கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Friday, December 30, 2011

முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 64 தங்கும் விடுதிகள்: ஜெ. உத்தரவு

சென்னை: தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்கான விடுதிகள் மற்றும் மூத்த மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லமும் கொண்ட 64 ஒருங்கிணைந்த வளாகங்களை உருவாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

32 மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு 2 வீதம் ஏற்படுத்தப்படும் இந்த சிறப்பு இல்லங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் உதவியுடன் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் வாழும் முதியோர்களுக்கு பாதுகாப்பினையும் நாகரிகமான, உசிதமான வாழ்க்கையையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இதன் அடிப்படையில், ஜெயலலிதா பதவியேற்றவுடன் பல்வேறு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டார்.

தங்களை கவனித்துக் கொள்ள ஒருவரும் இல்லாத நிலையில், தினசரி வாழ்வில் உணவு, உடை, உறைவிடம், மருத்துவ தேவைகள் முதலியவற்றிற்காக மிகவும் அல்லல்படும் ஆதரவற்ற முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது மட்டுமல்லாமல், ஆதரவற்ற குழந்தைகளின் தேவைகளையும் நிறைவு செய்தல் அவசியமாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா, ஒவ்வொரு வளர்ச்சி வட்டாரத்திலும், முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் சிறப்பு விடுதிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றை உருவாக்கவும், மூத்த மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லமும் இந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் ஒரு பகுதியாக அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்தினை சிறந்த அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களின் உதவியுடன் நடத்த அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி, 2011-12ம் நிதியாண்டில் முன்னோடி முயற்சியாக தமிழகத்தின் 32 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 2 வட்டாரங்கள் என முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களை உள்ளடக்கிய 64 ஒருங்கிணைந்த வளாகங்களை ஏற்படுத்திட முதல்வர் ஜெயலலிதா கொள்கை அளவில் முடிவெடுத்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த சிறப்பு இல்லங்களில் முதியோர்களும், ஆதரவற்ற குழந்தைகளும் பாசப் பிணைப்புடன் தங்களுக்குள் அன்பு, மரியாதை போன்றவற்றை பகிர்ந்துக் கொள்ளும் வகையில் அருகருகே வசிப்பார்கள்.

முதியோர் மற்றும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அமைக்கப்படும் இந்த வளாகங்கள் பள்ளிக் கூடங்கள், மருத்துவ வசதிகள், உடற்பயிற்சி, நூலகம் போன்ற பல வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த சிறப்பு இல்லங்களில், அபாயகரமான சூழ்நிலையில் வாழக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்த 5 முதல் 18 வயதுடைய குழந்தைகள், புலம் பெயர்ந்த குடும்பங்கள் போன்ற சமூகரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தொற்றுடைய நோய் உள்ள குழந்தைகள், நிராதரவான குழந்தைகள், கைதிகளின் குழந்தைகள், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் கடுமையான மருத்துவ சிக்கல் உள்ள நிராதரவான முதியோர்கள் ஆகியோர் தங்க வைக்கப்படுவார்கள்.

ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றிற்கு தொடக்க தொடரா செலவினமாக ரூபாய் 2.75 லட்சமும், தொடர் செலவினமாக ரூபாய் 18.40 லட்சம் என மொத்தம் 64 ஒருங்கிணைந்த வளாகங்களை ஏற்படுத்திட 12 கோடியே 18 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கையினால், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதோடு மட்டுமன்றி அவர்களது எதிர்கால வாழ்வும் உறுதி செய்யப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

நம்பர் ஒன் நா முத்துக்குமார்


2011-ம் ஆண்டில் மிக அதிக பாடல்களை எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பிரபல கவிஞர், பாடலாசிரியர் நா முத்துக்குமார்.

தமிழ் சினிமாவில் வாலி, வைரமுத்துவுக்குப் பிறகு, நிலையான இடத்தைப் பிடித்த இளம் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார் நா முத்துக்குமார்.

இந்த 2011-ம் ஆண்டு மட்டும் அவர் பாடல் எழுதியுள்ள படங்களின் எண்ணிக்கை 38. இவற்றில் 12 படங்களின் முழுப் பாடல்களையும் முத்துக்குமாரே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 98 பாடல்களைத் தந்துள்ளார் நா முத்துக்குமார்.

இந்த ஆண்டு ஹிட்டான அவரது பாடல்களில் முக்கியமானவை உன் பேரே தெரியாதே, சொட்டச் சொட்ட நனைய வைத்தாய்..., கோவிந்த கோவிந்தா... (எங்கேயும் எப்போதும்), முன் அந்திச் சாரல் நீ... (7 ஆம் அறிவு), ஆரிரரோ... , விழிகளில் ஒரு வானவில்... (தெய்வத் திருமகள்), வாரேன் வாரேன்... (புலிவேசம்), விழிகளிலே விழிகளிலே... (குள்ளநரிக் கூட்டம்) போன்றவை.

அதேபோல அதிக இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவரும் முத்துக்குமார்தான்.

2012-ம் ஆண்டில் வெளியாகவிருக்கும் ஏகப்பட்ட படங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார் முத்துக்குமார். பில்லா 2, நண்பன், வேட்டை, ஒரு கல் ஒரு கண்ணாடி, அரவான், தாண்டவம் என முக்கிய படங்களில் அவர்தான் பாடலாசிரியர். மொத்தம் 58 படங்கள் இப்போது கைவசம் உள்ளன.

கொலவெறியோடு புறப்பட்டிருக்கும் புதிய பாடலாசிரியர்களுக்கு மத்தியில் அழகான தமிழ் வார்த்தைகளுடன் அர்த்தமுள்ள பாடல்களைத் தரும் முத்துக்குமாரின் பயணம் தொடரட்டும்

கடலில் 25 அதிராம்பட்டினம் மீனவர்கள் மாயம்: புயலில் சிக்கினர்?

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த 25 நாட்டுப் படகு மீனவர்கள் கடலில் மாயமாகியுள்ளனர். அவர்கள் புயலில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தானே புயல் காரணமாக தமிழக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கடந்த 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டிருந்தனக்.

இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆனால், எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற அதிராம்பட்டினம் மீனவர்கள் 25 பேர் மாயமாகியுள்ளனர்.

அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லியப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திகேயன், ரங்கராஜன், பழனியாண்டி, நாகராஜன், முருகன் ஆகியோர்களுக்கு சொந்தமான நாட்டுப் படகுகளில் 25 மீனவர்கள் கடந்த 27ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் மறுநாள் கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை.

இதுபற்றி கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

கடலில் தத்தளித்த 11 ஆந்திர மீனவர்கள்-ஹெலிகாப்டரில் கடற்படை மீட்டது:

இந் நிலையில் ஆந்திர மாநிலம், நர்சப்பூரில் இருந்து மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் புயல் பாதிப்பால் கடலில் ஏற்பட்ட கடுமையான அலைகளில் சிக்கி தத்தளித்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், அவர்களை மீட்குமாறு கடற்படையினருக்கு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து ஹெலிகாப்டர்களில் சென்ற இந்திய கடற்படையினர் 11 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு வந்தனர்.

