ஆலோசனைகள் வழங்கி இருக்கிறேன். நானும் பல ஆதீனங்களின் ஆலோசனைகளை கேட்டிருக்கிறேன். நித்தியானந்தா பிரச்சினையால் அவர்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டுள்ளது.
ஆதீனத்தில் புலித்தோல் இருக்கிறது, மான் தோல் இருக்கிறது, யானைத்தந்தம் இருக்கிறது என்று கோர்ட்டில் வழக்கு போட்டார்கள். கோர்ட்டு உத்தரவால் ஆசிரமத்துக்குள் போலீஸ் நுழைந்தது. ஆனால் சோதனையில் எதையும் எடுக்கவில்லை. மரகத லிங்கம் இருந்தாக சொல்வதும் கற்பனை.
நித்தியானந்தா கொடைக்கானலில் இருக்கிறார். அவர் திரும்பி வந்தாலும் இதே உற்சாகத்துடன்தான் இருப்பேன். அவர் மீது உள்ள பாலின புகார் வழக்குகளை அவரே சந்தித்துக் கொள்வார். இதில் ஆதீனம் தலையிடாது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நீதிமன்றத்தில் அவர் மீது போடப்பட்ட மோசடி வழக்கில் ஜூலை 19-ந்தேதி தீர்ப்பு வரும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தால், அவரை நீக்குவது பற்றி முடிவு செய்து அறிவிப்பேன். ஏன் என்றால் தண்டனைக்கு ஆளாகிறவர்கள் இளைய ஆதீனம் பதவியில் தொடர முடியாது. ஆகவே, எந்த முடிவுக்கும் நான் தயங்க மாட்டேன் என்று சொல்லியுள்ளார் மதுரை ஆதீனம்.
கலிபோர்னியா கோர்ட்டில், நித்தியானந்தாவின் தியான பீடங்கள் மிகவும் மோசமான முறையில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கில் தண்டனை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்கள், சிறுமிகளை கடத்துவதில் தமிழ்நாடு 'நம்பர் ஒன்'!

கோவை: பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தலில் தென்னகத்திலேயே தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணப் பதிவகம் தெரிவித்துள்ளது.
2011ம் ஆண்டு பெண்கள் அதிக அளவில் கடத்தப்பட்டது தமிழகத்தில்தானாம். நான்கு தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் பெண்கள் கடத்தல் நடந்துள்ளதாம்.
தமிழகத்தில் சிறுமிகள் உள்பட பெண்கள் கடத்தல் சம்பவங்கள் 1743 நடந்துள்ளது. ஆந்திராவில் இது 1612 ஆகவும், கர்நாடகத்தில் 1395 ஆகவும், கேரளாவில் 299 ஆகவும் இருந்தது.
தேசிய அளவில் உ.பிக்குதான் கடத்தலில் முதலிடம் கிடைத்துள்ளது. அங்கு மொத்தம் 7525 வழக்குகள் இதுதொடர்பாக பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் மேற்கு வங்கமும், 3வது இடத்தில் பீகாரும் உள்ளன.
தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 187 கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. சேலத்தில் 108, கடலூரில் 100 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தலைநகர் சென்னையில் 41 வழக்குகள் பதிவாகியுள்ளன. கோவையில் இது 39ஆக இருந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்கள், சிறுமிகள் கடத்தல் தவிர மற்ற கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை 241 ஆக இருந்தது. இதையும் சேர்த்தால் மொத்தம் 1984 கடத்தல் சம்பவங்கள் கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்துள்ளன.
குடும்பப் பிரச்சினை, கல்யாணம் செய்து தர மறுப்பது, பணம் கேட்டு மிரட்ட என்று பல்வேறு காரணங்களுக்காக கடத்தல் சம்பவங்கள் பொதுவாக நடக்கின்றன. கள்ளக்காதலில் நடைபெறும் கடத்தல்களும் கணிசமாக உள்ளதாக தேசிய குற்ற ஆவணப் பதிவகம் கூறுகிறது.nanrithatsthamil

Saturday, July 7, 2012

வரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ் ;டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா

வாஷிங்டன்: ஏய் வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய் என்ற பேச்சுத்தான் தற்போது எங்குப்பார்த்தாலும் தகவல் பரிமாறக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் இருந்தால் வரும் 9 ம்தேதி அம்பேல்தான் என்கின்றனர். கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள்.

டி.என்.எஸ்.,( டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது. தற்போது டி.என்.எஸ்.,சேஞ்சர் ( அலூரியன் மால்வேர் ) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயல் இழக்கச்செய்யும் நாச வேலையில் அயல்நாட்டவர்கள் 7 பேர் இறங்கினர் . இது கடந்த நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ., மாற்று சர்வரை நிறுவி உதவியது. இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9 ம் தேதி செயல்பட துவங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்ச கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியுங்கள் : எனவே டி.என்.எஸ்., சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தங்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் http://www.dns-ok.us/ கிளிக் செய்தால் பாதிக்கப்டாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும். பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். வரும் 9 ம்தேதி என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள்.



வைரசை முற்றிலுமாக அழிக்க : ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த
வைரசை நீக்குவது எப்படி என இங்‌கே விளக்கம் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு: DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.

மேக்(Mac) கணினிகளுக்கு: மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளலாம்.

இனி 'குடிகார நாடு என்கிற தமிழ்நாடு' என்பதே பொருத்தமாக இருக்கும் - டாக்டர் ராமதாஸ்

சென்னை: தமிழகத்தை இனி குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும், என்றார் டாக்டர் ராமதாஸ்.
மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் பா.ம.க. சார்பில் வரும் 11-ம் தேதி நடக்கிறது. இப்போராட்டத்தை விளக்கி கூடுவாஞ்சேரி கூட்ரோடு பகுதியில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
இளைஞர்களை கெடுக்கும், இளம் விதவைகளை உருவாக்கும், விபத்துக்களை ஏற்படுத்தும், உழைக்கும் மக்களை சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும் குடி மக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு வருகிற 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் நடைபெற உள்ளது.
நாங்கள் மக்களை பற்றி கவலைபடுகிறோம். சாராயம் குடிக்க கூடாது என்று மக்கள் மத்தியில் சொல்கிறோம். இளைஞர்களிடத்தில் சொல்கிறோம். சாராய கடைகளை மூடு என்று சொல்கிறோம். அதற்காக போராட்டம் நடத்துகிறோம்.
சமூக பிரச்சினைகளுக்கான கூட்டம், வாழ்கின்ற சமூகத்தில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இளைஞர் பாதிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கவலை கரிசனம் நமக்கு மட்டும்தான் உண்டு. வேறு யாருக்கும் இருக்காது. கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி, அடுத்த வருடத்திற்கு ஒரு இலக்கு வைத்துள்ளனர். 2013 ல் ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் கிடைக்கும்.
தெரு தெருவாக சாராய கடைகளை திறந்து குடி மக்களாக ஆக்கி விட்டார்கள். தமிழகத்தையே சீரழித்து விட்டார்கள். தமிழ்நாட்டை குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்றால்தான் இனி பொருத்தமாக இருக்கும்.
தமிழகத்தில் மது வெள்ளமாக ஓடுகிறது. அரசியல்வாதிகள் பணத்தில் மிதக்கிறார்கள். இந்த பிரச்சினையை தமிழ் நாட்டில் பா.ம.க. மட்டும்தான் எடுத்துச் சொல்கிறது. பா.ம.க. 1989 ல் உதயமானது. 2 மாதம் கழித்து அக்டோபர் 2 ந் தேதி காந்தி பிறந்த நாளன்று பெண்களை கொண்டு தமிழ்நாடு முழுவதும் மது ஒழிப்பு போராட்டம் நடத்தினோம். நமது கட்சிக்கு சமூகத்தை பற்றிய கவலை இருக்கிறது.
பா.ம.க. சமூக இயக்கம். இளைஞர்களுக்கு வழி காட்டுவதைத் தொடர்ந்து 22 வருடமாக செய்து கொண்டிருக்கிறது.
இன்றைக்கு 13 வயது சிறுவன் கூட குடிக்கின்றான். சாராய கடைகளை இவர்கள் மூட மாட்டார்கள். நாம்தான் மூட வேண்டும். இளைஞர்களை கெடுக்கும், உழைக்கும் மக்களைச் சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும், குடிமக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் அறவழியில் நடைபெற உள்ளது.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

ரகசிய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு சிங்களப் படையினரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்: வைகோ

 Scrap Secrete Deal With Sl Militay
சென்னை: இலங்கை ராணுவத்துடனான அனைத்து ரகசிய ஒப்பந்தங்களையும் ரத்து செய்துவிட்டு சிங்களப் படையினரை இந்தியாவில் இருந்து உடனே வெளியேற்ற வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈழத்தமிழர்களின் ரத்தம் தோய்ந்த கரங்களுடன் இயங்கி வரும் சிங்கள விமானப் படையினரை, தாம்பூலம் வைத்து வரவழைத்து உபசரித்து, பயிற்சி கொடுக்கின்ற அக்கிரமத்தை, இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் சிங்களவர்களுக்கு பயிற்சி கொடுப்பதை அறிந்து தமிழகத்தில் கண்டனமும், எதிர்ப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சிங்கள விமானப்படையினருக்கு பெங்களூரில் எலகங்கா விமானப்படை தளத்தில் தற்போது பயிற்சி கொடுக்கப்படுகிறது.
அண்மையில் இந்திய-இலங்கைக் கடற்படைப் பயிற்சி, திருகோணமலை கடற்கரைக்கு அருகில் நடத்தப்பட்டது. இலங்கை கடற்படைக்கு இரண்டு கப்பல்களையும் கட்டித் தருகின்ற வேலையிலும் இந்தியா ஈடுபட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு உண்மை வெட்டவெளிச்சமாகி விட்டது.
சிங்கள அரசு நடத்திய இனக்கொலைக்கு, இந்திய அரசுதான் உடந்தை என்ற உண்மை அம்பலமாகி விட்டது. இந்தியாவின் மத்திய அரசுக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சி, அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளுமே, இந்தப் பழிக்கு பொறுப்பாளிகள் என்பதை தமிழக மக்களும், இந்திய மக்களும் அறிந்து கொள்வார்கள்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் செய்து வருகின்ற தொடர் துரோகத்தை இந்திய அரசு இத்துடனாவது நிறுத்திக் கொண்டு, சிங்கள விமானப் படையினரை, இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும். இலங்கை விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவத்தோடு, ரகசியமாகச் செய்து உள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ அதில் குறிப்பிட்டுள்ளார்.நன்றி தேட்ஸ் தமிழ்.

Thursday, July 5, 2012

குற்றாலத்தில் சாரல் மழையுடன் களை கட்டும் சீசன் - கீழக்கரைவாசிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் சாரல் மழையுடன் களை கட்டும் சீசன் - கீழக்கரைவாசிகள் மகிழ்ச்சி !

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் குற்றாலத்தில் சீசன் களை கட்ட துவங்கும். தற்போது கொஞ்சம் தாமதமாக சீசன் துவங்கி இருக்கிறது. குற்றாலம் நகரமெங்கும் சாரல் மழை பெய்து, இதமான சீதோஷ்ணம் நிலவுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இம்முறை கேரளாவில் தாமதமாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், அங்கும் கூட சாரல் மழையே பெய்கிறது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.




ஒவ்வொரு ஆண்டும் குற்றாலம் சீசன் துவங்கியதுமே, கீழக்கரையிலிருந்து, குற்றாலம் நோக்கி அதிகளவில் நண்பர்களுடனும், குடும்ப அங்கத்தினர்களும் சென்று தென் பொதிகையின் மூலிகை நீரில் மகிழ்ச்சி குளியல் போடுவது வழக்கம். தற்போது துவங்கியுள்ள சீசனால், கிழக்கரைவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே கீழக்கரையிலிருந்து, பலர் வாகனங்களில், இப்பொழுதே குற்றாலம் நோக்கி  படையெடுக்க ஆராம்பித்துள்ளனர். 

இங்கிலாந்து பிரதமரை திட்டி, வரிசையில் நிற்க வைத்த வெயிட்ரஸ்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை காபி கடையில் வேலைப் பார்க்கும் பெண் ஒருவர் அவர் யார் என்று தெரியாமல் 10 நிமிடம் வரிசையில் நிற்க வைத்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பிளைமவுத்தில் நடந்த ஆயுதப்படை தின விழாவில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு காபி கடை அருகே காரை நிறுத்தி காபி வாங்கச் சென்றார். கடைக்குள் சென்று காபி கேட்ட கேமரூனை அங்கு வேலைப் பார்க்கும் பெண் ஷீலா தாமஸ் அவர் பிரதமர் என்பது தெரியாமல் அவரிடம் நான் பிசியாக இருப்பது தெரியவில்லையா, வரிசையில் நில்லுங்கள் என்று திட்டினார். இதையடுத்து கேமரூன் வரிசையில் நின்றார். பிறகு கடைக்கு வெளியே வந்து நின்று கொண்டிருந்தார்.
அதற்குள் அவருடன் வந்த பாதுகாவலர்கள் வேறொரு கடையில் இருந்து டீ வாங்கிக் கொண்டு வந்து கேமரூனுக்கு கொடுத்தனர். அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள் ஆஹா, பிரதமர் இங்கு வந்து டீ குடிக்கிறாரே என்று அவரை மரியாதையுடன் பார்த்துச் சென்றனர். அதன் பிறகு கேமரூன் மீண்டும் கடைக்குள் சென்றார். ஆனால் அவர் வேறு கடையில் டீ வாங்கிக் குடிப்பதைப் பார்த்த ஷீலா தன் கடையில் ஏன் வாங்கவில்லை என்று அவரை மீண்டும் திட்டினார்.
இது குறித்து ஷீலா கூறுகையில்,
முதலில் என் கடைக்கு வந்திருப்பவர் கேமரூன் தான் என்று எனக்கு தெரியவில்லை. நான் வேறு ஒருவருக்கு உணவுப் பொருட்கள் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அதனால் நான் அவரை கவனிக்கவில்லை. பார்சல் காபி கிடைக்குமா என்று கேமரூன் கேட்டார். அதற்கு நான், வேறு ஒருவருக்கு சர்வ் செய்து கொண்டிருக்கிறேன் என்றேன். உடனே அவர் சாரி சொன்னார். அதன் பிறகே அவர் பிரதமர் என்பதை எனக்கு சிலர் தெரிவித்தனர்.
கேமரூனை வெயிட்ரஸ் ஒருவர் அடையாளம் தெரியாமல் பேசியது இது ஒன்றும் முதல் தடவை இல்லை. ஏற்கனவே அவர் குடும்பத்துடன் டஸ்கனியில் விடுமுறையைக் கொண்டாடச் சென்றபோது அங்கு ஒரு உணவகத்தில் வேலை பார்க்கும் பெண் நான் பிசியாக இருக்கிறேன், நீங்களே உங்கள் பானங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்

தமிழகத்திலேயே மோசமான ரோடு சென்னைதானாம்...!