Wednesday, December 28, 2011

கோவையில் நெகிழ்ச்சி சந்திப்பு மனைவியை இழந்த நண்பருக்கு அப்துல் கலாம் ஆறுதல்


கோவை : மனைவியை இழந்த நண்பருக்கு அப்துல் கலாம் நேரில் ஆறுதல் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கல்லூரித் தோழர் சம்பத்குமார். கோவை சாய்பாபா காலனி பொன்னுசாமி நகரில் வசிக்கிறார். இவரது மனைவி சரோஜா(71), நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்டு கடந்த 21ம் தேதி இறந்தார். இதை அறிந்த அப்துல்கலாம், நண்பருக்கு ஆறுதல் கூற நேற்று முன்தினம் இரவு கோவை வந்தார். நேற்று காலை சம்பத்குமார் வீட்டுக்குச் சென்று, சரோஜாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அந்த போட்டோவில், ‘சரோஜா அம்மா புனிதப் பிறவி. குடும்பத்தின் அரும்பெரும் சொத்து. சம்பத் வாழ்க்கையில் அவர் ஒரு பொக்கிஷம். அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். எல்லாருக்காகவும் அவர் பிரார்த்தனை செய்வார்‘ என எழுதினார்.

பின்னர் சம்பத்குமாரின் அருகில் அமர்ந்து, அவருக்கு ஆறுதல் கூறினார். மனைவிக்கு செய்யப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். சம்பத்குமாரிடம், ‘இனிதான் தைரியமாக இருக்க வேண்டும். மனைவியின் பெயரில் துவக்கப்பட்டுள்ள சேவ் டாட்டர்ஸ் அமைப்பு மூலம் அதிகளவில் அனாதை குழந்தைகளுக்கு உதவுங்கள்’ என கூறினார்.

சம்பத்குமார் கூறுகையில், ‘1950ல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் அப்துல்கலாம், நான், கேரளாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் ஒன்றாக படித்தோம். வெவ்வேறு மதங்களை சேர்ந்த நாங்கள் மூவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம். மூவரும் நண்பர்களானோம். படித்து 62 ஆண்டுகளாகியும் அப்துல்கலாம் நட்பை மறக்கவில்லை. அவர் இன்று என்னை சந்தித்தது மிகப்பெரிய ஆறுதல். இறைவனே ஆசி கூறியதாக எண்ணுகிறேன்’ என நெகிழ்ச்சி யுடன் கூறினார்.

பெரியாறு அணை விவகாரம் மற்றொரு வாலிபர் தற்கொலை

சின்னமனூர் : முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெரியாறு அணை பிரச்னை காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த 24 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. நேற்று கேரள அரசை கண்டித்து தேனி மாவட்டம் சின்னமனூரில் 20,000 பேர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. இதில், சின்னமனூர்&கஸ்பாரோட்டை சேர்ந்த சின்னராஜ் மகன் ராமமூர்த்தி(36) கலந்து கொண்டார். இவர் விஷ விதைகளை சாப்பிட்ட பிறகே ஊர்வலத்தில் நடந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தலைசுற்றல் எடுக்கவே உடனடியாக ராமமூர்த்தி வீட்டுக்கு சென்று வாந்தி எடுத்துள்ளார். அவரிடம் சகோதரி தமிழ்செல்வி விசாரித்தபோது, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் இதுவரை தீர்வு கிடைக்காததால் விஷம் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். உடனே அவரை ஆம்புலன்சில் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந் தார். அவரது சட்டை பாக்கெட்டில் கலெக்டரு க்கு ஒரு கடிதம் இருந்தது. அதில் ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்கக் கூடாது. இப்பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என எழுதியுள்ளார். இதனை போலீ சார் கைப்பற்றினர்.

அங்கு வந்த உறவினர்கள், அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருடன் கடிதத்தை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக தற்கொலை செய்து கொண்டதாக எப்ஐஆர் பதிவு செய்து கொள்வதாக தெரிவித்தனர். அவரது உடல் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தற்கொலை செய்து கொண்ட ராமமூர்த்திக்கு திருமணமாகவில்லை. இவருக்கு சகோதரி தமிழ்செல்வி, சகோதரர்கள் வேலுச்சாமி, முருகன், செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர். இவரது பெற்றோர் இறந்து விட்டதால் அண்ணன் வீட்டில் தங்கி பித்தளை பாத்திரங்கள் செய்யும் தொழில் செய்து வந்தார்.

உயிர் தியாகம் செய்த 2 பேர்: சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்த சேகர் என்ற தேமுதிக பேச்சாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலத்தில் இதே பிரச்னைக் காக விஷம் குடித்து இறந்தார். நேற்று ராமமூர்த்தி இறந்துள்ளார். கடந்த வாரம் தேனி அருகே இதே பிரச்னைக்காக 2 பேர் தீக்குளித்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

புத்தாண்டில் புதிய அணைக்கு பூமிபூஜை?

உத்தமபாளையம்: முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதை தவிர வேறு வழியில்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தொடர்ந்து கூறி வருகிறார். புதிய அணை கட்டுவதற்கான இடத்தை ஏற்கனவே தேர்வு செய்து, நிதியும் ஒதுக்கி விட்டனர். இந்நிலையில் பூமிபூஜையை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று ரகசியமாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், 2012 ஜனவரி 1ல் பூமிபூஜை நடத்த கேரளா திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில், கேரள அரசு புதிய அணைக்கு பூமிபூஜை நடத்தினால், 2012 ஜனவரி 1ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்து, புத்தாண்டு கொண்டாட்டங்களை கைவிட தேனி மாவட்டத்தின் பல்வேறு விவசாய அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்

7 இந்தியருடன் இத்தாலி கப்பல் கடத்தல்

ரோம் : இத்தாலிக்கு சொந்தமான சரக்குக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் நேற்று கடத்திச் சென்றனர். இதில் 7 இந்தியர்கள் உட்பட 18 பேர் மாட்டிக் கொண்டுள்ளனர். ஐக்கிய அரபு குடியரசிலிருந்து புறப்பட்ட என்ரிகோ ஐவோலி என்ற சரக்குக் கப்பலில் 17,750 டன் காஸ்டிக் சோடா இருந்தது. நேற்று மத்திய தரைக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலில், சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஏறினர்.

ஆயுதங்களை காட்டி மிரட்டி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த அவர்கள் சோமாலியாவுக்கு கப்பலை கடத்திச் சென்றனர். இதில் 7 இந்தியர்கள் உட்பட 18 பேர் இருக்கின்றனர். இந்த தகவலை கப்பலின் உரிமையாளர் மர்னவி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். கப்பலை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் மக்கள் இந்தியா வந்திருக்கும் ஜப்பான் பிரதமருக்கு கோரிக்கை



கூடங்குளம் டிச 28-

கூடங்குளம் மக்கள் இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் யோஷிகிகோவுக்கு ஒரு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி உள்ளனர் அதன் நகலை இன்று பத்திரிகையாளர்களிடம் காட்டினர் அதில் இந்தியாவுடன் ஜப்பான் சிவில் அணு ஒப்பந்த ஒத்துழைப்பு வைத்து கொள்ள வேண்டாம் என கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் அதில் நாங்கள் ஜப்பான் மக்களுக்கு மதிப்பளிக்கிறோம் அவர்கள் அயரத உழைப்பும் கடமை உணர்வும் மிக்கவர்கள்.இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட ஜப்பான் நிறுவனக்கள் செயல்பட்டு வருகின்றன. தங்கள் நாடு ஜப்பான் நாட்டின் சமூக பொருளாதார அரசியல் உறவுகளை மதிக்கிறது.நாங்கள் நிச்சயமாக சிவில் அணு ஒத்துழைப்புக்கு ஜப்பான் மற்றும் யாருனும் வைப்பதற்கு பாராட்ட மாட்டோம் என கூறி உள்ளனர்

லோக்பால் விவாதத்தில் கலந்து கொள்ளாத காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு

புதுடெல்லி, டிச. 28-

பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட போதிலும் அரசியலமைப்பு சட்ட அந்தஸ்தை பெற நடந்த ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்தது. இது மத்திய அரசை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டுமானால் மக்களவையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரிப்பது கட்டாயமாகும்.

எனவே காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் சபையில் இருக்க வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டிருந்தார். இதை ஏற்று சபையில் இருந்த காங்கிரஸ் எம்.பி.க் களில் சிலர் லோக்பால் மசோதா நிறைவேறியதும் இருக்கைகளில் இருந்து எழுந்து சென்று விட்டனர். அவர்களுக்கு போன் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் சட்ட திருத்த ஓட்டெடுப்பு குறித்து தகவல் கொடுக்கப்பட்டது.

என்றாலும் நள்ளிரவு ஆகிவிட்டதால் காங்கிரஸ் எம்.பி.க்களில் சுமார் 20 பேர் பாராளுமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் புறப்பட்டுச் சென்றனர். இதன் காரணமாக லோக்பால் மசோதாவுக்கு சட்ட அந்தஸ்து கிடைக்காமல் ஓட்டெடுப்பில் தோல்வி ஏற்பட்டது.

காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் சபையில் இருந்திருந்தால் லோக்பால் மசோதாவுக்கு அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து கிடைத்து இருக்கும். எனவே ஓட்டெடுப்பு நடந்தபோது சபையில் இல்லாத எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டவிசாரணையில் சுமார் 20 காங்கிரஸ் எம்.பி.க்கள் கொறடா உத்தரவை மீறி சபையில் இருந்து வெளியேறி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீசு அனுப்பியுள்ளது. எம்.பி.க்கள் விளக்கம் கொடுத்த பிறகு உரிய நட வடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி தெரிவித்தார்.

ரஷியாவில் நில நடுக்கம்

மாஸ்கோ, டிச. 28-
ரஷியாவின் தென்கிழக்கில் உள்ள கிஸில் பகுதியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவாகி இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சில கட்டிடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது.

Monday, December 19, 2011

ஜப்பானில் 10வது மாடியிலிருந்து தந்தையினால் தூக்கி வீசப்பட்ட குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்!

ஜப்பானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து வெளியே வீசப்பட்ட குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. குழந்தையை வீசிய தந்தை கைது செய்யப்பட்டார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10வது மாடியில் வசிப்பவர் ஷிங்கோ ஹஷிமோட்டோ (37). மனைவி, 4 வயதில் மகள், ஒரு வயதில் மகன் உள்ளனர். மனைவியும், மகளும் நேற்று வெளியே சென்றிருந்தனர்.
ஷிங்கோவும், ஒரு வயது குழந்தையும் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது குழந்தை அழுததால் எரிச்சல் அடைந்த ஷிங்கோ பால்கனிக்கு தூக்கி வந்து அதன் கழுத்தை நெரிக்க முயன்றார். அதே வேகத்தில் குழந்தையை வெளியே வீசினார்.
10வது மாடியில் இருந்து வீசப்பட்ட குழந்தை கீழே சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த புதரில் விழுந்தது. லேசான சிராய்ப்பு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.

பின்பு அவரே பொலிஸிற்கு தகவலும் தெரிவித்தார். பின்பு பொலிசார் அவரை கைது செய்தனர்.
அதிக வேலைப்பளு காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது

18வது வயதை பூர்த்தி செய்த உலகின் மிக குள்ளமான பெண்!

உலகின் மிகச் சிறிய பெண்ணாக ஜோதி என்பவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆம் இன்று தான் அவர் தனது 18 வயதைப் பூர்த்தி செய்துள்ளார். இவரின் உயரம் 23½ இஞ்சி ஆகும். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற மகிழ்ச்சியுடன் இருந்த ஜோதி சிலிர்ப்புடன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, உலகின் மிகச் சிறிய பெண்ணாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக இருந்த கனவு நனவாகியுள்ளது. பெரிய சிரிப்புடன் ஜோதியின் பெற்றோர்களான Richard Grange, Barcroft ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், அவள் தன்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் இன்றைய தினம் கொண்டாடினாள்

Saturday, December 17, 2011

நகராட்சியின் செயல்பாடுகள் - மக்கள் எண்ணம்

கீழக்கரை நகராட்சியின் செயல் பாடுகள்,  சேர்மன் , உதவி சேர்மன் மற்றும் வார்டு உறுப்பினர்களின் நலப்பணிகள் பற்றி  நமது இனையதளம் சார்பாக கீழக்கரை மக்களின் கருத்துக்களை கேட்டோம், அவர்களின் எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்
இபுனு ( ரியல் எஸ்டேட் புரோக்கர்) : கீழக்கரையில் முன்னெப்பொழுதையும் விட நலப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது, சேர்மனே நேரில் சென்று அந்த பணிகளை கவனித்து வருவது ஆரோக்கியமான விஷயம். அது போல் உறுப்பினர்களும் மக்கள் நலனின் கவனம் செலுத்தி வருகிறார்கள், சில உறுப்பினர்கள் தனக்கு உதவியாளர்கள் வைத்து செயல்படுவதை நிறுத்த வேண்டும், அவர்களே நேரில் சென்று கடமை ஆற்ற வேண்டும்
  • எம்.ஐ. சாஹுல் ஹமீது ( சமூக ஆர்வலர்) :  கீழக்கரையின் நலப் பணிகள் சரியான முறையில் நடந்து கொண்டிருக்கிறதாக நினைக்கிறேன். சேர்மனின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது, போக போக பார்க்க வேண்டும், மேலும் எங்களது 18 வது வார்டு மெம்பர் எங்கள் பகுதிகளில் மக்களுக்கான நலப்பணிகளை சிறப்பாக செய்து வருகிறார், தற்பொழுது தெரு விளக்குகள் எல்லாம் எரியும் சூழ் நிலையை ஏற்படுத்தி உள்ளார்.
ஆறுமுகம் தேவர் (முன்னாள் நகராட்சி ஊழியர்) : தற்போது சேர்மன் அம்மா நலப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். எங்கள் பகுதியில் சாலை மேம்படுத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது






சேகு பசீர் அஹ்மது ( சமூக ஆர்வலர்) : சேர்மனின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது அது போல் எங்கள் 19 வது வார்டு மெம்பர் இடி மின்னல் ஹாஜா வெகு சிறப்பாக மக்கள் பணி ஆற்றி வருகிறார். கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு ஏற்படுவது ஆரோக்கியமான விஷயம்தான்
சீனி ( உள்ளூர் வியாபாரி ): சேர்மனின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது, குறிப்பாக வாருகால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கிறது, அது போல் எங்கள் 3 வது வார்டு உறுப்பினர் ரமேஷ் மக்களின் வேண்டுகோளை ஏற்று பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார்.