சென்னை: தமிழகத்திலேயே மோசமான சாலைகளாக சென்னை மாநகர சாலைகள் திகழ்வதாக தேசிய குற்ற ஆவணப் பதிவகம் கூறியுள்ளது.
சென்னை மாநகரில் 2011ம் ஆண்டு மொத்தம் 9845 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாம். இரண்டாவது இடத்தை நாட்டின் தலைநகர் டெல்லி பிடித்துள்ளது. அங்கு 6065 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. பெங்களூர் நகரம் 6031 விபத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
தேசிய குற்ற ஆவணப் பதிவகம், 2011ல் நடந்த சாலை விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டிலேயே சென்னையில்தான் அதிக அளவில்சாலை விப்ததுக்கள் நடப்பதாகவும், சென்னை மாநகர சாலைகள்தான் மோசமானதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 53 நகரங்களில் சென்னையில்தான் அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடக்கின்றனவாம். கடந்த 2010ம் ஆண்டு மொத்தம் 5123 விபத்துக்களைத்தான் சென்னை சந்தித்தது. ஆனால் இது 2011ம் ஆண்டு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.
இருப்பினும் சாலை விபத்துக்களில் மரணமடைவோரின் எண்ணிக்கை சென்னையில் சற்று குறைவாக உள்ளது. சென்னையில் 2011ல் நடந்த சாலை விபத்துக்களில் 1399 பேர் இறந்துள்ளனர். டெல்லியில் இது 1679 பேராக இருந்தது.
சென்னை சாலை விபத்துக்களில் காயமடைந்தோர் எண்ணிக்கை அதேசமயம் அதிகமாக உள்ளது. விபத்துக்களில் காயமடைந்தோர் எண்ணிக்கை 7898 பேராக இருந்தது. இதில் 6280 பேர் ஆண்கள், 1618 பேர் பெண்கள் ஆவர்.
டூவீலர்களில் சென்று விபத்துக்குள்ளானோரின் எண்ணிக்கை 341 ஆக இருந்தது. தனியார் லாரிகளால் ஏற்படும் விபத்து 266, கார்களால் விபத்து 159, தனியார் டெம்போக்கள் மற்றும் வேன்களால் ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை 133 ஆக இருந்தது.
அரசு வாகனங்களால் அதாவது பஸ்கள் உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை 112 ஆகும்.
சைக்கிளால் கூட சென்னையில் விபத்து நடந்துள்ளது. அதாவது ஒரே ஒரு விபத்து நடந்துள்ளது. அதேசமயம், பாதசாரிகளால் எந்த விபத்தும் நடந்ததில்லை. அதாவது, நடந்து போனால் நல்லது என்பது இதன் சாராம்சம்.
ராத்திரி 9 மணியிலிருந்து நள்ளிரவுக்குள்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கின்றன. அதாவது 1626 விபத்துக்கள் இந்த நேரத்தில்தான் நடந்துள்ளன. மாலை 3 மணி முதல் 6 மணி வரை 1614 விபத்துக்கள் நடந்துள்ளன.
தமிழகத்திலேயே மோசமான சாலைகள் இருப்பதும் சென்னையில்தானாம். இதற்கு அடுத்து கோவையில் 1131 விபத்துக்கள் நடந்துள்ளன. மதுரையில் 685 விபத்துக்களும், திருச்சியில் 781 விபத்துக்களும் நடந்துள்ளன.

பத்மநாபசாமி கோவில் 5வது ரகசிய அறை திறக்கப்பட்டது-10 லட்சம் கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல்!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலின் 5வது ரகசிய அறை கடும் முயற்சிக்குப் பின்னர்திறக்கப்பட்டது. அந்த அறையில் சுமார் 10 லட்சம் கோடி மதிப்பிலான, தங்க, வைர நகைகள் குவிந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவனந்தபுரத்தின் மையத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி அளவுக்கு பொக்கிஷம் குவிந்திருப்பதாகவும், இதை சிலர் அபகரித்து வருவதாகவும், எனவே இதைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அனைத்து அறைகளையும் திறந்து பார்க்க உத்தரவிட்டது. அதன்படி அந்த அறைகள் திறந்து பார்க்கப்பட்டன. அதில் 5வது அறை மட்டும திறக்கப்படாமல் இருந்தது. அதன் பூட்டுக்களைத் திறப்பதில் பெரும் சிக்கல் இருந்ததால் அந்த அறை மட்டும் திறக்காமல் விடப்பட்டிருந்தது. இருப்பினும் மற்ற அறைகளில் இருந்த நகைகள், பொக்கிஷத்தின் மதிப்பு பல லட்சம் கோடி என்று தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது 5வது அறையும் திறக்கப்பட்டு விட்டது. அதன் பூட்டை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் திறந்து உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவினர் உள்ளே சென்று ஆய்வு நடத்துகின்றனர். அந்த அறை முழுக்க தங்க, வைர நகைகள் குவிந்து கிடக்கிறதாம். 300 தங்கக் குடங்கள் உள்ளே வைக்கப்பட்டிருந்தன. அதேபோல பெரிதும் சிறிதுமாக 2000 வைர நகைகள் இருக்கிறதாம். இவற்றை மதிப்பிடும் பணியை முடிக்க 6 மாதம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அங்குள்ள மொத்த நகைகளின் மதிப்பு ரூ. 10 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரே அறையில் இவ்வளவு பெரிய அளவில் நகைகள் குவிந்து கிடப்பதாக வந்துள்ள செய்தியால் மீண்டும் பத்மநாபசாமி கோவில் பரபரப்பாகியுள்ளது.
ரகசிய அறைகள் திறக்கப்பட்டு அங்கு பெருமளவில் பொக்கிஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுமே கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது நினைவிருக்கலாம்.நன்றி தேட்ஸ் தமிழ்

பாகிஸ்தானில் குரானை எரித்தவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்தவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவல்பூரில் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை தீ வைத்து எரித்தார் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே இந்த தகவல் ஊர் முழுவதும் காட்டுத் தீ போன்று பரவியது.
இதையடுத்து ஆத்திரத்துடன் காவல் நிலையத்திற்கு சென்ற அப் பகுதியினர் அந்த நபரை ஒன்று போலீசார் தங்கள் கண் முன் கொல்ல வேணடும், அல்லது தாங்கள் கொல்வோம் என்று கூறினர்.
அந்த நபரை வெளியே விட போலீசார் மறுத்தவுடன் அந்த கும்பல் காவல் நிலையத்தை தாக்கியது. இதையடுத்து போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசி கும்பலை கலைக்க முயன்றனர்.
ஆனால் அவர்கள் போலீசாரைத் தாக்கிவிட்டு அந்த நபரை அங்கிருந்து இழுத்துச் சென்றது. அவர் எந்த இடத்தில் வைத்து குர்ஆனை எரித்தாரோ அதே இடத்தில் அவரை நிற்க வைத்து அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றனர். பாகிஸ்தானில் இஸ்லாமை அவமதித்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இது குறித்து போலீசார் கூறுகையில், குர்ஆனை எரித்ததற்காக கைது செய்யப்பட்ட நபர் எங்கள் காவலில் இருக்கையில் தானாக பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தார். அவரைப் பார்த்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார் என்றனர்.

விஜய் ரசிகர்களை போட்டுத் தாக்கிய விஜயகாந்த் ரசிகர்கள்!

சென்னை: சென்னை அருகே விஜய் ரசிகர்களை தேமுதிகவைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரங்கிமலை ஒன்றிய விஜய் ரசிகர் மன்றம் சார்பில் மக்கள் மன்றம் என்ற பெயர் பலகை திறப்பு விழா சென்னை அருகே பெருங்களத்தூர் குண்டுமேட்டில் நேற்று நடைபெற்றது. பரங்கிமலை விஜய் ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். விழா நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த தேமுதிகவினர் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்தனர். அதைப் பார்த்த தேமுதிகவினர் ஓட்டம் பிடித்தனர்.
தேமுதிகவினர் நடத்திய தாக்குதலில் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
விஜய் ரசிகர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேமுதிகவைச் சேர்ந்த 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.நன்றி தேட்ஸ் தமிழ்.

கேஸ் சிலிண்டர் வெடிப்பு மரணங்கள் தமிழ்நாட்டில் அதிகம்: முதலிடத்தில் குஜராத்!

தமிழ்நாட்டில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து கடந்த ஆண்டு மட்டும் 586 பெண்கள் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணையத்தின் புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவில் கேஸ் சிலிண்டர் விபத்து நடந்த மாநிலமாக குஜராத் உள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் 735 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வருமாறு:-
கேஸ் ஸ்டவ் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தும், கேஸ் கசிவினால் ஏற்படும் தீ விபத்திலும் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்தபடி செல்கிறது. பல வழிகளில் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனாலும், விபத்துகள் குறைந்த பாடில்லை.
கடந்த ஆண்டில் குஜராத்தில் ஸ்டவ் வெடித்தும், எரிவாயு சிலிண்டர் வெடித்தும் பாதிக்கப்பட்டவர்கள் 762 பேர். இவர்களில் 735 பேர் பலியாகி விட்டனர். தமிழ்நாட்டில் 632 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில் 586 பேர் இறந்து போயினர். மராட்டியத்தில் 541 பேரும், ஆந்திராவில் 426 பேரும், கர்நாடகத்தில் 386 பேரும் பலியாகி உள்ளனர். கேரளாவில் மட்டுமே இதன் எண்ணிக்கை குறைவாக (52 பேர்) உள்ளது.
வீட்டு சமையல் அறையில் பயன்படுத்தப்படும், எரிவாயு சிலிண்டர், கேஸ் ஸ்டவ் ஆகியவை பல நேரங்களில் எமனாக மாறி விடுகின்றன. அவ்வப்போது உயிர்களை பலிவாங்கி விடுகின்றன. அந்த வகையில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இது தொடர்பாக,
ஸ்டவ் வெடித்தும், எரிவாயு சிலிண்டர் வெடித்தும் உடல் கருகி பலியானவர்களில் 82 சதவிகிதம் பேர் பெண்கள் ஆவர். இதில் பெரும்பாலும் விபத்தாக இருந்தாலும், அவை வரதட்சணை பிரச்சனையினால் ஏற்பட்ட கொலையாகவோ, தற்கொலையாகவோ இருக்கலாம் என சமூக ஆர்வர்கள் கூறியுள்ளனர். சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் மூலம் 96 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 91 பேர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி 24 மணி நேரமும் ஊத்திக்கோ, குடிச்சிக்கோ, கொண்டாடிக்கோ...!