யூசுப்கான் ( சமூக ஆர்வலர் ): நான் தற்பொழுதுதான் ஊர் வந்தேன், சேர்மனின் செயல்பாடுகள் சரியாக சென்று கொண்டு இருப்பதாக நினைக்கிறேன், எங்கள் 9  வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நலப்பணிகள் சிறப்பாக இருக்கிறது, அந்த வார்டின் உறுப்பினர் துனை சேர்மன்தான், அவரின் பணிகளும் நன்றாக இருக்கிறது

+1 தேர்வில் நபிகள் பெயர் பிழையாக அச்சடிப்பு !மாணவர்கள் ஆவேசம் !

பைரோஸ் கான்ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 அரையாண்டு தேர்வு தமிழ் முதல் வினாத்தாளில் நபிகள் என்பதற்கு பதிலாக நரிகள் என இருந்ததால், பெரியபட்டினத்தில் முஸ்லிம் அமைப்பு மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில் 18வது கேள்வியில் "அபூபக்கருடைய அன்பின் ஆற்றலும், நரிகள் நஞ்சு தீர்த்து அருளியதும்' என்ற கேள்வி இடம் பெற்றது. இதில் நபிகள் என்பதற்கு பதிலாக நரிகள் என பிழையாக இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சிக்கும் ஆவேசத்துக்குள்ளாகினர்.
பெரியபட்டினம் பி.எப்.ஐ., நகர் தலைவர் முகம்மது சலீம், மாவட்ட செயலாளர் அசன் அலி, எஸ்.டி.பி.ஐ.,தொகுதி தலைவர் பைரோஸ் கான் மற்றும் ஏராளமானோர் அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர்.

அங்கு தலைமை ஆசிரியர் இல்லாததால் தமிழாசிரியர் முருகனிடம் நடவடிக்கை கோரி மனு அளித்தனர்.
எஸ்.டி.பி.ஐ., தொகுதி செயலாளர் பைரோஸ் கான் கூறியதாவது:முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், வரலாற்று சம்பவங்களை திரித்துக் கூறும் விதமாகவும் கேள்வி அமைந்துள்ளது. துறை ரீதியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் செல்லம் கூறியதாவது: அச்சுப்பிழையால் இந்த தவறு நேர்ந்தது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கூறி தவறை சரி செய்ய கூறியிருந்தோம். இதை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கண்னாடி வாப்பா அரபிக் கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி – கீழக்கரை நகராட்சி தலைவர் பங்கேற்றார்

தயாளகுண சீலரும், ஈ.டி.ஏ குழும மேலான்மை இயக்குனருமான அல்ஹாஜ். செய்யது சலாஹுதீன் அவர்களின் தந்தையின் நினைவாக கீழக்கரையில் நடத்தப்பட்டு வரும் கண்னாடி வாப்பா அரபிக் கல்லூரி மற்றும் மார்டன் கலாசாலை மாணவர்களுக்கு மதம் தோறும் கல்லூரி நிர்வாகம் சார்பாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அங்கு பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை மற்றும் பயண செலவுக்கான பேருந்துக் கட்டன உதவி தொகை வழங்கும் விழா இன்று (15.12.2011) கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது, இதில் கலந்து கொண்ட நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா அங்கு பயிலும் 106 மாணவர்களுக்கும் இந்த மாதத்துக்கான ஊக்கத் தொகையானதலா ரூ.400 ஐ கல்லூரியின் சார்பாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஹைராத்துல் ஜலாலியா மேல் நிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் சாதிக் , கீழக்கரை வெல்ஃபர் சங்கத்தின் மேலாளர் லியாக்கத் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்

வள்ளல் சீதக்காதி சாலை - சீரமைக்க நெடுஞ்சாலை துறைக்கு நகராட்சி தலைவர் கோரிக்கை.

கீழக்கரையின் முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையை ( மெயின் ரோடு) மேம்படுத்த நகராட்சி முயற்சி செய்து வருகிறது, இதற்கான தீர்மானமும் மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது, கீழக்கரையின் சாலை பணிகளுக்கான நிதி புதிதாக இன்னும் ஒதுக்கீடு செய்யாததாலும், மக்களின் பயனுக்காக தரமான சாலையை உடனே ஏற்படுத்த வேண்டும் என்பதாலும் நேற்று 15.12.2011 அன்று கீழக்கரை நகராட்சி தலைவர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு பால்ராஜை இராமநாதபுரத்தில் நேரில் சந்தித்து கீழக்கரையின் பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலையை சீரமைக்க வேண்டுமாய் கோரிக்கை விடுத்துள்ளார், தேவையான நடவடிக்கையை உடனே எடுப்பதாய் கோட்டப் பொறியாளரும் உறுதி அளித்துள்ளார்

Friday, December 16, 2011

அணை பிரச்சினை குறித்து தமிழக– கேரளா முதலமைச்சர்கள் பேச வேண்டும்– கலாம் யோசனை

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்பட தமிழக, கேரள முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கேட்டுக்கொண்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சைனிக் பள்ளியில் நடந்த விழாவில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு மாநிலங்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் நல்லுறவு, அணை பிரச்னையால் பாதிக்கப்படக் கூடாது' என்றார். முல்லை பெரியாறு அணை குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் நேரில் பேசி, சுமுகமாக பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறு முதலமைச்சர்கள் பேசும் போது, அணையின் பாதுகாப்பு, செலவு, பயன்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். முதல்வர்கள் அளவில், அமைச்சர்கள் அளவில், செயலர்கள் அளவில் என ஏற்கெனவே நூற்றுக்கணக்கான சுற்றுக்கள் பேச்சு வார்த்தை நடத்தி, தொடர்ந்து கேரளா விஷமத்தனமாக நடந்து கொண்டதால், உச்சநீதி மன்றம் போய் தமிழகம் தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்ற நிலையில், மீண்டும் பேச்சு வார்த்தை என கலாம் யோசனை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வள்ளல் சீதக்காதி சாலை - சீரமைக்க நெடுஞ்சாலை துறைக்கு நகராட்சி தலைவர் கோரிக்கை.

கீழக்கரையின் முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையை ( மெயின் ரோடு) மேம்படுத்த நகராட்சி முயற்சி செய்து வருகிறது, இதற்கான தீர்மானமும் மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது, கீழக்கரையின் சாலை பணிகளுக்கான நிதி புதிதாக இன்னும் ஒதுக்கீடு செய்யாததாலும், மக்களின் பயனுக்காக தரமான சாலையை உடனே ஏற்படுத்த வேண்டும் என்பதாலும் நேற்று 15.12.2011 அன்று கீழக்கரை நகராட்சி தலைவர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு பால்ராஜை இராமநாதபுரத்தில் நேரில் சந்தித்து கீழக்கரையின் பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலையை சீரமைக்க வேண்டுமாய் கோரிக்கை விடுத்துள்ளார், தேவையான நடவடிக்கையை உடனே எடுப்பதாய் கோட்டப் பொறியாளரும் உறுதி அளித்துள்ளார்

Wednesday, December 14, 2011

திருமன நிகழ்ச்சிகளில் ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள் - பொது மக்களுக்கு நகராட்சி தலைவர் கோரிக்கை

ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு தடை விதித்து சமீபத்தில் கீழக்கரை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இந்த தடை வரும் ஃபிப்ரவரி 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது, இதை தொடர்ந்து கீழக்கரை நகராட்சி தலைவர் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோள் பின் வருமாறு:


கீழக்கரையில் ப்ளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, மேலும் நமது ஊரில் ப்ளாஸ்டிக் குப்பைகள் கழீவு நீர் பாதைகளை அடைத்துக் கொண்டும், சாலை ஓரங்களிலும் சாதாரணமாகக் காணப்படும், இந்த குப்பைகளை எரிக்கும் போது வெளிவரும் நச்சு வாயு கடுமையான சுகாதாரப் பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.மேலும் பிளாஸ்டிக் மக்குவதற்கு 10 இலட்சம் ஆண்டுகள் வரை கூட எடுக்கின்றது, இந்த பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் மண்ணில் புதைவதால் மழை நீர் நிலத்தில் இறங்குவதை தடுக்கின்றது.ப்ளாஸ்டிக் பொருட்களில் அடங்கியுள்ள பைபீனால்-ஏ, காலேட்டுகள் மற்றும் டயாக்சீன்கள் மிகவும் கேடு விளைவிக்கக்கூடியவையாக கருதப்படுகிறது. ஆகவே இதனை தடை செய்வதற்கான தீர்மானம் நகராட்சியால் கொண்டு வரப்பட்டு வரும் ஃபிப்ரவரி 2 முதல் அமலுக்கு வருகிறது.


மேலும் நமது ஊரில் டிசம்பரில் அதிகமான திருமன நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் , இந்த நிகழ்ச்சிகளில் பளாஸ்டிக் பைகள் மற்றும் பளாஸ்டிக் வாழை இலைகள் போன்ற பொருட்களை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகிறேன், அது போல கீழக்கரையில் கட்டுமான வேலைகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது, இதற்கான கட்டுமான பொருட்கள், மணல் ஆகியவை சாலையோரங்களில் கொட்டப்பட்டு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது, அப்படியான இடங்களில் அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்

Saturday, September 10, 2011

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி ம‌க‌ளிருக்கு ஒதுக்க‌ப்ப‌ட்டால் எதிர்த்து போராட்ட‌ம்! கீழை ஜ‌மீல் அறிக்கை !


கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி ம‌க‌ளிருக்கு ஒதுக்க‌ த‌மிழ‌க‌ அர‌சு முடிவு செய்துள்ள‌தாக‌ உறுதிப்ப‌டுத்த‌ப‌டாத‌ த‌க‌வ‌ல்க‌ள் வெளியாகி வ‌ருகின்ற‌ன.

இது குறித்து இந்திய‌ த‌வ்ஹீத் ஜ‌மாத்தின் முக்கிய‌ பிர‌முக‌ர் கீழ‌க்க‌ரை ஜ‌மீல் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில் ,

இது வரை முறையான அரசு அறிவிப்பு எதுவும் வரவில்லை.தமிழக அரசிடம் அப்படி ஒரு திட்டம் இருக்குமானால் உடனடியாக அதை கைவிட வேண்டும்.மேலும் அதிகமான முஸ்லிம்களை கொண்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்குவது நல்லதல்ல. இது கண்டனத்திற்குரியது. அரசியல் அனுபவம் இல்லாத பெண்களை தலைவர் பொறுப்புக்கு கீழக்கரை போன்ற ஊர்களில் கொண்டு வந்தால் ஊரின் சுகாதாரம் மற்றும் இதர பிரச்னைகள் இன்னும் மோசமாகும். இவர்களின் கு0pடும்பத்தார் கையில் நிர்வாகம் மறைமுக செல்வதுடன் நகராட்சி நிர்வாகம் சீர் கெடும்.

கீழக்கரை நகராட்சி மகளிருக்கு ஒதுக்கப்படும் என்ற அரசு அறிவிப்பு வெளி வருமானால் இதற்கு எதிராக கட்சி, அமைப்புகள் பாகுபாடின்றி கீழக்கரை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடுவோம்.

Thursday, September 8, 2011

ஏர் இந்தியாவுக்காகவிமானங்களை வாடகைக்கு எடுத்ததில் ரூ. 1700 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது- சிஏஜி


ஏர் இந்தியாவுக்காகவிமானங்களை வாடகைக்கு எடுத்ததில் ரூ. 1700 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது- சிஏஜிடெல்லி: ஏர் இந்தியா நிறுவன மறு சீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் மிகவும் தவறான வகையில் கையாளப்பட்டதால் பல ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானங்களை வாடகைக்கு எடுத்ததில் மட்டும் ரூ. 1700 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் புதிய பிரச்சினையாக இந்த ஏர் இந்தியா விவகாரம் உருவெடுக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏர் இந்தியா தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் சிவில் விமானப் போக்குவரத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளது சிஏஜி.

விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தவறான நடவடிக்கைகள் காரணமாக பல கோடி ரூபாய்களை வீணடித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

- ஏர்பஸ் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் தவறானதாக அமைந்ததால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டது.

- ஏர் இந்தியா நிறுவனம் ரூ. 200 கோடி கடன் வாங்கியிருந்தது. ஆனால் அதற்கான வட்டியாக கிட்டத்தட்ட ரூ.314 கோடி வரை திருப்பிச் செலுத்தியுள்ளது. இந்த வட்டி கட்டும் நிலை தொடர்ந்தால் இழப்பு ரூ. 2500 கோடியாக உயரும்.

- விமானங்களை வாடகைக்கு எடுத்தது, லீஸுக்கு எடுத்தது தொடர்பாக ரூ. 1700 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

- ஏர் இந்தியா நிர்வாகம் குறித்த தொலைநோக்குப் பார்வை அமைச்சகத்திடம் இல்லை. இதனால் ஏர் இந்தியா விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பெரும் குளறுபடிகள் நிலவுகின்றன.

இதுபோல பல்வேறு குற்றச்சாட்டுக்களை சிஏஜி கூறியுள்ளது.

நகராட்சி தலைவர் வேட்பாளர் போட்டியில் மாசா அமைப்பின் நிறுவனர் இப்திகார்



இப்திகார்

கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் வேட்பாளராக யார் போட்டியிட போகிறார், கூட்டணி சார்பில் எந்த கட்சி போட்டியிட போகிறது என்ற கேள்விக்கெல்லாம் விரைவில் விடை கிடைத்து விடும். எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை வேட்பாளரை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவி வருகிறது. போட்டியிட விரும்புவோர் ஒவ்வொருவரும் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் வேட்பாளர் போட்டியில் மஹ்தூமியா சமூக நல அமைப்பின் நிறுவனர் இப்திகாரும் இணைந்துள்ளார். மஹ்தூமியா சமூக நல அமைப்பின் மூலம் பல்லாண்டு காலமாக நலப்பணிகளை மேற்கொள்ளும் இவர் சென்னை புதுகல்லூரி மாணவர் பேரவையில் பொது செயலாளராக(1996) பணியாற்றி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்,சமுக சேவையில் ஆர்வமுள்ள இவர் பைத்துமால் முன்னாள் செயலாளர் மறைந்த ஏ.கே.எஸ் கபீர் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. கீழக்கரையின் முதல் பெண்கள் மதரஸா நிறுவியது இவரது தாயாராகும்.