சென்னை: பார் புகழும் தமிழகத்தின் மகுடத்தில் மேலும் ஒரு நவரத்தினக் கல்லை தூக்கி வைத்துள்ளது தமிழக அரசு. அதுதான் 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைத்து குடிமக்களுக்கு சர்வீஸ் செய்யலாம் என்பது.
தமிழகத்தின் பெருநகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி நகரங்களுக்கு மட்டும் இப்போதைக்கு இந்த உத்தரவு பொருந்தும். இந்த நகரங்களில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் ஹோட்டல்களில் கூடுதல் சுங்க வரியைச் செலுத்தி விட்டு, 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைத்து 'குடிமக்களுக்கு' மது விற்பனை செய்யலாமாம்.!
ஏற்கனவே டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூலம் அரசுக்கு எக்குத்தப்பாக வருவாய் கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதை மேலும் அதிகரிக்கும் வகையில் 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைக்கும் அனுமதியை அளித்துள்ளது அரசு.
இதுதொடர்பான உத்தரவை சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் சுங்கத்துறை பிறப்பித்துள்ளது. அதன்படி சென்னை, திருச்சியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களில் வழக்கமான வரிக் கட்டணத்தை செலுத்தி விட்டு 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைத்துக் கொள்ளலாம்.
அதேபோல மதுரை, கோவையில் உள்ள ஹோட்டல்களில் இரட்டிப்பு வரிக் கட்டணத்தை செலுத்தி விட்டு 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைக்கலாம்.
சென்னை, திருச்சிக்கு மட்டும் வழக்கமான கட்டணத்தை செலுத்த அரசு கூறியிருப்பதற்குக் காரணம், இங்கு அதிக அளவில் சர்வதேச பயணிகள் கூட்டம் இருப்பதால்தானாம். குறிப்பாக வெளிநாட்டினரை அதிக அளவில் ஈர்க்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.
அதேசமயம், மேற்கண்ட நகரங்களைத் தவிர பிற நகரங்களின் ஹோட்டல்களில் உள்ள பப்களை தற்போது திறந்து வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்து வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது 11 மணி வரை மட்டுமே இவர்கள் பப்களை திறந்திருக்கலாம். இனிமேல் அதை 12 மணியாக்கி விட்டனர். அதாவது நள்ளிரவு வரை உற்சாக பானங்களை இங்கு விற்கலாம்.
அரசின் இந்தப் புதிய நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், பார்கள் நிர்வாகிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
நீதி: இதனால் குடிமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய நீதி என்னவென்றால், பாரை மூடி விடுவார்களே என்று அவசரம் அவசரமாக குடிக்கத் தேவையில்லை. நிதானமாக குடிக்கலாம். அதிகாலை 4 மணிக்கு வந்து கேட்டால் கூட தயங்காமல் சப்ளை செய்வார்கள்! நன்றி தேட்ஸ் தமிழ்

Wednesday, June 20, 2012

கலாம் பதவியைத் தேடவில்லை, பதவிதான் அவரைத் தேடி வந்தது!

2002ம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசுத் தலைவரானபோது அந்தப் பதவிதான் அவரைத் தேடி வந்தது. அவர் பதவியைத் தேடிப் போகவில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான நட்வர்சிங். இதுகுறித்து ஹிண்டு பத்திரிக்கையில் அவர் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்... தனது சுயசரிதை நூலில், மறைந்த பி.சி.அலெக்சாண்டர் கூறுகையில், எனக்கு குடியரசுத் தலைவர் பதவி கிடைக்காமல் போனதற்கு நடவர்சிங்தான் காரணம் என்று கூறியிருந்தார். 2002ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவி அவருக்குக் கிடைக்காமல் போனது குறித்து இப்படி அவர் கூறியிருந்தார். மேலும், அப்போதைய பிரதமரின் (வாஜ்பாய்) முதன்மைச் செயலாளராகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்த பிரிஜேஷ் மிஸ்ராவையும் அவர் சாடியிருந்தார். நானும், மிஸ்ராவும் சேர்ந்துதான் அலெக்சாண்டருக்குப் பதவி கிடைக்காமல் செய்து விட்டதாக அவர் வருத்தப்பட்டிருந்தார். உண்மையில் இது நகைப்புக்குரியது. நாங்கள் இருவரும் தனியாக நிறுவனம் எதையும் நடத்தவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் பல வழிமுறைகளை கடைப்பிடித்தாக வேண்டியது அலெக்சாண்டருக்கே தெரிந்திருக்கும். ஆனால் அலெக்சாண்டர் ஒரு நல்ல மனிதர். அருமையான சிவில் சர்வன்ட் ஆக இருந்தவர். அதேசமயம் எதையும் கணக்குப் போட்டுப் பார்த்து நடைபோடக்கூடியவர். அவருக்கு 1992ம் ஆண்டு துணைக் குடியரசுத் தலைவர் பதவி கிடைக்க நான் கடுமையாக முயன்றேன். ஆனால் அது ஈடேறவில்லை. இது மறைந்த பிரதமர் நரசிம்மராவுக்கு நன்றாக தெரியும். அந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு எனது வீட்டில் ஒரு டின்னர் வைத்தேன். அதில், அடல் பிகாரி வாஜ்பாய், கே.ஆர்.நாராயணன், ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சந்திரேசகர் டெல்லியில் இல்லாததால் வர முடியவில்லை. முதலில் வாஜ்பாய்தான் வந்தார். அப்போது கே.ஆர்.நாராயணன் அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த எனது மனைவி, வாஜ்பாயிடம் சென்று முனுமுனுத்த குரலில், நீங்கள் நாராயணனை ஆதரிப்பீர்களா என்று கேட்டார். அதைக் கேட்ட வாஜ்பாய் ஆமாம் என்று கூறுவது போல தலையை அசைத்தார். டின்னரின்போது நாராயணனுக்கு எதிரே வாஜ்பாய் அமர்ந்திருந்தார். நான் அப்போது வாஜ்பாயின் தீவிர ரசிகன். அவர் மிக அருமையான மனிதர், அதி புத்திசாலித்தனமானவர். நான் நேரடியாகவே வாஜ்பாயிடம் கேட்டேன், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு நாராயணனை நிறுத்தினால் உங்களது கட்சி ஆதரிக்குமா என்று. அதற்கு வாஜ்பாயும், ஆதரிப்போம் என்று நேரடியாகவே பதிலளித்தார். இதையடுத்து டின்னர் முடிந்ததும் நான் அலெக்சாண்டரிடமும், பிரதமரிடமும் இதைத் தெரிவித்தேன். அதைக்கேட்டு அலெக்சாண்டர் ஒன்றும் பேசவில்லை. பிரதமர் நரசிம்மராவ், நான் சொன்னதை மனதில் வைத்துக் கொள்வதாக தெரிவித்தார். உண்மையில் நரசிம்மராவும் சரி, அலெக்சாண்டரும் சரி கே.ஆர்.நாராயணை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் நாராயணனை யாராலும் தடுக்க முடியாது என்பது தெரிந்து போயிற்று. அவர் குடியரசுத் துணைத் தலைவரானார். ஐந்து ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவராவும் உயர்ந்தார். 1997ல் தான் நாம் சுதந்திரம் வாங்கி 50 ஆண்டுகளை பூர்த்தி செய்திருந்தோம். அந்த சமயத்தில் தலித் ஒருவர் குடியரசுத் தலைவரானது பெருமையான, பொருத்தமான விஷயம். ஏமாற்றத்தில் இருந்த அலெக்சாண்டரை 1992ம் ஆண்டு மகாராஷ்டிர ஆளுநராக நியமித்தார் நரசிம்ம ராவ். 97ல் மீண்டும் ஆளுநரானார். 2002ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆளுநர் பதவியிலிருந்து வெளியே வந்த அலெக்சாண்டர் 2002 குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பினார். இதுகுறித்து அவர் தனது சுயசரிதை நூலில், நானாக பதவிக்கு ஆசைப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் என்னை அழைத்தது என்று கூறியுள்ளார். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. ஆனால் வியப்புக்குரிய ஒன்று என்னவென்றால் அவர் காங்கிரஸ் கட்சியை பயன்படுத்திக் கொள்ள நினைத்ததுதான். அலெக்சாண்டரை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக்க முடிவு செய்திருப்பதை அறிந்த காங்கிரஸ் தலைவர் என்னையும், மன்மோகன் சிங்கையும் அழைத்து, நடக்கும் நிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாக கவனிக்குமாறு கேட்டுக் கொண்டார். நாங்களும் அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம். அப்போது குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன், எங்களை அழைத்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்றார். அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அலெக்சாண்டர் போட்டியிட்டால் நான் போட்டியிடத் தயார் என்றார். அது எங்களுக்குக் குழப்பத்தைக் கொடுத்தது. அதேசமயம், நாராயணனுக்கு காங்கிரஸ் தலைவரின் ஆதரவு அப்போது இல்லை. எங்களுக்கு அப்போது இரண்டு தெளிவுகள் தேவைப்பட்டன - ஏன் தேசிய ஜனநாயக் கூட்டணி நாராயணனை எதிர்த்தது, காங்கிரஸ் தலைவர் ஏன் அலெக்சாண்டரை ஆதரிக்கவில்லை என்பதே அது. நான் அப்போது பிரிஜேஷ் மிஸ்ராவுடன் நல்ல தொடர்பில் இருந்தேன். அவர் பல காரணங்களைக் கூறினார். முக்கியக் காரணம் என்னவென்றால் நாராயணனின் உடல் நிலை. அவருக்கு அப்போது பக்கவாதம் வந்திருந்தது. இரு கால்களும் கிட்டத்தட்ட செயலிழந்த நிலையில் இருந்தன. மேலும் நாராயணன், பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் செல்ல வேண்டிய பயணத்தை விரும்பவில்லை, ரத்து செய்தார். அதேசமயம், தனது மகள் தூதராக இருந்த ஸ்வீடனுக்கு செல்ல விரும்பினார். மேலும், 2002ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி டெல்லி வந்த மேகவதி சுகர்ணோபுத்திரியை அவர் வரவேற்க மறுத்தார். அது கடமையிலிருந்து தவறிய செயல் என பிரிஜேஷ் மிஸ்ரா விமர்சித்தார். அலெக்சாண்டரை காங்கிரஸ் தலைவரை ஆதரிக்க மறுத்ததற்கு அரசியல் தான் காரணம். தனிப்பட்ட காரணம் என்று எதுவும் இல்லை. அலெக்சாண்டர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர். அவரைப் போய் எப்படி காங்கிரஸ் ஆதரிக்க முடியும் என்பது காங்கிரஸ் தலைவரின் வாதம். மேலும், நாராயணனும் சரி, அலெக்சாண்டரும் சரி, இருவருமே கேரளத்தவர்கள். ஒரு கேரளத்தவர் குடியரசுத் தலைவராக இருந்த நிலையில் மீண்டும் ஒரு கேரளத்தவரையே தேர்வு செய்ய காங்கிரஸ் தலைவர் விரும்பவில்லை. இப்படி அடுத்தடுத்து நிகழ்வுகள் வேகமாக போய்க் கொண்டிருந்தன. 2002ம் ஆண்டு மே 19ம் தேதி பிரதமர் வாஜ்பாயை காங்கிரஸ் தலைவர் சந்தித்துப் பேசினார். அப்போது நாராயணனை நாங்கள் ஆதரிக்க முடிவு செய்திருக்கிறோம் என்று வாஜ்பாயிடம் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். ஆனால் வாஜ்பாயோ, நாராயணனை மீண்டும் குடியரசுத் தலைவராக்க நாங்கள் விரும்பவில்லை என்றார். இந்த நிலையில் பக்கவாத சிகிச்சைக்காக ஊட்டி போயிருந்த நாராயணன் மே 22ம் தேதி டெல்லி திரும்பினார். அவரை காங்கிரஸ் தலைவர் சந்தித்து, 2வது முறையாக உங்களைத் தேர்ந்தெடுக்க காங்கிரஸ் விரும்புவதாக தெரிவித்தார். 2 நாட்கள் கழித்து பிரதமர் வாஜ்பாய், நாராயணனை சந்தித்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்களே தொடர தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆதரவு இல்லை என்று கூறினார். இதற்கிடையே நாராயணன் மீண்டும் பதவியில் நீடிக்கும் ஆர்வத்தை வேகப்படுத்த ஆரம்பித்தார். இதனால் குழப்ப நிலை ஏற்பட்டது. இருப்பினும் தனக்கு வேகமாக ஆதரவு குறைவதைக் கண்ட நாராயணன், பதவியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக குடியரசுத் தலைவர் பதவிக்கு மீணடும் கே.ஆர்.நாராயணன் போட்டியிட மாட்டார் என்று குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அறிக்கை வெளியானது. இதற்கிடையே, துணைக் குடியரசுத் தலைவராக இருந்த கிஷன் காந்த் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டால் ஆதரிப்பதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். ஜூன் 8ம் தேதிதான் மிக முக்கிய நாள். அன்று பிரிஜேஷ் மிஸ்ரா எனக்குப் போன் செய்தார். தன்னை வந்து சந்திக்குமாறு அவர் கோரினார். அவரை பார்த்தபோது, குடியரசுத் தலைவர் பதவிக்கு கிஷன் காந்த்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரிப்பதாக தெரிவித்தார். மேலும் என் முன்னிலையிலேயே வாஜ்பாய்க்கும் அவர் போன் செய்தார். அவரிடம், நட்வர்சிங் இங்கே இருக்கிறார். கிஷன் காந்த்துக்கு காங்கிரஸின் ஆதரவை அவர் உறுதிப்படுத்தியுள்ளார் என்றார். மேலும், பிரதமர் ஒரு மதிய உணவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் அதில் பங்கேற்பதாகவும், அவர்களிடம் அவர் ஒப்புதல் பெறவுள்ளதாகவும் தெரிவித்தார். இதை முடித்த பின்னர் மாலையில், பிரதமரும், காங்கிரஸ் தலைவரும் கிஷன் காந்த்தை நேரில் சந்தித்து முடிவைத் தெரிவிப்பார்கள் என்றும் மிஸ்ரா தெரிவித்தார். இதை நான் உடனடியாக காங்கிரஸ் தலைவரிடம் தெரிவித்தேன். கிஷன் காந்த்துக்கும் ஏற்கனவே இது தெரிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அன்று மாலை 3 மணியளவில் உடனே வந்து தன்னை பார்க்குமாறு அழைத்தார் பிரிஜேஷ் மிஸ்ரா. அப்போது அவர் என்னிடம் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களிடம் கிஷன் காந்த்தை நிறுத்த போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றும் இதுதொடர்பாக பிரதமர் எடுத்த தீவிர முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் கூறினார். இதையடுத்து அலெக்சாண்டரின் பெயர் மீண்டும் முதலிடத்திற்கு வந்தது. எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. இந்த புதிய திருப்பம் குறித்து காங்கிரஸ் தலைவரிடம் தெரிவித்தேன். ஆனால் அலெக்சாண்டர் குறித்த காங்கிரஸ் தலைவரின் கருத்தில் மாற்றம் ஏற்படாது என்பதும் எனக்குத் தெரியும். இந்தநிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தன்னைக் கைவிட்டது குறித்து அறிந்து உடைந்து போனார் கிஷன் காந்த். அவருக்கு அது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அடுத்த ஒரு மாதத்தில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். நான் அவரது வீட்டுக்கு போனபோது கிஷன் காந்த்தின் 104 வயது தாயார் தனது மகனின் தலையை எடுத்து தனது மடியில் கிடத்தி அழுதபடி இருந்த காட்சி என்னை உலுக்கி விட்டது. அலெக்சாண்டர் பெயர் மீண்டும் முதலிடத்தில் வந்த நிலையில் திடீரென, முலாயம் சிங் யாதவ், அப்துல் கலாமின் பெயரைப் பரிந்துரைத்தார். அது முற்றிலும் யாருமே எதிர்பாராத ஒரு பெயர். கலாமை சாதாரண முறையில் கூட யாரும் பரிந்துரைத்திருக்கவில்லை, அவர் ஒரு 'டார்க் ஹார்ஸ்' கூட கிடையாது. ஆனால் அவர்தான் கடைசியில் குடியரசுத் தலைவரானார். அவர் பதவியைத் தேடி வரவில்லை, பதவிதான் அவரைத் தேடிப் போனது. டெல்லியில் பதவியேற்க கலாம் வந்தபோது, பிரமோத் மகாஜன் அவரைச் சந்தித்தார். இரண்டு கோரிக்கைகளை அவர் கலாமிடம் வைத்தார் - காலர் வைத் கோட் போட்டுக் கொள்ள வேண்டும், ஹேர்ஸ்டைலை மாற்ற வேண்டும் என்பதே அது. அதைக் கேட்ட கலாம் கூறினார், மிஸ்டர் மகாஜன், காலர் வைத்த கோட் ஓ.கே, ஆனால் ஹேர்ஸ்டைலை மாற்றுவது குறித்து பேச்சுக்கே இடமில்லை என்றார் சிரித்தபடி.