இது ப‌ற்றி அவ‌ர‌து த‌ர‌ப்பு கூறிய‌தாவ‌து,இப்திகாரை வேட்பாளராக போட்டியிட செய்ய‌ முயற்சி நடப்பது உண்மைதான் இறைவனின் கிருபையால் வெற்றி பெற்றால் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொள்வதோடு நின்று விடாமல் சொந்த‌ செல‌வில் ப‌ல்வேறு ந‌ல‌ப்ப‌ணிக‌ளை மேற்கொள்வார் என்பது உறுதி

Wednesday, September 7, 2011

நகராட்சி தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட MMK.மூகைதீன் இப்றாகிம் விருப்ப மனு தாக்கல்


மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பதவிகளுக்கான தேர்தல் அக்டோ பர் மாதம் நடைபெறுகிறது. இந்த பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் அதிமுகவிஅனர் வருகிற 8ஆம் தேதி வரை மனு செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக மாவட்ட நிர்வாகிகளிடம் MMK.முகைதீன் இப்ராகிம் விருப்ப மனு தாக்க்கல் செய்தார்.அவருடன் கிழக்கரை நகர் அதிமுகவினர் உடனிருந்தனர்

கீழைக்கரை நகராட்சி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி



கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு அனைத்து ஜமாத் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது ,கீழக்கரை நகராட்சியில் 11 ஆயிரத்து 788 பெண் வாக்காளர்கள் உள்பட 23 ஆயிரத்து 202 வாக்காளர்கள் உள்ளனர்.தற்போது நகராட்சியில் திமுக நகர செயலாளர் பசீர் அகமது தலைவராக உள்ளார். இதில் திமுக கவுன்சிலர் 5,சுயேச்சைகள் 12,அதிமுக 1,காங்கிரஸ் 1 மேலும் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.










நகராட்சி தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் கீழக்கரை நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து அரசியல் கட்சினரும் தயராகி விட்டனர்.




இந்நிலையில் அனைத்து ஜமாத் சார்பாக பொது வேட்பாளராக தொழில் அதிபர் சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர் அல்லது தொழில் அதிபர் உமர் அப்துல் காதர் ஆகியோரில் ஒருவரை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது .




இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம்,முன்னாள் அதிமுக நகர செயலாளர் இம்பாலா உசைன், நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சியான சமக சார்பில் பந்தே நவாஸ் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.




அதிமுகவின் கூட்டணி கட்சியான தமுமுக சார்பிலும் தொழிலதிபர் நல்ல முகம்மது களஞ்சியத்தை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.




திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் மூர் டிரவலஸ் ஹசனுதீன் மற்றும் கவுன்சிலர் ஹமீதுகான் போட்டியிடுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.இன்னும் சிலரும் முயல்வதாக கூறப்படுகிறது.




விரைவில் வேட்பாளர்கள் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிகிறது. கீழக்கரை மக்கள் மிகுந்த உன்னிப்புடன் நிகழ்வுகளை கவனித்து வருகிறார்கள் பலர் பல கணக்கு போட்டாலும் கீழக்கரை மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன், நகரின் முக்கிய பிரச்சினையான சுகாதாரம்,குடிநீர் ,சாலை வசதிகள் ,தனி தாலுகா,கீழக்கரைக்கென்று ஒரு தொழிற்சாலை போன்ற பல் வேறு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களில் கீழக்கரை நலனை யார் முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்படுவாகளோ அவர்களுக்கே இம்முறை வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



Thursday, July 14, 2011

செய்திகள்

கான்கிரீட் கற்களை மார்பின் மீது உடைத்து உலக சாதனைஜார்ஜ் என்பவர் 30 இன்ச் நீளமுள்ள முள்படுக்கையில் தூங்கி அவர் மார்பகத்தின் மீது 1380 பவுண்ட்ஸ் எடையுள்ள கான்கிரீட் கற்களை உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்







செய்திகள்

கீழக்கரை இன்று மின்தடை
இன்று மின்தடை
கீழக்கரை, ஜூலை 13:
ரெகுநாதபுரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே இன்று காலை 9மணி முதல் மாலை 4மணி வரை ரெகுநாதபுரம், பெரியபட்டிணம், காரான், கும்பரம், தினைக்குளம், வண்ணாங்குண்டு, தெற்குகாட்டூர், களிமண்குண்டு, நயினாமரைக்கான், பள்ளபச்சேரி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் பாண்டியன் தெரிவித்தார்.

Tuesday, June 28, 2011

செய்திகள்






இறந்து போன மனைவியுடன் தூங்கும் கணவர்June 26, 2011

வியட்நாமைச் சோ்ந்த Le Van என்பவர் அவருடைய மனைவி இறந்த பிறகு மனைவியின் கல்லறை மேல் தூங்கி வந்தார். 55 வயது மதிக்கதக்க Le Van 2003 ம் ஆண்டு அவருடைய மனைவியை இழந்தார்.

2004 ம் ஆண்டு வரை மனைவியின் கல்லறையில் தூங்கி வந்தார். இரவில் மனைவி இல்லாமல் அவரால் தூங்க முடியவில்லை மற்றும் கல்லறைக்கு வெளியே காற்றும் மழையும் அதிகமாக இருந்த காரணத்தால், அவர் கல்லறையில் சுரங்கம் அமைக்க முடிவு செய்தார்.

பின்பு அவருடைய மனைவியை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து காகிதம் மற்றும் களிமண்வார்ப்புகளை வைத்து போர்த்தி முகத்தின் மேல் ஒரு முகமுடி போட்டு மூடி வைத்து வீட்டில் தூங்க வந்துள்ளார்

செய்திகள்


முகத்தில் பாதி முடியால் மூடப்பட்ட சிறுவன்
June 26, 2011

வயது எட்டு. இவர் ஒரு அபூர்வமான பிரச்சினையால் பாதிக்கப்படவர்.

இவரின் முகத்தில் ஒரு பகுதியில் கண்ணையும் மூடியவாறு கண்ணப் பகுதிவரை முடி வளருவதுதான் இவருக்கு இருந்த பிரச்சினை.

பிறப்பு முதலே இது காணப்பட்டது. நாள் செல்லச் செல்ல பிரச்சினையும் முற்றியது. பாடசாலையில் இவரை சக மாணவர்கள் கேலி செய்யாத நாட்களே இல்லை.பல பட்டப் பெயர்களும் உள்ளன.


இந்தச் சிறுவன் நான்கு வயதாக இருக்கும் போதே தந்தை மரணமாகி விட்டார். தாய் ஒரு மனநோயாளி. பாட்டன், பாட்டி தான் இவரைப் பராமரித்து வருகின்றனர்.