Friday, June 15, 2012

நிறைய பேர் என்னை போட்டியிடச் சொல்றாங்க... சரியான நேரத்தில் முடிவெடுக்கிறேன்: அப்துல் கலாம்

பாட்னா: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி உரிய நேரத்தில் முடிவெடுப்பேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமை வேட்பாளராக நிறுத்தப் போவதாக முலாயம்சிங்குடன் சேர்ந்து ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கும் மமதா பானர்ஜி அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் பதிலுக்குத் தாம் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் கலாம்தரப்பில் எந்த ஒரு பதிலும் வெளியாகாமல் இருந்தது, அதே நேரத்தில் கலாமிடம் முலாயம்சிங்கும் மமதாவும் பேசி ஒப்புதல் பெற்றிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல்கலாமிடம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்பது பற்றி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அப்துல் கலாம், பல்வேறு அரசியல் தலைவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு மீண்டும் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களது இந்த முயற்சியை பாராட்டுகிறேன். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறென். இது தொடர்பாக உரிய நேரத்தில் முடிவெடுப்பேன் என்றார். பாட்னா வந்துள்ள அப்துல்கலாமை விமான நிலையத்துக்கு நேரில் சென்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வரவேற்றார். நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் கலாம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் ஆதரிக்கக் கூடும் என்று தெரிகிறது.

Thursday, June 14, 2012

ஜனாதிபதி தேர்தல்: ராகுகாலம் தொடங்கும் முன் ஜெ.வுடன் ஆலோசனை நடத்திய அத்வானி!

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக டெல்லியில் அரசியல் களம் சூடு பறந்து கொண்டிருக்கும் நிலையில் சங்மாவை வேட்பாளராக களமிறக்கியிருக்கும் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று சென்னையில் சந்தித்துப் பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 1.25க்கு இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. வெங்கய்ய நாயுடு தலைமையிலான உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் அத்வானி நேற்று சென்னை வந்தார். இன்று கல்பாக்கம் அணு உலையைப் பார்வையிட நிலைக்குழுவுடன் சென்றிருந்தார். அப்போது ஜெயலலிதா தரப்பில் ஒரு முக்கிய தகவல் அத்வானிக்குத் தெரிவிக்கப்பட்டது. ராகுகாலம் அதாவது இன்று ராகுகாலம் என்பது பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரை. அதனால் 1.30 மணிக்கு முன்பாக கோட்டைக்கு வந்துவிட்டால் சந்திக்கலாம். இல்லையெனில் மாலை 3 மணிக்கு மேல் சந்திக்கலாம் என்று ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டது. இதனால் அத்வானி எத்தனை மணிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு செய்தியாளர்களிடம் இருந்தது. ஒருவழியாக அத்வானியும் ராகுகாலம் தொடங்குவதற்கு முன்பாக பிற்பகல் 1.25 மணிவாக்கில் கோட்டைக்கு வந்து சேர சந்திப்பும் நடைபெற்றது. அப்போது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக டெல்லியில் நடக்கும் பாஜக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் ஜெயலலிதாவுக்கு அத்வானி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,ஜூன்.14- நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரியவர் நடிகர் காகா ராதாகிருஷ்ணன். பழம்பெரும் நடிகரான அவர் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். உடல் நலமில்லாததால் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராதாகிருஷ்ணன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், அவர் இன்று காலமானார். சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன், மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ராதாகிருஷ்ணன். சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை.

ஆஸ்திரேலியா நாட்டுக்கு அனுப்புவதாக ரூ.10 லட்சம் மோசடி: 2 பேர் கைது

கீழக்கரை,ஜூன்.14- காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் மகன் பாஸ்கரன் (வயது 32). யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடேசன் என்பவரது மகன் ஜெயக்குமார் என்ற சசி. இவர்களிடம் கீழக்கரை செங்கல் நீரோடை பகுதியை சேர்ந்த ஆதிமூலம் மக ன் ரமேஷ் (41), உச்சிப்புளி அருகே உள்ள கடுக்காய்வலசையை சேர்ந்த காயாம்பு மகன் மனோகரன்(49), சென்னை அகதிகள் முகாமை சேர்ந்த ராஜீவன் என்ற ராஜூ ஆகியோர் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், ஏராளமானோரை அனுப்ப உள்ள தாகவும் தெரிவித்தனர். இதற்காக நபர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் பணம் கொடுத் தால் ஆஸ்திரேலியா நாட்டுக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனர். இதனை நம்பி பாஸ்கரன் தனக்கு தெரிந்த 3 பேருக்கு முன்பணமாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். இதேபோல ஜெயக்குமார் என்ற சசி தனக்கு தெரிந்த 9 பேருக்காக ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். இருவரிடமும் மொத்தம் ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெற்றுக்கொண்டவர்கள் இத் தனை ஆண்டுகளாக ஆஸ்திரேலியா நாட்டுக்கு அனுப்பி வைக்காமல் ஏமாற்றி வந்தார் களாம். இந்த நிலையில் இருவரும் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அப்போது ரமேஷ் உள்ளிட்ட 3 பேரும் பணத்தை தர முடியாது என்றும், தொடர்ந்து கேட்டால் கொலை செய்து விடுவதாக வும் மிரட்டினார்களாம். இதுகுறித்து பாஸ்கரன், ஜெயக்குமார் ஆகியோர் கீழக்கரை போலீசில் புகார் செய்த னர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் இளங்கோவன், சப்- இன்ஸ்பெக்டர் கார்மேகம் ஆகியோர் வழக்கு பதிந்து ரமேஷ், மனோகரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக ராஜீவனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Sunday, February 26, 2012

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!


சிட்னி: டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20-20 என எந்த வகையான கிரிக்கெட் போட்டியிலும் ஒரு சதம் கூட அடிக்காமல் முதல் முறையாக ஒரு வருடத்தை முடிக்கப் போகிரார் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர்.

'சூப்பர் ஸ்டார்' என்றால் தொட்டதெல்லாம் ஹிட்டாக வேண்டும். 'சூப்பர் கிரிக்கெட்டர்' என்றால் அடிப்பதெல்லாம் செஞ்சுரியாக இருக்க வேண்டும். இதுதான் சராசரி ரசிகர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்று என்றாலும் சச்சினிடம் எப்போதுமே ரசிகர்கள் ஹை லெவலாகத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவரும் சற்றும் சளைக்காமல் அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிப்படுத்த் தவறியதில்லை.

ஆனால் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சதம் கூட அடிக்காமல் ஒரு வருடத்தையே முடிக்கப் போகிறார் சச்சின். கடைசியாக சச்சின் சதமடித்தது, கடந்த மார்ச் 12ம் தேதி நாக்பூரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 111 ரன்கள் எடுத்ததுதான். அது அவரது 48வது ஒரு நாள் சதமாகும்.

டெஸ்ட் போட்டிகளில் அவர் கடைசியாக சதம் போட்டது கடந்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக போட்ட 146 ரன்கள்தான்.

டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும், ஒரு நாள் போட்டிகளில் 48 சதங்களையும் வைத்துள்ள சச்சின் கடந்த ஒரு வருடமாக தனது 100வது சதத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்.

தற்போதைய ஆஸ்திரேலிய தொடரிலும் கூட சச்சின் ரசிகர்களை பெருமளவில் ஏமாற்றி விட்டார். நம்ம சச்சினா இவர் என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில்தான் அவரது ஆட்டம் படு சராசரியாக இருந்தது.

தற்போது ஒரு சதம் கூட அடிக்காமல் ஒரு வருடத்தை சச்சின் பூர்த்தி செய்யவிருப்பது அவரை விட அவரது ரசிகர்களுக்குத்தான் பெரும் சோகமாக உள்ளது

ஜெயேந்திரர் தொலைபேசி உரையாடல் வழக்கு: சைபர் கிரைம் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீதான சங்கரராமன் கொலை வழக்கில் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறை விசாரணை நடத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது;

வழக்கு என்ன?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவரை கொலை செய்ததாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் இறுதிக் கட்டத்தில் நீதிபதி ராமசாமியுடன் ஜெயேந்திரர் தொலைபேசி மூலமாக "பேரம்" பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்த தொலைபேசி உரையாடலையும் மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி சென்னை பொதுக்கூட்டத்தில் வெளியிட்டார்.

இதையடுத்து இந்த தொலைபேசி உரையாடல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தரராஜன் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் புதுவையில் நடைபெற்றும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் நீதிபதி ராமசாமியும் பெரம்பலூருக்கு மாற்றப்பட்டார்.

இன்றைய உத்தரவு

இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெற்றது. புதுவையில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது.

மேலும் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு சைபர் கிரைமுக்கும் உத்தரவிட்டது.

அதாவது ஜெயேந்திரர், நீதிபதி ராமசாமி உள்ளிட்டோரின் உண்மையான குரலைப் பதிவு செய்து தொலைபேசியில் இருக்கும் குரலோடு ஒப்பிட்டு ஆராய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது நன்றி டேட்ஸ் தமிழ்

சென்னைவாசிகளே, உங்க ஏரியாவில் எப்போது மின்வெட்டு என்று தெரியுமா?

சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் இன்று முதல் 2 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு முதல் மின்வெட்டு தொடங்கியது.

மொத்தம் 5 ஷிப்ட்களாக, மாலை 6 மணி வரை மின்வெட்டு அடுத்தடுத்து அமல்படுத்தப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் எந்த நேரத்தில் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்பது குறித்த விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

8.00 - 10.00 மணி:

பெல்ஸ் சாலை மற்றும் சேப்பாக்கம் பகுதிகள், கீழ்ப்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டாஹன்ஸ் சாலை, எண்ணூர், உயர் நீதிமன்றம், என்.எஸ்.சி. போஸ் சாலை, குறளகம், ஆர்மீனியன் சாலை, 2வது லைன் கடற்கரைச் சாலை, தம்பு செட்டி தெரு, காமராஜ் சாலை, ஏழு கிணறு மற்றும் மண்ணடி, தண்டையார்பேட்டை, மாத்தூர் பகுதிகள், சிட்கோ (வில்லிவாக்கம்) பகுதிகள், தண்டையார் பேட்டை (ஆர்.கே.நகர்) பகுதிகள், கிண்டி தொழிற்பேட்டை, கிண்டி, அண்ணா சாலை பகுதிகள், கோவூர், குன்றத்தூர், மாங்காடு, பெரிய பனிச்சேரி மற்றும் கிருகம்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, கோரிமேடு, பூந்தமல்லி டவுன், நோம்பல், காடுவெட்டி, புதுதாங்கல், ராஜ்பவன், செயின்ட் தாமஸ் மவுன்ட், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், துரைப்பாக்கம் பகுதி, டைடல் பார்க், ஸ்பாஸ்டிக் சொசைட்டி, ஆவடி, ஆவடி தொழிற்பேட்டை மற்றும் ஆயுத தொழிற்சாலை பகுதிகள், சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை (ஒரு பகுதி), பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), காமராஜ் நகர், அம்பத்தூர் மற்றும் பட்டரவாக்கம், அண்ணாநகர் - 4வது அவென்யு, 2வது அவின்யு, 7வது அவென்யு, தாஸ் காம்ப்ளக்ஸ், 5வது அவென்யு, அண்ணாநகர் (ஒரு பகுதி), அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயல், முகப்பேர் (ஒரு பகுதி) மற்றும் டி.ஐ. சைக்கிள் பகுதிகள்.

10.00 - 12.00:

சிந்தாதரிப்பேட்டை, அண்ணாசாலை (ஒரு பகுதி), புரசைவாக்கம் நெடுஞ்சாலை, செக்ரடேரியட் காலனி, டவுட்டன், ஹாம்ஸ் சாலை, பால்ஃபர் சாலை, டவர் ப்ளாக், பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), புதுப்பேட்டை, சிம்சன், எழும்பூர் (ஒரு பகுதி), எஸ்.எம். நகர், கே.பி.தாசன் ரோடு, தியாகராயர் நகர் (ஒரு பகுதி), எல்டம்ஸ் ரோடு, நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் பெரியமேடு சார்பு பகுதிகள், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை (ஒரு பகுதி), கதீட்ரல் சாலை, கே.என்.கே. சாலை, ஜி.என். செட்டி சாலை (ஒரு பகுதி), கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, அவ்வை சண்முகம் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, மீர்சாகிப்பேட்டை, ஷேக் தாவூத் தெரு, பேகம் சாகிப் தெரு, அமீர் மகால், பெருமாள் முதலி தெரு, பாரதி சாலை, வடக்கு உஸ்மான் சாலை முழுவதும், தங்கசாலை, கொண்டித் தோப்பு, ஜாட்காபுரம், சின்னபுரம், எஸ்பிளனேடு (ஒரு பகுதி), அயனாவரம், வில்லிவாக்கம் மற்றும் ஐ.சி.எஃப், பெரம்பூர் (ஒரு பகுதி), காலடிப்பேட்டை, ராஜாகடை, ஸ்டான்லி, பாரக்ஸ் ரோடு, பழைய சிறைச்சாலை, ராயபுரம் (ஒரு பகுதி), கோபால் நாயக்கன் தெரு, மடுவன்கரை, ஆதம்பாக்கம், ஆலந்தூர், கே.கே.நகர், அழகிரி சாலை, கோவிந்தன் சாலை, கிண்டி (ஒரு பகுதி), பொன்னம்பலம் சாலை, ராமசாமி சாலை, எம்.ஜி.ஆர். நகர், பாரதிதாசன் காலனி, மேற்கு மாம்பலம், அசோக் நகர் (ஒரு பகுதி), குரோம்பேட்டை, பல்லாவரம், கடப்பேரி மற்றும் மெப்ஸ் பகுதி, பல்லாவரம், பெருங்குடி தொழிற்பேட்டை பகுதி, பெருங்குடி, தாம்பரம் பகுதி, பூந்தமல்லி (ஒரு பகுதி), நசரத்பேட்டை, நங்கநல்லூர், ஆதம்பாக்கம், இந்திரா நகர், கலாக்ஷேத்ரா காலனி, ஸீவேர்டு ரோடு, வால்மீகி நகர், ஒளவை நகர், கணபதி நகர், திருவள்ளுவர் நகர், வாசுதேவன் நகர், பாலவாக்கம், விருகம்பாக்கம், தசரதபுரம், வடபழனி, ஆற்காடு சாலை (ஒரு பகுதி), சத்யா கார்டன், அண்ணாசாலை, ஷெனாய் நகர், ஆர்.வி. நகர், டி.பி.சத்திரம், அயப்பாக்கம், மகாலிங்கபுரம், காம்தார் நகர், எஸ்.எ.எஃப். கேம்ஸ் வில்லேஜ், சின்மயா நகர், ஜகந்நாதன் நகர், 100 அடி சாலை (ஒரு பகுதி), கோயம்பேடு, அண்ணாநகர் (மேற்கு), அண்ணாநகர் மேற்கு விரிவு மற்றும் திருமங்கலம் முழுவதும்.