இவரின் நிலைமை கேள்வியுற்று அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹுவாங் என்ற பெண் மனநோய் மருத்துவ நிபுணர் இவருக்கு உதவ முன்வந்துள்ளார்.

இவரின் முயற்சியின் பலனாக ஜிலின் மாகாண பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை ஆஸ்பத்திரியில் இவருக்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இவரின் நிலைமையில் மாற்றங்கள் ஏற்படும் என்று டாக்டர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்

செய்திகள்


முழு மூச்சுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்!' : ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் பத்மினி: என் அப்பா, வங்கி அதிகாரி; அம்மா, பள்ளி ஆசிரியர். படிப்பிற்காக, சொந்த ஊரான சேலத்தில் இருந்து, சென்னைக்கு வந்தேன். பி.காம்., முடித்தவுடன் திருமணம். கணவர்,போக்குவரத்து துறையில் பணிபுரிகிறார். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.குழந்தைகள் பள்ளி சென்ற பின், அதிக நேரம் கிடைத்தது. தொழில் துறை ஏதேனும் ஒன்றில் சாதிக்க விரும்பினேன். என் ஆசையை புரிந்து கொண்ட கணவர் உற்சாகம் அளிக்க, சார்ட்டட் அக்கவுன்ட் கோர்சை முடித்தேன். பின், பல நிறுவனங்களின் கணக்குகளை நிர்வகித்தேன்.ஒரு நாள், என் உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, ஏவியேஷன் துறை சவாலாக இருக்கும் என்பது தெரிந்தது. சென்னையில், நான்கு நிறுவனங்கள் மட்டுமே இத்தொழில் செய்து வருவதால், இந்த தொழிலில் அவருடன் இணைந்து செயல்பட திட்டமிட்டேன்.துவக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம். ஓரு கட்டத்தில், வாங்கிய ஹெலிகாப்டர்களை விற்று விடலாம் என்ற நிலை வந்தது. ஆனால், வேறு சில தொழில்களின் மூலம் வந்த வருமானத்தையெல்லாம், இதில் முதலீடு செய்தேன்.தற்போது, என் நிறுவனத்தில், ஐந்து ஹெலிகாப்டர்கள் உள்ளன. இன்னும், குட்டி விமானங்கள் வாங்குவதுடன், புதுச்சேரியில் ஒரு ஹெலிபேட் அமைக்கும் திட்டமும் உள்ளது.எங்கள் ஹெலிபேடை, வெளிநாட்டவர்கள் மட்டுமின்றி, பிசினஸ் மேன்கள், வி.ஐ.பி.,க்கள் என பலரும், இந்தியாவின் பல நகரங்களுக்கு சென்று வரவும், சினிமா மற்றும் விளம்பர படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.இந்த நிறுவனத்தின் முலம், ஆண்டிற்கு மூன்று கோடி வரை வருமானம் வருகிறது. எவ்வளவு கோடி முதலீட்டில் தொழில் துவங்கினாலும், முழு மூச்சோடு, கடுமையாக உழைத்தால், தரையிலும் சரி, வானத்திலும் சரி, பெண்கள் கொடிக்கட்டிப் பறக்கலாம்.

Friday, June 24, 2011

செய்திகள்

வேதனை தான் வாழ்க்கையானது என்றாலும் சாதனையே லட்சியம்: இந்த ஏழை உள்ளம் படிக்க உதவுங்கள்




ராமநாதபுரம்: தந்தையின் மரணம்; தாயாரால் வேலை செய்ய முடியாத நிலை. தாங்க முடியாத தலைவலி. இத்தனையையும் தாங்கி, வாழ்வில் முன்னேற துடிக்கும் இவரது கல்விக்கு தடையாக வந்து நிற்கிறது ஏழ்மை. இதையெல்லாம் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார், பத்தாம் வகுப்பில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாரிச்செல்வம்.



ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டிணம் அருகே உள்ள களிமண்குண்டு பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் மாரிச்செல்வம். முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலை பள்ளியில் பயின்ற, இவர் 10ம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண் பெற்று ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். மாரிச்செல்வம், அக்கா முருகவள்ளி வீட்டில் தங்கி இருந்து முத்துப்பேட்டையில் படித்து வந்தார். கடந்த நவம்பரில் முனியசாமி மூளைகட்டி நோயால் இறந்தார். கடந்த ஏப்.,4 ல் முருகவள்ளியும் இறந்தார். அடுத்தநாள் கணக்கு பரீட்சை. இதயம் முழுக்க சோகத்துடன், ஆனால் மனஉறுதியுடன், வேறுவழி இல்லாமல் தேர்வு எழுதிவிட்டு, அக்காவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். அந்த கணித தேர்வில் மாரிச்செல்வம் பெற்ற மதிப்பெண் 100 க்கு 100.



தற்போது அதே பள்ளியில் பிளஸ் 1 பயிலும் இவர் கூறியதாவது: எனக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. டாக்டரிடம் காண்பித்தபோது, இருதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் ரத்த குழாய் சுருங்கியுள்ளது. தற்போது ஆப்பரேஷன் செய்ய முடியாது. 22 வயதுக்கு பிறகு செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டார். அம்மாவோ அடிக்கடி கால்வலியால் அவதிப்படுகிறார். குறித்த நேரத்தில் பஸ் இல்லாததால், வேலாயுதபுரத்திலிருந்து பள்ளிக்கு ஆம்னி வேனில் செல்ல மாதம் 400 ரூபாய் செலவாகிறது. அதை கூட செலுத்த முடியாமல் அவதிப்படுகிறேன். தற்போது சீருடைக்கு 3,000 ரூபாய் செலவாகியுள்ளது. என்னுடைய அக்கா யாரும் படிக்கவில்லை. எனவே, நான் நன்றாக படித்து அவர்களுக்கு உதவுவேன். படிப்பு செலவிற்கு பணமின்றி தவிக்கிறேன், என்றார். உதவி செய்ய விரும்புவோர் 91592 43229ல் தொடர்பு கொள்ளலாம்.

செய்திகள்

டீஸல்,கேஸ், கெரசின் விலை உயர்வு: ஜெயலலிதா கடும் கண்டனம்


சென்னை: டீஸல், கேஸ், கெரசின் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

மத்திய அரசு டீசலுக்கான விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாயும் மற்றும் மண்எண்ணெய் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் நள்ளிரவு முதல் உயர்த்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி விட்டதால், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது உயர்த்தி வருகின்றன. பெட்ரோல் விலை ஏற்றம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீருந்துகள் (கார்) ஆகியவைகளைப் பயன்படுத்தும் நடுத்தர வர்க்க மக்களை பாதிக்கிறது.

ஆனால், டீசல் விலை உயர்வு, ஏழை, எளியோர் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதிக்கும். சரக்குகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பெரும்பாலும் தரை வழியாக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. டீசல் விலை ஏற்றத்தினால் சரக்கு போக்குவரத்திற்கான கட்டணம் பல மடங்கு உயரும்.

இது, அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக, ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதித்து விடும். விலைவாசி உயர்வினால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த டீசல் விலை உயர்வினால் அனைத்துப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் உயர்ந்து விடும்.

மக்களின் வருவாய் உயராமல் விலை மட்டும் உயர்ந்தால் எப்படி?