12.00 - 2.00:

ராஜா அண்ணாமலைபுரம், தேனாம்பேட்டை (ஒரு பகுதி), லஸ் (ஒரு பகுதி), இந்திரா நகர் (ஒரு பகுதி), மயிலாப்பூர் (ஒரு பகுதி), எழும்பூர் (ஒரு பகுதி), பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), புரசைவாக்கம் (ஒரு பகுதி), ஸ்பர்டாங்க் சாலை, எம்.எம்.டி.எ., என்.எஸ்.சி. போஸ் ரோடு, தம்பு செட்டி தெரு (ஒரு பகுதி), பட்டினப்பாக்கம், காமராஜர் சாலை, மந்தைவெளி (ஒரு பகுதி), தியாகராய நகர் (ஒரு பகுதி), பாண்டிபஜார், தெற்கு உஸ்மான் சாலை, அண்ணாசாலை (ஒரு பகுதி), ஆர்.கே.சாலை, டி.டி.கே. சாலை, சி.ஐ.டி. காலனி, கோபாலபுரம் (ஒரு பகுதி), பி.எஸ்.சிவசாமி, சென்ட்ரல் ரோடு, ஜாஃப்பர்கான் பேட்டை, கே.கே.நகர் (ஒரு பகுதி), போஸ்டல் காலனி (மேற்கு மாம்பலம்), சைதாப்பேட்டை மேற்கு, வி.எஸ்.எம். கார்டன், பெருமாள் கோவில் தெரு, ராயப்பேட்டை முழுவதும், லாய்ட்ஸ் ரோடு, பாலாஜி நகர், பீட்டர்ஸ் ரோடு, ஆயிரம் விளக்கு, ஒயிட்ஸ் ரோடு, ஸ்பென்சர், கொடுங்கையூர், எஸ்பிளனேடு (ஒரு பகுதி), கிழக்கு ஜார்ஜ் டவுன் பகுதி, ராயபுரம், செம்பியம், மாதவரம், திரு.வி.க. நகர், வியாசர்பாடி (ஒரு பகுதி), பெரம்பூர் (ஒரு பகுதி), டோல்கேட், செர்ரி ரோடு, ஆற்காடு சாலை, வளசரவாக்கம், இ.டி.எல்., ஈஞசம்பாக்கம், சேலையூர், தாம்பரம், சூளைமேடு, கோடம்பாக்கம், வடக்கு உஸ்மான் சாலை (ஒரு பகுதி), வடபழனி, அசோக் நகர், ட்ரஸ்ட் புரம், மடிப்பாக்கம், நங்கநல்லூர் (ஒரு பகுதி), நொளம்பூர் 110 கி.வோ., பாடி 110 கி.வோ., பெருங்களத்தூர் பகுதி, பாரதி சாலை, வள்ளுவர் சாலை, முகளிவாக்கம், மணப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஒரு பகுதி, ராமாபுரம், சிறுசேரி தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர் முழுவதும், திருமங்கலம் (ஒரு பகுதி).

2.00-4.00:

புரசைவாக்கம் (ஒரு பகுதி), டவுட்டன் (ஒரு பகுதி), தேனாம்பேட்டை (ஒரு பகுதி), அண்ணாசாலை (ஒரு பகுதி), கதீட்ரல் ரோடு (ஒரு பகுதி), கல்லூரி சாலை, கிரீம்ஸ் ரோடு, பூக்கடை, பாரிமுனை, பிராட்வே, எஸ்பிளனேடு (ஒரு பகுதி), மயிலாப்பூர் (ஒரு சில பகுதிகள்), லஸ் (சில பகுதிகள்), குடியிருப்பு வாரியம், லோட்டஸ் காலனி, டவர் ப்ளாக், செனடாப் ரோடு, சேமியர்ஸ் ரோடு, சாதுல்லா தெரு, தியாகராய நகர் (ஒரு பகுதி), சி.ஐ.டி.நகர், மோதிலால் தெரு, ராமேஸ்வரம் சாலை, நடேசன் சாலை, எம்.ஆர்.சி. நகர், கற்பகம் அவென்யு, கிரீன்வேஸ் லேன், ராணிமெய்யம்மை டவர், கே.வி.பி. கார்டன், ஸ்ரீநிவாசா அவென்யு, ஒயிட்ஸ் ரோடு-அண்ணா சாலை (ஒரு பகுதி), ருக்மிணி லட்சுமிபதி சாலை, எதிராஜ் சாலை, ரஹேஜா காம்ப்ளக்ஸ், ஸ்பர்டாங்க் சாலை, மான்டியத் சாலை, காசாமேஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை (ஒரு பகுதி), எ.சி. சாலை, ரெட் க்ராஸ் சொசைட்டி, ஃபெüன்டன் ப்ளாசா, எல்.என்.டி. கோவில் தெரு, கெங்குரெட்டி கோவில் தெரு, டி.வி.நாயுடு தெரு, மயிலாப்பூர் (ஒரு பகுதி), மேற்கு மாம்பலம் (ஒரு பகுதி), மேட்லி ரோடு, ஜூபிலி ரோடு, பிருந்தாவன் தெரு, அசோக் நகர் (ஒரு பகுதி), கே.கே.நகர் (ஒரு பகுதி), அண்ணா பூங்கா, மூலக்கடை, முத்தமிழ் நகர், கொளத்தூர், லக்ஷ்மி நகர், செம்பியம் (ஒரு பகுதி), மணலி, ஜி.கே.எம்.காலனி, எஸ்.ஆர்.பி. காலனி, வியாசர்பாடி தொழிற்பேட்டை, ஜி.எஸ்.டி. ரோடு (ஒரு பகுதி), நேரு நகர், கடப்பேரி, மெப்ஸ் பகுதி, கிழக்கு கடற்சாலை சாலை, எம்.ஜி.ஆர். சாலை, வி.ஜி.பி., ஸீவேர்டு ரோடு, போரூர், ஆற்காடு சாலை (ஒரு பகுதி), சோழிங்கநல்லூர், தரமணி தொழிற்பேட்டை, என்.எம்.எம். ரோடு, அரும்பாக்கம், எம்.எம்.டி.எ. காலனி, 100 அடி சாலை (ஒரு பகுதி), பாடி, கொரட்டூர், கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், நடேசன் நகர், பான்டேஸ்வரம், புழல் மற்றும் ரெட்ஹில்ஸ் (ஒரு பகுதி), சோத்துபெரும்பேடு மற்றும் அலமாதி

4.00-6.00

அண்ணாசாலை (ஒரு பகுதி), ஜி.பி.ரோடு, ஒமந்தூர் அரசினர் தோட்டம், பாரதி சாலை, திருவல்லிகேணி, தாஹிர் சாகிப் தெரு, பெரிய தெரு, வாலாஜா ரோடு, சைதாப் பேட்டை, சி.ஐ.டி. காலனி, புரூசி மில் பகுதி, புளியந்தோப்பு பகுதி, மகாலிங்கபுரம் முழுவதும், காம்தார் நகர், நுங்கம்பாக்கம் (ஒரு பகுதி), திருமலைப்பிள்ளை சாலை, டாக்டர் நாயர் சாலை, தியாகராய சாலை (ஒரு பகுதி), மணலி மற்றும் நாப்பாளையம் பகுதி, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை (ஒரு பகுதி), ஜி.எ.ரோடு, கே.எ.கோவில் தெரு, தண்டவராயன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை பகுதி, திருவொற்றியூர் பகுதி, பெசன்ட் நகர், ஜெ.ஆர்.நகர், மாளவியா காலனி, கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காடுதாங்கல், கலைமகள் நகர், அண்ணாசாலை மற்றும் ஒரு பகுதி, கோட்டூர்புரம், டேர்ன்புல்ஸ் சாலை, கஸ்தூரிபா நகர், தாம்பரம் (ஒரு பகுதி), பம்மல், ராதா நகர், கடப்பேரி, குரோம்பேட்டை, பல்லாவரம், கே.கே.நகர் (ஒரு பகுதி), ராமசாமி சாலை, பார்க் வியு சாலை, போரூர் (ஒரு பகுதி), எஸ்.எம்.ஆர்.சி., பெரும்பாக்கம் பகுதி, திருமுடிவாக்கம் பகுதி, விஜயநகரம், வேளச்சேரி நெடுஞ்சாலை, தண்டீஸ்வரம், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கே.ஜி. ரோடு, ராஜீவ் நாயக்கன் தெரு, புது ஆவடி சாலை, மேடவாக்கம் குளச்சாலை, வானகரம், மதுரவாயல், முகப்பேர் (கிழக்கு), பட்டாபிராம், திருநின்றவூர் (ஒரு பகுதி), திருவள்ளூர் நெடுஞ்சாலை (ஒரு பகுதி), ரெட்ஹில்ஸ் முழுவதும், அண்ணாநகர் (ஒரு பகுதி) மற்றும் திருவேற்காடு.

இந்த மின்தடை நேரமானது மாதம் ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்படும்