மக்களின் வருவாய் ஒரே அளவில் இருக்கும் நிலையில், இது போன்ற டீசல் விலை உயர்வால் ஏற்படும் விலைவாசி உயர்வை மக்களால் எப்படி எதிர் கொள்ள இயலும்? அனைத்து தரப்பு மக்களும் எரிபொருளாக பயன்படுத்தும் சமையல் எரிவாயுவும் சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வளவு அதிகமான விலை உயர்வை மக்களால் தாங்க இயலாது. ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மண்எண்ணெய் விலையும் லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாகும். ஒட்டு மொத்த விலைவாசி உயர்வு உள்ள இந்த நிலையில், இந்த மண்எண்ணெய் விலை ஏற்றம் ஏழை, எளிய மக்களை மிகவும் வாட்டி வதைக்கும்.

மதிப்புக் கூட்டு வரியை குறைக்க முடியாது

எனவே, டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணெய்க்கான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன். டீசல் மீதான கலால் வரி 2 சதவீதம், கச்சா எண்ணெய் மீதான சுங்க வரி 5 சதவீதம் என சொற்ப அளவில் கலால் மற்றும் சுங்க வரி குறைக்கப்பட்டு, அதைப் போன்று மாநில அரசால் விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு, மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக அதிகம் செலவிடுவது மாநில அரசுதான். மாநில அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது மதிப்பு கூட்டு வரி மட்டும்தான். எனவே, டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை மிக அதிகமாக உயர்த்தியுள்ள மத்திய அரசுக்கு, வரியைக் குறைக்கும்படி மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்

Thursday, June 23, 2011

song

செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகரிக்கும் கொலைகள்- மக்கள் பீதி
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

முன்விரோதம், கட்டபஞ்சாயத்து, கள்ளக் காதல், தொழில் போட்டி என பல்வேறு காரணங்களால் கொலைகள் அரங்கேறுகின்றன. பழிக்கு பழி, சாதி உணர்வு மக்கள் மனதில் வேறுன்றி வி்ட்டதால் கொலையாளிகள் சிறைக்கு சென்று விட்டு ஜாமீனில் வரும் வரை காத்திருந்து பகையை தீர்த்து கொள்கின்றனர்.

ஒருவர் கொல்லப்பட்டால், அவரைக் கொன்றவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். இது இப்படியே தொடர் கதையாக மாறுவதால் கொலைகளுக்குப் பஞ்சமே இல்லாத நிலை ஏற்படுகிறது.

ஓசிக்கு பீடி தர மறுத்தவர் வெட்டிக் கொலை, கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் கொலை என அற்ப காரணங்களுக்காக கூட கொலை செய்யப்படுகிறார்கள்.

கடந்த இரு மாதத்தில் மட்டும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. மே 1ம் தேதி தூத்துக்குடி மாவட்ட திமுக துணை செயலாளர் ஏசி அருணா வாக்கிங் செல்லும்போது வெட்டி கொல்லப்பட்டார்.

கடந்த 9ம் தேதி கயத்தாறு அருகே செட்டிக்குறிச்சியில் அண்ணியுடன் கள்ள தொடர்பு வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டம்பாறை அருகே உள்ள செட்டியூரில் நடத்தை சந்தேகத்தில் பிரேமா என்பவரின் தலையில் கல்லை போட்டு அவரது கணவரே கொலை செய்தார்.

2ம் தேதி பாளையங்கோட்டை ரகுமத்நகரை சேர்ந்த ராமையா என்பவர் தாழையுத்தில் குடிபோதையில் ஒரு வீட்டு முன் படுத்திருந்தபோது கழுத்தில் மிதித்து கொல்லப்பட்டார்.

4ம் தேதி தாழையுத்து சாலுன் கடையில் வைத்து பாபு என்பவர் முன்விரோதம் காரணமாக கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். அதே நாளில் சங்கரன்கோவில் எழில் நகரை சேர்ந்த செல்லையா என்பவரது மனைவி அய்யம்மாள் நகைக்காக படுகொலை செய்யப்பட்டார்.

5ம் தேதி கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளத்தில் ஆட்டோ டிரைவர் மாரியப்பன் அடித்து கொல்லப்பட்டார். நெல்லை ரயில் நிலையத்தில் அல்வா வியாபாரம் செய்த பிச்சையா என்பவர் தொழில் போட்டி காரணமாக அருகன்குளத்தில் வைத்து வெட்டி சாய்க்கப்பட்டார்.

13ம் தேதி மானூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது கள்ளகாதலியால் தலையில் கல்லை தூக்கி போட்டு கொல்லப்பட்டார்.

வீரவநல்லூரில் நேற்று முன்தினம் இரவு திமுக நகர செயலாளர் ரத்தினவேல் பாண்டியன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தை பொறுத்த வரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு அதிக கொலை நடந்துள்ளதாக புளளி விபரங்கள் கூறுகின்றன.

கொலைகளைத் தடுக்கவும் குற்றச் செயல்களைக் குறைக்கவும் காவல்துறை இரும்புக் கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Wednesday, June 22, 2011

செய்தி

விமானி உடல் நலம் பாதிப்பு: ப.சிதம்பரம் ஹெலிகாப்டர் தரையிறக்கம்
ஸ்ரீநகர்: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயணித்த ஹெலிகாப்டரை ஓட்டிய விமானிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வேறு ஹெலிகாப்டரில் ப.சிதம்பரம் பின்னர் பயணித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் ப.சிதம்பரம். இன்று அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில், பஹல்காம் என்ற இடத்திலிருந்து குரஸ் என்ற இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்லத் திட்டமிட்டு பயணித்தார்.

அப்போது ஹெலிகாப்டர் தான் செல்ல வேண்டிய பாதைக்குப் பதில் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்ததால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டு அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பாதையில் மாற்றம் ஏற்பட்டதால், அமைச்சரின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டர் மாற்றப்பட்டது. வேறு ஹெலிகாப்டர் மூலம் அமைச்சர் புறப்பட்டுச் சென்றார் என்றனர்

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்-மீன்பிடிப்பு ஸ்தம்பிப்பு
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 23 ராமேஸ்வரம் மீனவர்களை மீட்கக் கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று காலைவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

திங்கள்கிழமை இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேரையும், அவர்களது 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்று விட்டனர். அவர்களை தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் மன்னார் கோர்ட்டில் ஆஐர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை தற்போது அனுராதபுரம் சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இன்று அந்தப் போராட்டம் தொடங்கியது. இதனால் கிட்டத்தட்ட 1000 விசைப்படகுகளும் மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கு நிரந்தர முடிவு கட்ட மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மீனவர்கள் கோருகின்றனர்.

கோட்டைப்பட்டனத்திலும் போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாக கோட்டைப்பட்டனம் பகுதியிலும் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.

Tuesday, June 21, 2011

Wednesday, June 15, 2011

எனக்கு பிடித்ததளங்கள்

தமிழில் போட்டோசாப்,வின்மணி,சுதந்திர இலவச மென்பொருள்,தமிழ்தோட்டம்,தமிழில் கம்ப்யூட்டர் பாடம்.

anaivarukkum vanakkam

அனைவருக்கும் வணக்கம்